Sunday, October 7, 2012


அவருக்கு முடியலை..அதிகரிக்கும் ‘கவலை’ மனைவிகள்!

கணவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் விரதம் இருந்து வேண்டுதல் நிறைவேற்றும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் அலகு குத்தி காவடி எடுப்பதில்லை. ஆனால் அடிக்கடி முடியாமல் போகும் கணவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு கவலைப்படுகின்றனர்.
இன்றைய நாகரீக உலகில் முறையான உணவுப் பழக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு உற்பத்தி மற்றும் வேலைப் பளு போன்ற பல காரணங்களால் மனிதர்களின் உடலில் நோய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
தங்களுடைய கணவரின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை குறித்து பத்தில் எட்டுப் பெண்கள் பெரிதும் கவலையடைந்து வருவதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள காப்பீடு நிறுவனம் 3000 பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 50 விகிதம்பேர் தங்களின் துணைவர்கள் பெருத்த தொந்தியுடைவர்களாக காணப்படுவதால் தாம் கவலையடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். 37 சதவிகிதம் பேர் தங்களது கணவனின் அதிக எடை குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளனர்.
ரொம்ப உழைக்கிறார்
தமது துணைவர்களின் அலுவலகங்களில் வேலைப் பளு, உறக்கமின்மை, போதிய உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுகளை உட்கொள்ளல் போன்றன மனைவியர்களின் பிரதான கவலைக்குரிய விசயங்களாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களது அலுவலகங்களில் தங்களது கணவர்மார்களுக்கு அதிகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
நான்கில் ஒரு சதவிகித பெண்கள் கொழுப்பு மிக்க உணவுகளை தமது ஆண்கள் அதிகமாக உட்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமற்ற சூழல்
பெரும்பான்மையான பெண்கள் தமது கணவர்களின் உடற்பயிற்சி முதல் சமநிலையான வாழ்க்கை வரை கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
31 சதவீதமான பெண்கள் தங்களது கணவர்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லையென தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமற்ற முறையில் தொழில் புரிவதாக அதிக எண்ணிக்கையான பெண்கள் விமர்சித்துள்ளனர். 26 வீதமான ஆண்கள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை உண்பதாகவும், 23 சத வீதமானவர் முறையான உறக்கம் கொள்வதில்லை எனவும், 19 சதவீதமானோர் உணவை புறக்கணிப்பதாகவும் மேலும் 19 சதவீதமானோர் அதிகமாக மது அருந்துவதாகவும் அவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர்.
பத்து சதவீதமான பெண்கள் தமது கணவர் அலுவலக வேலைகளை வீட்டிலும் வந்து செய்வதால் அவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
இந்த பொம்பளைங்களே இப்படித்தான் பாஸ், ரொம்ப பாவம்ஸ்!

முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்

காதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
முத்தத்தில் வித்தியாசம்
ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.
இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்”. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.
முத்தத்தில் வேறுபாடு
பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.
முத்தத்திற்கு மரியாதை
ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.
அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.
என்ன உங்கள் துணைக்கு ஆழமான முத்தம் கொடுக்க தயாராகிவிட்டீர்களா?

கர்ப்பகால பராமரிப்பும் உணவூட்டமும்

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின் வளர்ச்சியுடன்
இணைந்த புதிய சூழ்நிலைக்கு அப்பெண் தன்னைத் தானே ஆயத்தாமாக்கிக் கொள்வது தாய் சேய் இருவரின் உடல்நலனுக்கும் மிக இன்றியமையாததாகும்.

ஒரு பெண் கருவுறும்போது, அவள் உடலில் ஹார்மோன்கள் பல சாதகமான விளைவுகளை உண்டாக்கினாலும் அவளது உடலியல் தேவைகளும் அதிகமாகின்றன. கருப்பையில் வளரும் சிசுவின் தேவைகள் அதிகரிப்பதால், இதயம், கல்லீரல் போன்ற இன்னும் பல முக்கிய உறுப்புகளின் வேலைப் பளு அதிகரிக்கிறது.

தவறான போஷாக்கு, நல்வழித் தேவைகளைப் புறக்கணித்தல், மிகையான உளைச்சல், பாதகமான சூழ்நிலைகள் ஆகியவற்றினால் உடலின் சாதாரணமான பணிகள் பாதிக்கப்பட்டு, கருவளர்ச்சியில்
சிக்கல்கள் தோன்றலாம்.

கர்ப்பத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான நியதிகள்.
ஓரளவான உடற்பயிற்சியுடன், நல்ல மனப்பாங்குடனும் இருத்தல் வேண்டும். இவை கருவின் மீது சாதகமான விளைவை உண்டாக்குகின்றன. வேலை செய்வதன் மூலம் நரம்பு மற்றும் இரத்த உற்பத்தி, சுவாசத்தொகுதி ஆகியவற்றின் பணிகள் ஊக்குவிக்கப்பட்டு அவளது வளர்சிதை மாற்றமும் சீரடைகின்றது. சோர்ந்து போய் படுத்திருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் ஆகியவை உடல் பருமன் அதிகரித்தல், மலச்சிக்கல், தசைகளின் தளர்ச்சி, பிரசவத்தின் போது கருப்பையின் மந்தநிலை ஆகியவற்றை உண்டாக்குகின்றன.

கனமான பொருட்களைத் தூக்குதல், அதிகமாகக் குதித்தல், மிகையான உடற்களைப்பு ஆகியவற்றைக் கருவுற்றிருக்கும் பெண் தவிர்க்க வேண்டும். அத்துடன் அதிகமான தட்பவெப்ப நிலைகள், இரசாயனப் பொருட்களின் விளைவுகளுக்கு உட்படுதல் ஆகியவையும் தவிர்க்கப்படுதல் வேண்டும். இல்லையெனில், கருவிலிருக்கும் சிசு பாதிக்கப்பட நேரிடலாம்.
கால்களினால் இயக்கப்படுகின்ற தையல் பொறியை இயக்குதல், சைக்கிள் ஓட்டுதல், குதிரைச்சவாரி போன்ற உடலைக் குலுக்கும் பணிகளும், மிகையான பிரயாசையுடன் உள்ள விளையாட்டுக்களும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஓய்வான நேரங்களில் கர்ப்பிணி சிறிது நேரம் உலாவச் செல்லலாம். இது நீண்ட நேரமாகவோ, அசதியை உண்டாக்கும் படியாகவோ இருக்கக் கூடாது. நடந்து செல்லுதல் கர்ப்பிணிகளின் மனோ நிலைகளுக்கும், உடற்பணிகளுக்கும் இதமளிக்கின்றது. காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில் நீண்ட நேரம் தங்கியிருப்பதானது, கருப்பை உட்சிசுவிற்கு உயிர்வளி (Oxygen) வினியோகத்தை ஊக்குவிக்கின்றது.

கருவுற்றிருக்கும் ஒரு தாய் ஒரு நாளைக்குக் குறைந்தது தினமும் 8 மணி நேரங்களாவது தூங்கவேண்டும். இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கக் கூடாது. ஏனெனில், கர்ப்பத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு மேற்குறிப்பிடப்பட்ட குறைந்த பட்ச உறக்கம் அவசியமாகின்றது. கர்ப்பிணி தனது வலது பக்கமாகவோ அல்லது மல்லாந்தோ படுத்திருப்பது நல்லது.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலும் உடலுறவைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், உடலுறவின் போது ஊக்குவிக்கப்படும் குருதி வினியோகமும், கருப்பையின் கிளர்த்தலில் ஏற்படும் மாற்றங்களும் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதேபோல், கர்ப்பத்தின் கடைசி இரண்டு மாதங்களிலும் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல் சிறந்ததாகும். இதன் மூலம் பாலுறுப்புக்களில் கிருமிப்பாதிப்பினால் நோய்த்தாக்கம் (Infection) ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

மதுபானங்களும், புகைப்பிடித்தலும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் நிகட்டினும், மதுசாரமும் கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவிற்கும் நச்சு விளைவுகளை உண்டாக்குகின்றன.
பொதுவாக கர்ப்பகால இறுதியில், கர்ப்பிணியையும், கருப்பை உட்சிசுவையும் பாதிக்கக்கூடிய தொற்று நோய்களில் இருந்து கர்ப்பிணியைப் பாதுகாக்க வேண்டும்.

சரும (தோல்) பாதுகாப்பு.
கர்ப்பிணி, தனது தோலை நன்கு பராமரிக்க வேண்டும். முனைப்பான வியர்வைச் சுரப்பிற்கு தோலின் சுத்தம் உதவுகின்றது. வெளிப்படும் வியர்வை மூலம், தீய கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து அகற்றப்படுகின்றன.

தோலின் பராமரிப்பினால், அதன் கழிவகற்றும் தொழிற்பாடு ஊக்குவிக்கப் படுகின்றது. எனவே, கர்ப்பத்தின் போது மிகையாக இயங்கும் சிறுநீரகங்களின் (kidneys) பணிகளும் சீரடைகின்றன.
கர்ப்பிணிகள் துளிக்குளியல் (Shower Bath) எடுப்பது சிறந்ததாகும். ஆனால் தண்ணீர் ஓரளவு வெதுவெதுப்பாக இருத்தல் வேண்டும். கர்ப்பத்தின் இறுதி வாரங்களில், இளஞ்சூடான நீரினால் பஞ்சுக் குளியல் (Sponge Bath) எடுப்பது நல்லது. குளியலின் பின்னர் உலர்ந்த துண்டால் நன்கு உலர்த்திவிட வேண்டும்.

தினமும் இரண்டு தடவைகள் மென்மையான சோப்பும், சூடான நீரும் கொண்டு பாலுறுப்புக்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளைபடுதல்போன்ற நோய் நிலைகள் இருப்பின் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

கர்ப்பிணி தனது வாயை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் மெல்லிய பற்தூரிகை(Soft Toothbrush)யினால் பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு உணவின் பின்னரும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

வருங்காலப் பாலூட்டத்திற்காக, கர்ப்பத்தின் போதே மார்பகங்களைச் சிறப்பாகப் பேண வேண்டும். மார்பகங்களை மென்மையான சோப்பும், தண்ணீரும் கொண்டு தினமும் கழுவி ஒரு துவாலையால் நன்கு உலர்த்த வேண்டும். இவ்வகை எளிய முறையினால் பாலூட்டத்தின் போது

மார்பகக்காம்புகளில் பிளவுகள் தோன்றுவதையும், மார்பகங்களில் ஏற்படுகின்ற அழற்சியையும் தவிர்க்க முடிகின்றது. இதனால் மார்பகம் பிறக்கப்போகும் குழந்தைக்கு வருங்காலப் பாலூட்டத்திற்குத் தயார்நிலையில் வைத்திருக்க இயலும்.

மார்பகக்காம்புகள் தட்டையாகவோ, உள்நோக்கி வளைந்தோ இருந்தால், அவற்றை சுத்தமான விரல்களைக் கொண்டு மஸாஜ் செய்ய வேண்டும். ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் கொண்டு அவற்றைக் கவனமாக முன்னோக்கி இழுக்க வேண்டும். 3-4 நிமிடங்கள் நீடிக்கும் வகையில் தினமும் 2-3 முறைகள் மஸாஜ் செய்ய வேண்டும்.

மார்புக் கச்சைகள் (Bra’s) முரடான நூல் இழைகளால் செய்யப்பட்டு, மார்பை இறுக்கமாகப் பற்றி (அதிகமாக அழுத்தாமல்) இருக்க வேண்டும். மார்புக் கச்சைகளின் குவியப் பகுதி மார்பகத்தின் வடிவத்திற்கும். அதன் அளவிற்கும் ஏற்றதாக இருக்கக வேண்டும்.

உடைகள்
கர்ப்பிணியின் உடைகள், குறிப்பாக வயிற்றுக்கும், மார்புக்குமானவை வசதியான தாகவும், தளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். கர்ப்பத்தின் இரண்டாவது பகுதியில் வயிற்றுக் கட்டுகள் போடப்பட வேண்டும். கட்டுகள் வயிற்றை அமுக்காமல் அவற்றைக் கீழிருந்து தாங்கவேண்டும். வயிற்று உப்புசத்தின் மிகையான நிலையைத் தவிர்க்கவும், கீழ் முதுகுப் பகுதியில் (நாரிப் பகுதி) தோன்றும் புவிஈர்ப்பு உணர்வைத் தவிர்க்கவும் கட்டுகள் உதவுகின்றன. (கர்ப்பிணிகளில் புவிஈர்ப்பு மையம் இடம்பெயர்வதால் முதுகுத் தசைகள் பழுதடைகின்றன.)

கர்ப்பிணிகளது காலணிகள் வசதியானதாக இருக்க வேண்டும். உயர்ந்த குதிகால்கள் கொண்ட காலணிகளை அணியக் கூடாது. ஏனெனில் இவை கால்கள் மற்றும் முள்ளந்தண்டு ஆகியவற்றின் தசைகளைச் சோர்வடையச் செய்கின்றன.

கர்ப்பிணிகளின் நலவழி முறைகளின் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
01. கர்ப்பிணியின் உடல் நலம் பேணப்பட்டு, பலமடைகின்றது.
02. கருப்பை உட்சிசுவின் சாதாரணமான வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது.
03. கர்ப்பமும், கர்ப்பத்திற்குப் பின்னான காலமும் சீராக அமைகின்றது.
04. பெண், பாலூட்டத்திற்கு தயார்நிலைப் படுத்தப்படுகின்றாள்.

கர்ப்பிணிகளின் உணவூட்டம்
கர்ப்பிணியின் நலமான வாழ்வுக்கும், கருப்பை உட்சிசுவின் முறையான வளர்ச்சிக்கும், கர்ப்பகாலத்தில் போஷாக்கான உணவு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கர்ப்பிணிக்கான தவறான உணவூட்டம் தாய்க்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி, கருப்பை உட்சிசுவின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

கர்ப்பத்தின் போது பெண்களில் நிகழும் உடலியல் மாற்றங்களையும், கர்ப்பிணிக்கும், வளரும் சிசுவிற்கும் மிகையாகத் தேவைப்படுகின்ற ஊட்டப் பொருட்களையும் கவனத்திற்கொண்டு கர்ர்ப்பிணிகளுக்கான உணவு முறை திட்டமிடப்படவேண்டும்.

கர்ப்பத்தின் முதற்பகுதியில், உணவு வழக்கத்திற்கு மாறாக இல்லாமல், நல்ல ஊட்டப் பொருட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் உணவில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. கர்ப்பத்தின் முதல் மாதங்களில் சுவை மாறுபாடடைகின்றது. 3-4 ஆவது மாதங்களில் சிறப்பான உணவுகளுக்கான ஆசை எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் துவக்க மாதங்களில் (குறிப்பாகக் காலை வேளைகளில்) குமட்டல் காணப்படுகின்றது. இத்தகைய பெண்கள் காலை உணவை படுக்கையில் இருந்து கொண்டே அருந்திய பின்னர், எழுந்து நடமாடலாம்.

கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் காய்கறிகளும், பால் பொருட்களும் வழங்கப்படலாம். இறைச்சி, மீன்வகைகளை குறைந்தளவில் உள்ளெடுக்கலாம். பழங்கள், உலர் விதைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் தாய்க்கும், சேய்க்கும் தேவையான விட்டமின்கள் அதிகளவில் காணப் படுவதால் அவை மிகவும் பலனளிக்கின்றன. வாரத்தில் 3-4 தடவைகள் மாமிசம் கொடுக்கப்படலாம். மாமிசத்திற்கும், மீன்களுக்கும் பதிலாக பாலும், காய்கறிச் சாறுகளும் கொடுக்கப் படலாம். விலங்கினப் புரதத் தேவைகளை ஈடுசெய்ய முட்டை, தயிர், பாலோடு மற்றும் ஏனைய பால் பொருட்களைக் கொடுக்கலாம்.

கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் உணவுடன் சேர்க்கப்படவேண்டிய உப்பின் அளவு குறைக்கப்பட வேண்டும். மதுபானங்கள், மிளகு, கடுகு, வினிகர், காரமான மசாலா நிறைந்த பொருட்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

கர்ப்பத்தின் போது கல்லீரல், சிறு நீரகங்கள், ஏனைய உறுப்புக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகப் பணிபுரிகின்றன. இவற்றின் பணிகள் சீர்குலையாமல் இருக்க, மேற்படி உணவுக்கட்டுப்பாடுகள் அவசியமாகும்.

கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவின் வளர்ச்சிக்கும் அதிகளவில் விட்டமின்கள் தேவைப்படுகின்றன. அரைகுறையான விட்டமின்கள் உடலுறுப்புக்களின் பணியாற்றும் திறனைக் குறைப்பதோடு, நோய்த் தொற்றுகளுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு சகதியையும் குறைக்கின்றது. விட்டமின்கள் பற்றாக் குறையாக இருந்தால் மாலைக்கண், ரிக்கட்ஸ், ஸ்கர்வி, நரம்பு மண்டல நோய்கள் உண்டாகின்றன. கர்ப்பகாலத்தின் போது விட்டமின் பற்றாக்குறை காணப்பட்டால் சிசுவின் விகார வளர்ச்சி, கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம் ஆகியவை ஏற்படலாம். ஆகவே, பெண்ணின் இன்றியமையாத பணிகளுக்கு அதிகளவு விட்டமின்கள், அதிகளவு விட்டமின்கள் கொண்ட உணவுகள் பரிந்துரைக்கப் படுகின்றன.

கர்ப்பிணி தினமும் 4 தடவைகள் சாப்பிட வேண்டும். தினசரி உணவின் 25-30 வீதத்தினை காலை உணவிலும், 40-45 வீதத்தினை மாலை உணவிலும், 15-20 வீதத்தினை இரவு உணவிலும் எடுக்க வேண்டும்.

கர்ப்பிணி தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், புளித்த பால் ஆகிய வற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.

விட்டமின் – A
இது வளர்ச்சி விட்டமின் எனவும் அழைக்கப்படுகின்றது. விட்டமின் – A பற்றாக்குறையாக இருந்தால், வளர்ச்சி தடைப்படுகின்றது. சுற்றுப்புற அம்சங்களுக்கான எதிர்ப்பு சக்தி குறைகின்றது. கல்லீரல் நோய்கள், சிறுகுடல் நோய்கள், கண்நோய்கள், (உலர்விழி நோய், மாலைக் கண்) உண்டாகின்றன.

விலங்குகளின் கல்லீரல், சிறுநீரகங்கள், பால், முட்டை, வெண்ணெய், மீன் எண்ணை, கரட், பசளைக் கீரை, மஞ்சள் நிறக் காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் விட்டமின் – A அதிகளவில் காணப்படுகின்றது.

விட்டமின் – B1
இது அனுசேபச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்பு மண்டலத்தின் முறையான பணிகளை ஊக்குவிப்பதிலும் பங்கு கொள்கின்றது. விட்டமின் – B1 பற்றாக் குறையின் போது நரம்புத்தொகுதியில் கொடூரமான நோய்கள் தசைச்சூம்பல். கைகால்களின் செயலிழப்பு ஆகியவைகள் உண்டாகின்றன.

மதுவம், கல்லீரல், சிறு நீரகங்கள், அவரை இனங்கள், சோளக்கஞ்சி, தவிடுள்ள தானியங்கள் ஆகியவற்றில் விட்டமின் – B1 அதிகளவில் காணப் படுகின்றது.

விட்டமின் – B2 (Riboflavin)
வளர்ச்சி அம்சமாகிய இந்த விட்டமின் உணவில் போதியளவில் காணப்படாவிடில் வளர்ச்சிகுன்றி கண்கள் மற்றும் தோல், சீதப்படலங்கள் ஆகியவைகள் பாதிக்கப் படுகின்றன.
மதுவம், கல்லீரல், சிறுநீரகங்கள், இறைச்சிவகை, முட்டை, பால் பொருட்கள், ஆகியவற்றில் விட்டமின் – B2 அதிகளவில் காணப்படுகின்றது.

விட்டமின் – B6 (Nicotinic Acid)
இது, அனுசேபத்தில் பங்குகொள்ளும் நொதிய அமைப்புக்களில் ஒரு பகுதியாகும். இவ்விட்டமின் பற்றாக்குறையின் போது பெலாக்ரா நோய் உண்டாகின்றது. இந்நோயில் மைய மற்றும் சுற்றயல் நரம்புத் தொகுதிகள், தோல், சிலேட்டுமப் படலம், (Mucosa) ஆகியவை பாதிக்கப்பட்டு குடல் கோளாறுகளும் உண்டாகின்றன.

மதுவம், கல்லீரல், கோதுமை தானியங்கள் ஆகியவற்றில் விட்டமின் B6 அதிகளவில் காணப்படுகின்றது.

விட்டமின் – C (Ascorbic Acid)
இது உடலின் வளர்சிதைமாற்ற நிகழ்வுகளில் பங்குகொள்கின்றது. அத்துடன் உடலியல் நிகழ்வுகளையும் ஊக்குவிக்கின்றது. கர்ப்பத்தின் முறையான வளர்ச்சிக்கு விட்டமின் – C அவசியமாகின்றது.

இவ்விட்டமின் பற்றாக்குறையின் போது ஸ்கர்வி நோய் உண்டாகின்றது. இதன் பற்றாக்குறை கருச்சிதைவுக்கும் குறைமாதப் பிரசவத்திற்கும் காரணமாக இருக்கின்றது.
காய்கறிகள், சதைப்பற்றான புளிப்புள்ள பழங்கள் ஆகியவற்றில் இவ்விற்றமின் காணப்படுகின்றது. உலர்ந்த, விதையற்ற திராட்சைப்பழங்களில் இவ்விட்டமின் மிகையான அளவில் காணப்படுகின்றது.

விட்டமின் – D
கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் இவ்விட்டமின் பங்குகொள்கின்றது. கருப்பை, உட்சிசுவில் ரிக்கஸ்ட்ஸ் தோன்றுவதை விட்டமின் – D தடை செய்கின்றது.
மீன், எண்ணெய், கொழுப்புள்ள மீன்களின் தசை, வெண்ணெய், கல்லீரல் ஆகியவற்றில் ஏராளமாக விட்டமின் – D காணப்படுகின்றது.

விட்டமின் – E
விட்டமின் – E ன் பற்றாக்குறை பால் சுரப்பிகளின் (Mammary Glands) இயக்கத்தைப் பாதித்து சூல் முட்டை வெளிப்படுவதையும் அது கருவுறுவதையும் தடை செய்கின்றது.

கர்ப்பிணிகளுக்கு விட்டமின் – E குறைவாகக் கிடைத்தால் கருச்சிதைவு ஏற்படுகின்றது. இவ்விட்டமினுடன் சேர்ந்த மற்றும் பல பொருட்கள் தானாக நிகழும் கருச்சிதைவுக்கும், மலட்டுத்தன்மைக்கும் சிகிச்சையாகப் பயன்படுகின்றது.

கோதுமை, முளைவிட்ட தானியங்கள், கதிர்மணிகள், முட்டை, கல்லீரல். சோயா அவரை எண்ணெய்கள், சில விலங்குக் கொழுப்புகள் ஆகியவற்றில் விட்டமின் E அதிகமாகக் காணப்படுகின்றது.

உடற்பயிற்சிகள்:
கர்ப்பத்தின்போது முறையான, கண்காணிப்புக்கு உட்பட்ட சிறப்பு உடற்பயிற்சிகள் பயனளிக்கின்றன. உடற்பயிற்சிகள் கர்ப்பிணியின் உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் முறையான கர்ப்பம் மற்றும் பிரசவம், பிரசவப் பின்காலம் ஆகியவற்றிற்கும் துணை செய்கின்றது.

மகப்பேறு வைத்தியர் பரிந்துரை செய்யும் உடற்பயிற்சிகளேயே கர்ப்பிணித் தாய்மார்கள் செய்ய வேண்டும். சுவாசம், குருதிச் சுற்றோட்டம், வளர்சிதை மாற்றம், நரம்புத் தொகுதியின் பணிகள் ஆகியவற்றை ஊக்கு விக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. வயிறு, இடுப்பு ஆகியவற்றின் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மருத்துவக் கண்காணிப்பு:
கர்ப்பகாலத் துவக்கத்திலிருந்து இறுதி வரை கர்ப்பிணி மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரவேண்டும். கர்ப்பத்தின் துவக்கத்தில் மாதம் ஒரு தடவையும், பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையும் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

கர்ப்பிணி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும்போது வரப்போகும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் கர்ப்பத்தின் சிக்கல்கள் ஆகியவற்றைத் தெரிந்து உரிய காலத்தில் அவற்றைத் தவிர்க்கவும், தீர்க்கவும் செய்யலாம். கர்ப்பத்தின் துவக்க வாரங்களிலிருந்தே வழக்கமாகப் பரிசோதித்து வந்தால் கர்ப்பத்தின் சிக்கல்களைத் தவிர்க்க இயலும்.

கர்ப்பிணிகள் முழுமையாகத் தனது உடல் நலம் பற்றி விசாரித்துப் பரிந்துரைகளைக் கவனித்துப் பின்பற்றுதல் வேண்டும்.  உள் உறுப்புகளில் பரிசோதனைகள், பேறுகாலப் பரிசோதனை என்பவற்றை மேற்கொள்ளவேண்டும். இருதய குருதிச் சுற்றோட்டத் தொகுதியில் நோய்கள் மற்றும் சிறுநீரகங்கள், கல்லீரல் ஏனைய உறுப்புக்கள் ஆகியவற்றில் நோய்கள் குறுகலான இடுப்பு வளையம், சிசுவின் தவறான தோற்றம், குருதிப் பெருக்கு, கர்ப்பத்தின் மற்றும் பல சிக்கல்கள், கர்ப்ப நச்சு நிலைகளை ஊக்குவிக்கும் அம்சங்கள் (மிகையான பனிநீர், சிறுநீரக நோய்கள், கர்ப்ப முன் நச்சு நிலை) ஆகியவைகள் இருக்கின்றனவா எனவும் பரிசோதிக்க வேண்டும்.

மருத்துவரைச் சந்திக்கும் ஒவ்வொரு தடவையும் கர்ப்பிணியின் எடை, இரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மறைந்துள்ள வீக்கத்தைத் தடைசெய்ய இது உதவுகின்றது.

நோய்கள் அல்லது சிக்கல்கள் இருப்பதாகத் தெரிந்தால் உடனடியாக சிறப்பு மருத்துவரால் கர்ப்பிணி பரிசோதிக்கப்பட வேண்டும்.

கர்ப்பத்தை உறுதி செய்ய...
சிறுநீர்ப் பரிசோதனை
கூபக பரிசோதனையில் கர்ப்பம் என்று தெரிந்தாலும் சிறுநீர்ப் பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்படுகிறது. கடந்த மாத விலக்கு தேதியிலிருந்து 40 நாட்களுக்குள் கருவணுக்கூடு உருவாக்கும் எச்சிஜி (ஹெச்சிஜி) இயக்கு நீர் இரத்தத்தில் கலந்திருக்கும். பின்னர் இந்த இயக்குநீர் சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது. இதை சுலபமான பரிசோதனை மூலம் அறியலாம்.

இப்போது பெண்களே தங்கள் கர்ப்பத்தை கணித்துக் கொள்ள தயார் நிலையில் கருவி வந்துவிட்டன. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்தக் கருவியில் 5 நிமிடத்தில் கர்ப்பத்தைக் கணித்து விடலாம்.

அல்ட்ரா ஒலி அலை பரிசோதனை
இயந்திரத்தால் உருவாக்கப்படும் அல்ட்ரா ஒலி அலைகள் வெவ்வேறு திசுக்களைப் பிரதிபலிக்கும். இது படமாக மொழி பெயர்க்கப்படும். கருத்தரிப்பு, கருக்குழாய் கருத்தரிப்பு, கர்ப்பகால இறுதியில் குழந்தையின் உடல் அமர்வு நிலை, குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள இந்த அல்ட்ரா ஒலி அலைகள் உதவுகின்றன.

பிற்பகுதிக் கர்ப்பத்தின் அறிகுறி
கருப்பை வளர வளர அதன் அளவு கர்ப்பத்தை வெளிக்காட்டும். 16 வார கர்ப்பத்துக்கு பின்னர் மற்ற அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்துவிடும்.

குழந்தையின் அசைவுகள்
முதல் கர்ப்பத்தில் 18 முதல் 20 வாரங்களிலும், தொடர் கர்ப்பங்களில் இன்னும் இரு வாரங்களுக்கு முன்னரே குழந்தையின் அசைவுகள் தெரிய ஆரம்பித்துவிடும். கர்ப்ப காலம் ஏற ஏற இந்த அசைவுகள் வலுவடைந்து அடிக்கடி நிகழும். வெகு நேரத்துக்கு அசைவுகள் தெரியாவிட்டால் மருத்துவரை நாட வேண்டும்.

இயற்கை உபாதை
கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இருக்கும் இந்த அறிகுறி இயக்குநீர் மாற்றங்களுக்கு ஏற்றவாறு உடல் தன்னைச் சரி செய்து கொள்வதால் 12 வாரங்களுக்குப் பிறகு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உபாதை குறையும். கர்ப்பத்தின் பிற்பகுதியில் குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் மீண்டும் ஏற்படும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாகத் தெரியும்.

மருத்துவப் பரிசோதனையில் தெரியும் அறிகுறிகள்
கருப்பையின் வளர்ச்சி
பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வரும் கர்ப்பத்தின் உயரத்தை வைத்து மருத்துவரால் ஓரளவுக்கு கர்ப்பத்தின் வயதைக் கணக்கிடலாம். தொப்பை போன்ற காரணங்களால் இந்தக் கணிப்பு சரியில்லாமல் கூடப் போகலாம்.

கருத்தரித்த 20 வாரங்கள் வரை அடிவயிற்றிலிருந்து 2 வாரங்களுக்கொரு முறை இரு விரற்கடையளவு வளர்ச்சி தெரியும். 20 வாரங்களுக்குப் பின்னர் 4 வாரங்களுக்கொரு முறை இரு விரற்கடையளவு வளர்ச்சி தெரியும். இவ்வாறு விரிவடைந்து கொண்டே செல்லும் கருப்பை கர்ப்பத்தின் இறுதி நாட்களில் மார்பெலும்பை முட்டிக் கொண்டு நிற்கும்.

அல்ட்ரா ஒலி அலைகள் மூலமும் கர்ப்பத்திலுள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியலாம். இதன் மூலம் குழந்தையின் பாலினத்தையும் அறிந்து கொள்ளலாம்.

முப்பதுக்கு மேல் அம்மாவாகும் பெண்களுக்கு!

ஊரே எதிர்பார்த்து காத்திருந்த அந்த வைபவம் நிகழ்ந்துவிட்டது. ��யெஸ்.. நான் தாத்தாவாகப்போகிறேன்�� என்று ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வார்த்தைகளாக்கி இருக்கிறார் பிக் பீ அமிதாப் பச்சன். உலக அழகி ஐஸ்வர்யாராய் பச்சனின் தாய்மையைக் கொண்டாட அவரது வீட்டுக்கு முன் ரசிகர்கள் பூங்கொத்துடன் காத்திருக்க, போனிலும் இன்டர்நெட்டிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அம்மாவாகப் போகிற ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38! அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற நம் ஓவியரின் கற்பனைதான் நீங்கள் முதல் பக்கத்தில் பார்த்த குழந்தை படம்!

முப்பது வயதுக்குள் குழந்தை பெறுவதுதான் தாய்க்கும் சேய்க்கும் நலம் என்றாலும் இப்போது முப்பது வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது சகஜமாகிவிட்டது. இதுபோன்ற நேரத்தில் கர்ப்பிணிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஆலோசனை தருகிறார் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனா. அவர் சொல்கிற குறிப்புகள் எல்லாம் ஐஸ்வர்யாராய்க்கு மட்டுமல்ல... அவரைப்போலவே கருவுற்றிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும்!

��பொதுவாகவே 35 வயதுக்குப் பிறகு கர்ப்பமாவதை �லேட் ப்ரெக்னென்ஸி� அதாவது காலம் தவறிய கர்ப்பம் என்று சொல்வோம். கருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் உடல்நலனில் வழக்கத்தைவிட அதிக அக்கறை காட்டவேண்டும் என்றாலும் இப்படி ஐஸ்வர்யா ராய் போல வயதாகி கருவுறும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். காரணம் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கருவுறுவதில் ஆரம்பித்து பிரசவம் வரை சிக்கல்கள் இருக்கும். முப்பது வயதுக்குப் பிறகு பெண்களுக்கு கருமுட்டை உருவாவது குறைந்து அதனால் கருவுறும் சதவீதமும் குறையும். அப்படியே கருவுற்றாலும் தாய்க்கோ குழந்தைக்கோ பிரச்னைகள் வரலாம். அதனால் கருவுற்ற நாளில் இருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தாயின் உணவுதான் குழந்தைக்கான வளர்ச்சி ஆதாரம். அதனால் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். போலிக் அமிலம் குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியம் என்பதால் கருவுற்ற நாளில் இருந்து போலிக் அமில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இத்துடன் ஒவ்வொரு மாதமும் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவரது வழிகாட்டுதலின்படி மத்திரைகளையும், உணவையும் சாப்பிடுவது நல்லது.

கர்ப்பகாலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக தினசரி வேலைகளை செய்யாமல் முழுநேரமும் படுத்துக்கொண்டே இருப்பதும் தவறு. அவர்களது வழக்கமான பணிகளை தொடர்ந்து செய்யலாம். அதிக பளு தூக்குவது, மாடிப்படி ஏறுவது போன்ற சிரமமான செயல்களை மட்டும் குறைத்துக்கொள்வது நல்லது. சில பெண்கள் வாய் ஒருமாதிரியாக இருக்கிறது, தலை வலிக்கிறது என்று காரணம் சொல்லிக்கொண்டு அடிக்கடி காபி குடிப்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். காபியில் இருக்கும் கஃபீன் என்ற வேதிப்பொருள், உடலுக்கு நல்லதல்ல. ஆல்கஹால் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு கருவுறும் பெண்கள், மனதளவில் உறுதியுடன் இருப்பார்கள். மகப்பேறு குறித்து மற்றவர்கள் மூலமாக அவர்கள் ஓரளவுக்குத் தெரிந்தும்வைத்திருப்பதால், தைரியத்துடன் பிரசவத்தை எதிர்கொள்வார்கள்.

இவர்கள் மனதளவில் தயாராக இருந்தாலும், உடல் அதற்கு ஒத்துழைக்காது. கர்ப்ப காலத்தில் இவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றம், ஹைப்பர் தைராய்டிசம் போன்றவை ஏற்படலாம். அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கக்கூடும். அதனால் சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் இவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். சரியாக சாப்பிடவில்லை என்றால் குழந்தை எடைகுறைந்து பிறக்கக்கூடும். அதேபோல சுகப்பிரசவத்துக்கும் இவர்கள் உடம்பு ஒத்துழைக்காது. பெரும்பாலன பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க இவர்கள் போதிய ஆரோக்கியத்துடன் இருப்பது நல்லது.

தாயுடன் சேர்த்து கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பரிசோதிப்பதும் அவசியம். 10 முதல் 20 வாரங்களுக்குள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்ப்பது அவசியம். எல்டர்லி ப்ரெக்னென்ஸியில் சில சமயம் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம். அப்படியிருக்கும்பட்சத்தில் அதை கருவிலேயே சரிசெய்யும் அளவுக்கு தற்போது மருத்துவ வசதிகள் பெருகியுள்ளன. அதனால் குழந்தையின் வளர்ச்சியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஸ்கேன் செய்ய வேண்டும். முப்பது வயதுக்கு மேல் கருவுறும் பெண்கள் சமச்சீர் உணவு, ஊட்டச்சத்து மாத்திரை, மருத்துவப் பரிசோதனை இவற்றை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கடைபிடித்து வந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் பிரசவத்தை எதிர்கொள்ளலாம். வாழ்த்துக்கள்!��

தள்ளிப்போடுவது நல்லதா?

படித்து முடித்து, நல்ல வேலையில் சேர்ந்த பிறகுதான் திருமணம் என பல பெண்கள் முடிவெடுப்பதால், முப்பது வயதுக்குப் பிறகுதான் திருமணமே நடக்கிறது. இன்னும் சிலருக்கு முப்பது வயதுக்குள் திருமணம் முடிந்துவிட்டாலும் சொந்தவீடு, கார் என லட்சியங்களை வகுத்துக்கொண்டு அவற்றை அடைந்தபிறகுதான் குழந்தை என மழலைச் செல்வத்துக்கு நான்கு அல்லது ஐந்தாவது இடத்தைக் கொடுக்கிறார்கள். அப்படியே மீறி கருவுற்றாலும், எங்கே தங்கள் லட்சியம் தடைபட்டுவிடுமோ என குழந்தையை கருவிலேயே அழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்ற முடிவுகளால் குழந்தை பிறந்து அதைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு செட்டில் ஆகிற வயதில்தான் பல பெண்கள் கர்ப்பமாகிறார்கள். இது அவர்களை மட்டுமன்றி, பிறக்கும் குழந்தையையும் பாதிக்கும். அம்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படியில்லாமல் ஓடியாடி உழைத்து முடிந்து, உடல் தளர்ந்திருக்கும்போது குழந்தை பிறந்தால், பிறக்கும் குழந்தையும் உற்சாகம் குறைவாகத்தான் வளரும். பொருளாதார காரணங்களுக்காகவோ வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காகவோ குழந்தைப்பேறை தள்ளிப்போடுவது தவறு. குழந்தை பெற்றுவிட்ட பிறகு அதே உற்சாகத்தில் அதிவேகத்தோடு லட்சியத்தை நோக்கி நடைபோடலாமே!

12 சதவிகித இந்தியப் பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகிறார்கள்-ஏ.சி. நீல்சன் ஆய்வு


டெல்லி: இந்தியாவில் 12 சதவிகிதம் பெண்கள் தான் மாதவிடாய் (பீரியட்ஸ்) நேரத்தில் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 88 சதவிகிதம் பெண்கள் துணி, சாம்பல், உமி போன்றவற்றைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இனப்பெருக்க பாதையில் நோய் தொற்றும் அபாயம் 70 சதவிகிதம் உள்ளது.

சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுவதால் 12 முதல் 18 வயதுள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஒரு வருடத்தில் 50 நாட்கள் பள்ளிக்கு செல்வதில்லை. இதனாலேயே 23 சதவிகித பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.

பண வசதியில்லாததால் தான் அவர்களால் சானிடரி நாப்கின் வாங்க முடியவில்லை. இந்தியாவில் உள்ள 70 சதவிகிதப் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு நாப்கின் வாங்கித் தரும் அளவுக்கு வசதி இல்லை என்கிறார்கள்.

ஏ.சி. நீல்சன் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பை பிளான் இந்தியா ஆதரித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வயதுக்கு வந்த 1,033 பெண்களும், 151 பெண் மருத்துவர் [^] களும் பங்கேற்றனர்.

இது குறித்து பிளான் இந்தியாவின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் பாக்யஸ்ரீ டெங்க்ளே கூறியதாவது,

இந்த ஆய்வின் மூலம் இந்தியப் பெண்களின் சுகாதாரக் கேடு பற்றி தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் 100 சதவிகிதப் பெண்களும், இந்தோனேசியாவில் 88 சதவிகிதப் பெண்களும், சீனாவில் 64 சதவிகிதப் பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர் என்றார்.

இது குறித்து ஜீவன் மாலா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மால்விகா சபர்வால் கூறியதாவது,

மாதவிடாய் கால சுகாதாரம் குறித்துப் பேசுவது இன்னும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருக்கிறது. அந்த நேரங்களில் பெண்கள் சமையல் அறைக்குளளும், கோயில்களுக்குள்ளும் அனுமதிக்கப்படுவதில்லை. சிலர் அந்த சமயத்தில் குளிப்பது கூட இல்லை. அந்த வழக்கமெல்லாம் மாற வேண்டும்.

பீரியட்ஸ் நேரத்தில் பெண்கள் 2 தடவைக்கு மேல் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை நாப்கின் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறுநீர் பாதைக்குள் பாக்டீரியா நுழைவதும், கருப்பை பாதிப்பும் ஏற்படக்கூடும் என்றார்.

சுமார் 97 சதவிகித கைனகாலஜிஸ்ட்கள் நாப்கின் பயன்படுத்துவதால் இனப்பெருக்க பாதை பாதிப்பு குறையும் என்று நம்புகின்றனர்.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் [^] , லக்னோ, ஹைதராபாத், கோரக்பூர், ஔரங்காபாத் மற்றும் விஜயவாடாவில் எடுத்த கணக்கெடுப்பில் பெண்கள் பீரியட்ஸ் நேரத்தில் 2.2 நாட்களுக்கு சற்று மந்தமாகவே உள்ளனர். கிழக்கு இந்தியாவில் உள்ள 83 சதவிகித பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு சானிடரி நாப்கின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றனர்.

30 சதவிகித வட இந்திய பெண்கள் தாங்கள் பருவம் அடைந்ததும் பள்ளியில் இருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

மென்சுரல் சுகாதாரம் குறி்தது மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கிராமப்புற பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்தும் வகையில் ரூ. 150 கோடி செலவில் ஒரு திட்டம் கொண்டு வரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 6 நாப்கின் உள்ள பாக்கெட் 1 ரூபாயக்கு வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதே பாக்கெட் 5 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்த திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்த திட்டம் குறித்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,

இத்திட்டம் முதல் கட்டமாக நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் 25 சதவிகிதம் அதாவது 150 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும். முதல் வருடத்தில் 150 மாவட்டங்களில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தில் தென் இந்தியாவில் இருந்து 4 மாநிலங்கள், மஹாராஸ்டிரா, குஜராத்தில் இருந்து 30 மாவட்டங்களும், வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து 120 மாவட்டங்களும் சேர்க்கப்படும்.

முதல் கட்டத்தில் 10 முதல் 19 வயதுள்ள சுமார் 1. 5 கோடி பெண் பிள்ளைகள் பயனாளிகளாக இருப்பார்கள். இதில் 70 சதவிகிதம் அதாவது 105 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு மேலும், 30 சதவிகதம் அதாவது 45 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழும் உள்ள பெண்கள் ஆகும் என்று அவர் கூறினார்.

முதல் நாளிலேயே...அவசியமா?


முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.

குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.

மேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.

இன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்து விடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டும்ல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.

அதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட் கார் ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.

செக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.

அதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.

அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால்

கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?


அறிகுறிகளின் தீவிரம், மசக்கைத் தோன்றும் விதம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் எந்த ஒன்றையும் ஜீரணிக்க முடியாமல் அவற்றைத் தூக்கி எறிவார்கள்.

அறிகுறிகள் காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுதும் நீடிக்கும். இந்த அறிகுறிக்கு கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதிலிருந்து நிவரணம் பெற, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.

தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை சமாளிக்கலாம்.

காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.

குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். பிரச்சனை தராத, அதேசமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுங்கள்.

கர்ப்பக் காலத்தில் வாசனைக்கான உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள்.

தளர்த்தியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெளகரியத்தை உண்டாக்கும்.

குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள், குமட்டல் குறையும்.

அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

கர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது இன்பத்துக்காக மட்டுமல்ல...


பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில...

ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.

84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க!

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.


வசியத்தில் இருந்து தப்பலாம்

வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது.

யோகசாஸ்திரம் கூறும் உண்மை

மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.

ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்!


பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.

வாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்!


அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென புயலோ, சூறவளியோ வீசினால் பலர் அதனை எதிர்கொள்ள முடியாமல் நொருங்கிப் போய் விடுகின்றனர். ஒருசிலர்தான் எதிர்த்து நின்று பிரச்சினைக்குரிய காரணங்களை ஆராய்ந்து அதை தீர்க்க முயலுகின்றனர்.


இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வாழ்வது மட்டுமே ஒற்றுமையோடு வாழ வழி வகுக்கும். இல்லையெனில் மணமுறிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விடும். இனிமையான இல்லறத்திற்கு கடை பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்.

துணையின் கருத்துக்கு மதிப்பு

எந்த ஒரு செயல் என்றாலும் ஒருவரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும். அதுவும் மண வாழ்க்கையில் ஒருவருக் கொருவர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அதற்கு தகுந்த முடிவெடுக்க வேண்டும்.

வீட்டிற்கும் வாங்கும் பொருளோ, உடுத்தும் உடையோ எதுவென்றாலும், துணையை தேர்வு செய்ய விடுங்கள். அவரது தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் சாமர்த்தியமாக பேசி அதை வாங்காமல் தவிர்க்கலாம். மாறாக, அவரை விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் விரிசலின் முதல் விதை.

அழகில் கவனம் தேவை

ஆண்களோ, பெண்களோ ஒரு குறிப்பிட்ட வயதிற்கு அப்பால் தங்களைப் பற்றி கவனம் கொள்ள தவறி விடுகின்றனர். இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆணும், பெண்ணும் அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்றுவதால் பிறருடன், தன்னுடைய வாழ்க்கைத் துணையை ஒப்பிட்டு பார்த்து ஏங்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே அவரவர், உடைகளிலும், உணவிலும் கவனம் கொள்ளுங்கள். உடலை கச்சிதமாக வைத்துக்கொண்டால் பிறர் மீது கவனம் திரும்ப வாய்ப்பில்லை.

வெளியில் செல்லுங்கள்

அலுவலகம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்பது இயந்திரமான வாழ்க்கை. இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒருமுறை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பேசி மகிழுங்கள். இது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.

ஒருவரை ஒருவர் பாராட்டுங்கள்

இல்லறத்தில் பாராட்டு பெறுவது என்பது வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கு சமம். கணவரிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு கிடைத்து விட்டால் போதும் மனைவி க்கு கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்ததற்கு சமம். எனவே வாய்விட்டு பாராட்டுங்கள்.

அதுபோல் கணவரின் பிரத்யேகமான செயல்களை மனைவி பாராட்டுவதில் தவறில்லை. இது போன்ற சின்ன சின்ன சம்பவங்கள் தான் இல்லற பயணத்தை இனிமையானதாக மாற்றும்.

பெண்ணின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?


அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.

இதய சிம்மாசனம்

திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.

தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டாக விளையாடுங்கள்

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.

நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

மோதிர விரல் நீளமா இருக்கா? அதிர்ஷ்டசாலிதான் நீங்கள் – ஆய்வில் தகவல்!


சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம். ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.

நோய்களை அறிந்து கொள்ளலாம்

ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

விரலும் ஆய்வு முடிவும்

ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம்.

கவர்ச்சிகரமான ஆண்கள்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

ஹார்மோன் தூண்டப்படும்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.

ஆண்மை அதிகரிக்கும்

ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உறவில் உற்சாகம்

150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.

என்ன உங்க கை விரலை இப்பவே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?

எதுவாக இருந்தாலும் கேட்டுச் செய்ங்க!

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர் பாலியல் நிபுணர்கள். மென்மையாய் கசியும் இசை படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மென்மையான இசையை கசியவிட்டால் அது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்திவிடும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் படுக்கையறையின் முக்கிய எதிரியே செல்போன்தான். எனவே படுக்கையறைக்கு செல்லும் முன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டியதுதான் முதல் பணி. இல்லையெனில் படுக்கையறையில் தொண தொணக்கும் செல்போன் ஒலியும், அதை தொடர்ந்து உங்களின் பேச்சும் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பிறகு என்ன செய்தாலும் சமாதானப்படுத்த முடியாது என்கின்றனர் உளவியலாளர்கள். அனுமதி அவசியம் தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்தமிடலாமா? இன்று உனக்கு சம்மதமா? இப்படி ஏதாவது கேட்டு வைப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள். தொடக்கம் போல இறுதி முத்தம் என்பது உறவுக்கான திறவுகோல் என்பார்கள். நெற்றியில் தொடங்கி கண்கள், கண்ணம், முகவாய், இதழ் என படிப்பாய் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தொடக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. சுவாசப் புத்துணர்ச்சியோடு முத்தம் தரவேண்டும். செல்லப் பெயர் சூட்டுங்கள் படுக்கையறையில் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும் என்றுதான் அநேகம் பேர் எதிர்பார்க்கின்றனராம். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சவேண்டும். உடலை வருடவேண்டும், கொண்டாட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். பெண்களுக்கு மூட் இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடுங்கள். அந்த இதமான வருடல் பெண்மையின் மென்மையை கிளறச்செய்யும். திருப்தியுறச் செய்யுங்கள் ஆண்களின் ஆசை சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சிலநிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாக நிகழும். எனவே திருப்தியுறும் வரை அவர்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!

திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள். புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே. தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ் ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு. காதல் பாடல்கள் இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது. காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா? சமையலறை சங்கீதம் உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம். அசத்தலான ஆல்பம் போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம். நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம். சின்னதாய் ஒரு ஷாப்பிங் வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும். விடுமுறை கொண்டாட்டம் எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம். சின்ன சின்ன காமெடி இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம். வேடிக்கையான தோல்வி செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்.