Thursday, December 13, 2012


புதிதாக XP நிறுவிய பின்னர்?



எத்தனை இயங்குதளம் புதிதாக மனம் மயக்கும் வடிவமைப்பில் வெளிவந்தாலும் XP போல வரவே வராது. காரணம், எளிமையான இடைமுக வடிவமைப்பு, பாதுகாப்பு, மற்றும் மாற்றங்கள் செய்வதில் எளிமை ஆகிய அனைத்து அம்சங்களும் தன்னுடன் XP கொண்டுள்ளது தான். இவ்வளவு நாள் விண்டோஸ் செவென் பயன்படுத்தி வந்தேன். XP இயங்குதளத்தினைப் பிரிந்து இருக்க முடியாததால் மீண்டும் வந்து விட்டேன்.
குறைந்த பட்ச கணினி அமைப்பு தேவைகள் இருந்தால் போதும். வன்தட்டில் இதன் பிரிவிற்கு அதிக பட்சமாக 30 GB ஒதுக்கினாலே போதும்.

நானும் இயங்குதளத்தினை நேற்று தான் நிறுவினேன். நிறுவிய பின்னர் செய்ய வேண்டிய வேலைகளை செய்யும் போது தான் தோன்றியது. பலரும் தமது கணினியில் புதிதாக இயங்குதளத்தினை நிறுவியவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து ஏதேனும் நிரல்கள் இருந்தால் தருமாறு கேட்பார்கள். என்னவென்ன மென்பொருட்கள் எல்லாம் வேண்டும் என்று கேட்டால் என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொண்டு செல்லக் கேட்பார்கள். அதாவது, அவர்களுக்கு என்னத் தேவை என்று அவர்களுக்கே தெரியாது.

இயங்குதளத்தினை தான் பணம் கொடுத்து வாங்கிவிட்டோம். இதர மென்பொருட்களுக்கும் பணம் செலவழிக்க வேண்டியது இல்லை. பெரும்பாலும் பல இலவச மென்பொருட்கள் சன்மானம் கேட்கும் மென்பொருட்களிற்கு இனையாக வேலை செய்கின்றன.

சரி, இயங்குதளத்தினை நிறுவியாயிற்று, இப்போது என்ன செய்ய வேண்டும்?


இப்போதே இனையத்துடன் இனைத்துவிடாதீர்கள். அதற்கு முன் கணினியினை பல பரிமானங்களில் தயார்படுத்திக்கொள்ளலாம்.

முதலில், உஙகள் கணினியின் தலையாய கருவியான MotherBoard-ற்கான இயக்கி நிரல்களை நிறுவிக்கொள்ளுங்கள். முடிந்த வரையில் சமீபத்தய இயக்கிகளை தரவிறக்கிக்கொள்ளலாம்.

அழகு. பார்க்க அழகாக இருந்தால் கணினியினை ஒரு அன்போடுப் பார்க்கத்தோன்றும். பலருக்கு ஏற்கனவே இருக்கும் XP சூழல் படித்திருக்கும். மேலும் அழகு வேண்டும் என்று என்னுபவர்கள், royale noir என்ற சூழலை தரவிறக்கி உபயோகிக்கலாம். UXTheme என்ற நீட்சி இருந்தால் தான் நாம் அதிகப்படியான சூழல்களை நிறுவ முடியும் என்பதை கவனிக்க.

இப்போது, அடிப்படை அமைப்புகள் பற்றிப் பார்ப்போம்.

திட்டமுறையில் இனைய இனைப்புப் பெற்றவர்கள் தானாக இயங்குதளம் புதுப்பித்தலைத் தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது மைக்ரோசாஃப்ட் இனையதளம் சென்று Critical என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நிரல்களை மட்டும் நிறுவிக்கொள்ளலாம். இவை தான் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியாமான பாதுகாப்பு புதுப்பிப்புகள்.

பின்னர் Autorun வசதியினை விரும்பாதவர்கள் அதனையும் அனைத்துவிடுங்கள். இணையத்தை அடுத்து பெரும்பாலும் வைரஸ் Autorun மூலமாகவே பரவகின்றன. அதனால் இந்த வசதி உபயோககரமாக இருப்பினும் தவிர்ப்பது நல்லதே.

இப்போது, இலவசமாக கிடைக்கப்பெறும் மென்பொருட்களில் பயனுள்ளவை எவை என்றுக் காண்போம்.

1. பெரும்பாலான மீடியா வகைகளை கையாளும் திறன் கொண்ட ஒரு மீடியா இயக்கி. நாம் பரிந்தரைப்பது VLC அல்லது Kantaris ஆகியன.

2. ஆவணங்களை ஆக்க, திருத்த ஒரு நல்ல ஆவண திருத்தி: நாம் பரிந்துரைப்பது Open Office

3. பாதுகாப்பிற்கு ஒரு Firewall மற்றும் ஒரு AntiVirus நிரல்கள்: நாம் பரிந்துரைப்பது COMODO firewall மற்றும் Avira Antivirus.

4. உயர்துல்லிய காணொளிகளைக் கண்டு மகிழ Splash காணொளி இயக்கி போல ஏதும் இல்லை என சொல்லலாம்.

5. Foxit Reader நி ரல் pdf கோப்புகளைத் திறந்துப் படிக்க.

6. படங்களையும், காட்சிகளையும் பார்க்க, திருத்த IrfanView

7. இணையத்தில் மீடியா இயங்க : ShockWaveQuickTime Alternative,MediaPlayerSilverlightjava (Firefox), ஆகியன.

8. Unlocker நிரல் எந்த கோப்பினையும் முடக்கி அழிக்க உதவும்.

9. MediaCoder நிரல் காணொளிகளை அலைபேசிகளுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ள உதவும்.

10. 7ZIP நிரல் WinRar நிரலுக்கு இனையான சேவைகளைத் தரும் ஒரு இலவச நிரல் ஆகும்.

11. Daemon tools lite : குறுந்தகடுகளை உருவாக்கவும், பிம்பங்களை உருவாக்கவும் உதவும்.

12. தகவல்களை வேகமாக நகலெடுக்க, அல்லது நகர்த்த தேவை:SuperCopier. நிகழ் நேரத்தில் சில கோப்புகளை இனைத்தல் அல்லது நீக்குதல் போன்ற பல அமசங்களைக் கொடுள்ளது.

13. Firefox மற்றும் Opera ஆகிய உலாவிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

Antivirus மற்றும் Firewall நிரல்களை நிறுவும் முன் மற்ற நிரல்களை நிறுவிக்கொள்வது நல்ல பழக்கம். மற்ற நிரல்களை நிறுவும் போது வேகமாகவும், தடை ஏதும் இல்லாமல் இருந்திட உதவும்.

No comments: