அழகுக்கு அருமருந்து
உடலை மெருகேற்ற, அழகுபடுத்திக் கொள்ள நேரத்தை வீணக்கிக் கொண்டிருப்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளம், இதற்காக வருவாயின் பெரும்பகுதியை தாராளமாக செலவும் செய்யவும் தயங்க மாட்டார்கள்.
ஆனால் காசு பணம் இல்லாமல் எளிதாக கிடைக்கும் சொற்றுக் கற்றாழையை யாரும் கண்டுகொள்வதில்லை. இது உடலை அழகுபடுத்துவது மட்டுமின்றி, பலவித நோய்களுக்கு அருமருந்தாகவும் இருக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இயற்கை நமக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் சோற்றுக் கற்றாழையும் ஒன்று. எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும் பொருள் என்பது இதன் தனிச்சிறப்பு, எகிப்தியர்கள் இதன் பயனை நன்கு உணர்ந்தவர்கள்.
அதனால் தான் அழியாப் புகழ் பெற்ற கற்றாழை என்று பெயரிட்டுள்ளனர். சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள் கணக்கில் அடங்காது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்கர்கள் இந்த தாவரத்தின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ வைட்டமின்கள் அதிகம்.
மேலும் கால்சியம், மெகனீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம்,சிங்க் போன்ற உடலுக்கு இன்றியையாத தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன. வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின் பாதுகாப்புக்கும் மிகச் சிறந்தது சோற்றுக் காற்றாழை சாறு என்பது கிராம மக்கள் அறிந்த ஒன்று.
இப்போதெல்லாம் பலருக்கு தலைமுடி மீதுதான் அதிக அக்கறை. இந்தப் பிரச்சினைக்கு சோற்றக் கற்றாழை பெரிய வரப்பிரசாதம். இதை உரித்து அதன் சோற்று பகுதியை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நின்றுவிடுவதுடன், அடர்த்தியாகவும் வளரும்.
சர்க்கரை நோய்க்கு கண் கண்ட மருந்தாகவும் சோற்றுக்கற்றாழை திகழ்கிறது. இதை ஜூஸாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தித்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
தீக்காயத்தை எளிதில் ஆற்றும். மூட்டு வாதத்தில் இருந்து விடுதலை, உடலின் புரதத்தை கூட்டுவது, செரிமானம் என பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் சோற்றுக்கற்றாழை, உடலுக்குத் தேவையில்லாத தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றும்.
பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த சோற்றுக் கற்றாழை, தினமும் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் உறுதிப்படும்.
No comments:
Post a Comment