ஆசை நூறு வகை.. ‘காண்டம்’ ஐந்து வகை!
இன்று இரவு உறவு என்று முடிவு செய்தாயிற்று. அடுத்து பாதுகாப்பான செக்ஸ் தேவை என்று முடிவு செய்யும்போது எந்தக் ‘காண்டம்’, ‘கண்டம்’ ஆகாமல் கடைசி வரை கை கொடுக்கும் என்ற குழப்பம் வரும்.
மார்க்கெட்டில் இன்று எத்தனையோ வகை ஆணுறைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் நமக்குப் பொருத்தமான, பிடித்தமான ஆணுறையைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் ஐந்து வகை ஆணுறைகள் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி விருப்பமானதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அது என்ன ஐந்து வகை… படியுங்கள் தொடர்ந்து.
பிளேவர்ட் காண்டம்
இது வாய் வழிப் புணர்ச்சியை விரும்புவோருக்கு அருமையா ஒரு ஆணுறை. சாக்லேட், காபி, ஸ்டிராபெர்ரி, மின்ட், வெனிலா உள்ளிட்ட பல்வேறு வாசங்களில் இது கிடைக்கிறது. இருப்பினும் இதில் சுகர் ப்ரீ ஆணுறையாக பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நல்லது, இல்லாவிட்டால் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டு விடும்.
டாட்டட் காண்டம்
ஆணுறை அணிந்து உறவில் ஈடுபடும்போது கூடுதல் சுகம் தேவை என்று உணர்வோருக்கு பொருத்தமானது இந்த ஆணுறைதான். இந்த ஆணுறையால் ஆணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் பெரும் சுகம் கிடைக்குமாம்.
சூப்பர் தின் காண்டம்
ஆணுறையே அணியாமல் உறவில் ஈடுபடும்போது கிடைக்கும் அதே அளவிலான, நிறைந்த சுகம் இந்த சூப்பர் தின் காண்டம் அணிந்து உறவில் ஈடுபடும்போதும் கிடைக்கும். அந்த அளவுக்கு படு லேசாக மெல்லிசாக இந்த ஆணுறை இருக்கும். ஆணுறை அணிந்திருப்பதே தெரியாத வகையில் மிக மெல்லிசாக இருக்கும் என்பதால் ஆணுறை அணியாமல் உறவில் ஈடுபடும் போது கிடைக்கும் சுகம் இதில் கிடைக்கும்.
பிளஷர் ஷேப்ட் காண்டம்
இந்த ஆணுறையை அணிந்து உறவில் ஈடுபடும்போது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி உணர்வுகள் அதிகமாகும். கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.
குளோ இன் டார்க் காண்டம்
செக்ஸின்போது சிலர் ஏகப்பட்ட விளையாட்டுக்களை விளையாடுவார்கள். அப்படிப்பட்ட குறும்புக்காரர்களுக்கான ஆணுறை இது. வெளிச்சம் பட்டால் 30 விநாடிகளுக்கு இந்த ஆணுறையானது ஒளிரும். அதாவது இருளிலும் இது ஒளிரக் கூடியது. உடம்புக்கு பிரச்சினை தராத ஆணுறையும் கூட. மூன்று லேயர்களால் ஆனது இந்த ஆணுறை.
எப்படிப்பட்ட ஆணுறையாக இருந்தாலும் அது தரமானதாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. பிறகு பாதி உறவில் பல்லைக் காட்டி உங்களது உறவை கசப்பானதாக மாற்றி விடும் அபாயம் உள்ளது.
No comments:
Post a Comment