Sunday, October 7, 2012


ஆயுளை அதிகரிக்கும் நெருக்கம் – ஆய்வில் தகவல்

தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. நோய் எதிர்ப்பு சக்தி உறவின் மூலம் டிஹெஇஏ எனப்படும் (Dehydroepiandrosterone) ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மேலும் பாதிப்படைந்த தசை செல்கள் சரியாவதோடு, சருமத்திற்கும் பளபளப்பு ஏற்படுகிறது. ஆயுள் அதிகரிக்கும் உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தம்பதியரின் நெருக்கம், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துதோடு, கண்ணின் மணியை விரியச்செய்கிறது. இதனால் பார்வையை விரிவடைகிறது. நீரிழிவு போன்ற நோய்களைக் கூட தாம்பத்ய உறவு குணப்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு அறவே குணப்படுத்தவும் செய்கிறதாம். மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மூளைக்கு புத்துணர்ச்சி உறவின் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைவதோடு உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைகின்றன. உடலில் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் உடலும், உள்ளமும் லேசான உணர்வை பெறுகின்றன. இளமை தரும் மருந்து 30 நிமிட உறவானது உடலில் 85 கலோரிகளை எரித்து உடலை கட்டுகோப்பாக வைக்கின்றதாம். எனவே செக்ஸ் மிகச்சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உடல் ரீதியான பிரச்சினைகளை போக்குவதோடு உள்ளரீதியான இறுக்கத்தையும் அகற்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து. வலிநிவாரணி தாம்பத்யமானது வலி நிவாரணியாக திகழ்கிறது. உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இது தலைவலி, தசைவலி போன்றவைகளையும் நீக்கும் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது. ரத்த அழுத்தம் கட்டுப்படும் தாம்பத்ய உறவின் மிக முக்கியமான நன்மையாக மன அழுத்தம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் மன அழுத்தமான சூழலில் இருந்த தம்பதியர் உறவிற்குப்பின் தங்களின் மன அழுத்தம் குறைந்த தாக தெரிவித்தனர். அவர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே காதலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. நெருக்கமான உறவு கொள்வதன் மூலம் , மன அமைதி ஏற்படுவதோடு ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'அதுக்கு' ஏத்த நேரம் 'ஏழரை மணி'தானாம்!!

காலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது ஆய்வு முடிவு. தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலை ஏழரை மணிக்கு உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது. காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம். காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும், பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு ஆர்கசத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட் சுஸி ஹெமான். அது சரி ஆபீஸ் போற அவசரத்தில அதுக்கு எங்க நேரம் என்கிறீர்களா? ஆய்வு இத்தாலியில தான் நடந்திருக்கு நம் ஊரில் இல்லை.

நீண்ட நாள் வாழ நல்லா முத்தம் கொடுங்க!

Kissகாதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆர்வம் அதிகரிக்கும்இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.நோய் எதிர்ப்பு சக்திஇதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.தொப்பை குறையும்ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம்.

அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மன அழுத்தம் குறைகிறது66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.

அரை மணி நேரம்... 250 கலோரி 'காலி'!

டிரட் மில்களில் ஏறி வியர்க்க விறுக்க, நின்று கொண்டே ஓடுவது, மைதானத்தைச் சுற்றி ஓடி உடலை குறைக்க முயற்சிப்பது, சைக்ளிங் போவது, ஜிம்முக்குப் போய் மூச்சு முட்ட முட்ட உடற்பயிற்சி செய்வது... இப்படி, உடல் எடையைக் குறைக்கவும், தேவையில்லாமல் சேர்ந்து கிடக்கும் கலோரிகளைக் காலி செய்யவும் கடுமையாக முயற்சிப்பதை விட அரை மணி நேரத்தில் 250 கலோரிகளை காலி செய்ய எளிமையான வழி உள்ளது - அதுதான் 'செக்ஸ்ர்சைஸ்'! இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில்தான் செக்ஸ் உறவு ஒரு நல்ல உடற்பயிற்சி என்பதைத் தெரிவித்துள்ளனர். பெண்களிடம்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு பல பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். கடுமையாக பாடுபட்டு உடற்பயிற்சி செய்வதை விட செக்ஸர்சைஸ் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடியும் என்பது அவர்கள் எண்ணமாம். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 76 சதவீதம் பெண்கள், உடல் எடை அதிகமாகி விட்டதாக உணரும்போது செக்ஸர்சைஸில் ஈடுபட விரும்புவோம் என்று கூறியுள்ளனர். மேலும் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், ஜிம்முக்குப் போவதை தற்போது விட்டு விட்டதாகவும், அதற்குப் பதில் செக்ஸ் உறவில் அதிகம் ஈடுபட விரும்புவதாகவும் கூறியுள்ளனராம். அரை மணி நேர செக்ஸ் உறவின்போது நமது உடலிலிருந்து 250 கலோரிகள் காலியாகிறதாம். உறவின் நேரத்தையும், வேகத்தையும் பொறுத்து 350 கலோரி வரை கூட எரிகிறதாம். சும்மா, ஒரு மணி நேரம் சாதாரணமாக முத்தமிட்டாலே 200 கலோரி வரை காலியாகிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது...

கரம் பற்றி காதோரம் சொல்லுங்கள், ஐ லவ் யூ…!

நம் நேசத்தை வெளிப்படுத்தும் அற்புதமான வாக்கியம் ஐ லவ் யூ. காதலிப்பதை விட அந்த காதலை வெளிப்படுத்துவதில்தான் சிரமம் அதிகம். எங்கே, எப்படி ஐ.லவ். யூ சொல்வது என்று தெரியாமல் மண்டை காய்ந்து போனவர்கள் தான் அதிகம். ஏதாவது ஒரு இடத்தில் எக்குத்தப்பாக சொல்லி மாட்டிக்கொண்டு அடிவாங்கியவர்கள் ஏராளம். தம்பதியர் அடிக்கடி ஐ.லவ்.யூ என்று கூறிக்கொண்டாலும் அந்த வாக்கியம் எத்தனை சக்தி படைத்தது என்று உணர்வதில்லை. எனவே காதலை எப்படி சொன்னால் நல்லது என்று ஆலோசனை கூறுகின்றனர் உளவியலாளர்கள். நீங்கள் டிரை செய்து பாருங்களேன். பசுமையான தருணங்கள் இருவரின் வாழ்விலும் நிகழ்ந்த பசுமையான தருணங்களை நினைவு படுத்தலாம். அதை நினைத்து சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கும் போது துணையிடம் உங்களின் நேசத்தை வெளிப்படுத்தலாம். அந்த தருணத்தில் நிச்சயம் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். நடிப்பாக வெளிப்படுத்தலாம் நடிப்பின் மூலம் காதலை வெளிப்படுத்துவது எளிது. சமீபத்தில் பார்த்த திரைப்படத்தில் காதல் காட்சியை நினைவு படுத்தும் விதமாக நடித்து எளிதாக ஐ. லவ்.யூ கூறலாம். உங்களின் எண்ணத்தை புரிந்து கொண்டவராக இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நகைச்சுவைப் படம் இருவரும் ஜாலியாக ஒரு நகைச்சுவைப் படத்திற்கு சென்றிருக்கும் போது உங்களின் துணை சந்தோசமாக படத்தில் மூழ்கியிருக்கும் போது மென்மையாக கரத்தை பற்றி காதோரம் ஐ.லவ். யூ சொல்லலாம். அதிக இருட்டும் இலேசான வெளிச்சமும் கலந்த தியேட்டரில் உங்களின் கோரிக்கையை உங்கள் துணை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. வேடிக்கை பேச்சு இருவரும் சந்தோசமாக நகைச்சுவையாக பேசிக்கொண்டிக்கும் போது எளிதாக உங்களின் நேசத்தை வெளிப்படுத்தலாம். அந்த நேரத்தில் சொல்லும் ஐ.லவ்.யூ கொஞ்சம் எபெக்ட் ஆகத்தான் இருக்கும். நடனம் நல்லது நடனம் என்பது உடல் முழுவதும் உற்சாகத்தை தரக்கூடியது. எனவே இருவரும் ஜோடியாக நடனமாடும் போது ஐ.லவ்.யூ சொல்வது அதீத உற்சாகத்தை தரும்.

முதல்நாள் இரவில் பேசி புரிஞ்சுக்கங்க !

திருமண நாளன்று புதுமணத் தம்பதிகள் இருவருக்குமே ஒருவித படபடப்பும், எதிர் பார்ப்பும் இருக்கும். அன்றைய இரவில் எப்படி நடந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குமே இருக்கும். ஆணை விட பெண்ணுக்குத்தான் பயம் அதிகம் இருக்கும். உளவியல் ரீதியான சிக்கல்களும் எழும். எனவே திருமண நாளன்று இரவில் மணப்பெண் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். இடத்தை தீர்மானியுங்கள் திருமண நாளன்று முதலிரவு நடக்கப்போகும் இடம் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். திருமண சத்திரமா? ஹோட்டலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் படபடப்பை ஏற்படுத்தும் என்றால் உங்களுக்கு சவுகரியமான இடத்தை தேர்ந்தெடுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை அன்றைய தினத்தில் மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரை ஆலோசனை கேளுங்கள். நீங்களாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டாம். மனித உடலைப் பற்றியும், தாம்பத்ய உறவு பற்றியும் சந்தேகங்கள் இருந்தால் அதற்கேற்ப நல்ல புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால், பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம். அதிகம் சாப்பிடவேண்டாம் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிட வேண்டாம். முடிந்தவரை அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடவும். அறைக்கு செல்லும் முன் நன்றாக குளித்து விட்டு மிதமான மேக் அப் போட்டு கொள்ளவும். மெல்லிய நகைகள் குறைவான நகைகளை அணியவும், கூரிய முனைகள் கொண்டதும், கனமான கற்கள் கொண்ட நகைகளை அணிய வேண்டாம். உடலை உறுத்தாத ஆடைகளை அணியுங்கள். கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும். வாசனை திரவியம் உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள். காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியம் தடவிக் கொள்ளுங்கள். பேசி புரிந்து கொள்ளுங்கள் முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி ஏற்படலாம். அதைப்பற்றி அச்சம் கொள்ளாமல் வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். முதல் நாளே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமான இரவுகளை எதிர்கொள்ளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

முதலிரவில் அவசரம் வேணாமே மாப்ள!!

J
ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ். ஏ.சி. கூபேயில் அன்றுதான் திருமணமான புதுமணத் தம்பதி. ரயிலிலேயே தன்னுடைய முதல் இரவைக் கொண்டாடத் துடித்தான் கணவன். ஆனால், கூச்சம் ததும்ப அந்தப் பெண் தயங்குகிறாள். கணவனோ அவசரத்தில் தவிக்கிறான். அவளுடைய மறுப்பு அவனுக்கு எரிச்சலை உருவாக்குகிறது. கணவனின் உதடுகளில் தகாத வார்த்தைகள்.
அடுத்த நாள். ஊட்டியில் தனி அறை. குளிர்காலக் கூட்டத் தொடரை ஆரம்பித்தான் கணவன். க்ளைமாக்ஸில் அந்தப் பெண்ணுடன் அவன் உறவைக் களிக்க முடியாத அளவு அவளின் உடம்பு அவனோடு இணையத் திணறியது. அவன் எவ்வளவோ முயற்சித்தும் ‘அது’ மட்டும் நடந்தேறவில்லை. அவனுக்குள் கோப அணை உடைந்துகொண்டது. ஏன்? எதனால்?
புதிதாகத் திருமணமான தம்பதியை முதல் இரவு அன்று அறைக்குள் தள்ளிவிட்டுக் கதவை சாத்திவிட்டாலே போதும், அவர்கள் எளிதாக செக்ஸில் ஈடுபட்டுவிடுவார்கள் என்று சமூகம் நினைக்கிறது. பொதுவாகத் திருமணம் செய்துகொள்கிற எல்லோரிடமும், ‘செக்ஸ் நடவடிக்கை திருப்திகரமாக இருக்கவேண்டும்; அடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிற இரண்டு எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு எதிர்பார்ப்புகளுமே எல்லாத் தம்பதிகளுக்கும் அவ்வளவு எளிதாகக் கைகூடுவது இல்லை. நிஜத்தில் செக்ஸ் செயல்பாடு என்கிற விஷயம் எளிமையானது அல்ல.

‘செக்ஸ் என்பது மனித இயல்புதானே; இயற்கையில் தானாக நடந்தேறிவிடும்தானே… இதைப்போய் ரொம்ப சீரியஸாக டாக்டர் சொல்கிறாரே’ என்று கருதலாம்.
செக்ஸ் உணர்வு என்பது மிக மிக இயல்பானதுதான். ஆனால், செக்ஸ் நடவடிக்கை என்பது எளிதானது அல்ல. அது கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். நாம் ஆரம்பத்தில் சொன்ன கதையில், செக்ஸ்பற்றி முழுமையாகத் தெரியாததனால்தான் அந்தக் கணவன் தன் மனைவி மீது குற்றம் சுமத்துகிறான். ‘ஏன் செக்ஸ் நடவடிக்கை அந்த இடத்தில் கடினமான விஷயமாக மாறிப்போனது? உண்மையான காரணம் என்ன?’ என்றெல்லாம் அமைதியான முறையில் தன்னுடைய மனைவியுடன் கலந்து பேசி முடிவு எடுக்காமல்போனதற்கு செக்ஸ் நடவடிக்கையை அந்தக் கணவன் ஈஸியாக நினைத்ததுதான் காரணம்.
அந்தப் பெண்ணுக்கு இருக்கிற பிரச்னைக்கு வெஜைனிஸ்மஸ் (Vaginismus)  என்று பெயர். வலியினாலோ அல்லது வலிக்குமோ என்கிற பயத்தினாலோ – அந்தப் பெண்ணினுடைய பிறப்பு உறுப்பின் உதடுகள் இறுக்கமாகிவிடுவதுதான் இங்கு பிரச்னை. இந்தச் சூழ்நிலையில், அதன் உள்ளே ஆண் உறுப்பை நுழைக்கவே முடியாது.
இதனை அந்தப் பெண் வேண்டும் என்று செய்வது இல்லை. அவளையும் அறியாமலேயே அவளுடைய பிறப்பு உறுப்பு இறுக்கமாகக் கதவடைக்கிறது. ‘இப்படி ஒரு பிரச்னை பெண்களுக்கு வரலாம்’ என்பதே பலருக்கும் ஆச்சர்யமான தகவல். சரி, சம்பந்தப்பட்டப் பெண்ணே அறியாமல் வெஜைனிஸ்மஸ் என்கிற பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன?
பெரும்பாலும் திருமணமான புதிதில் இப்படி வரலாம். அல்லது பின்னாட்களில்கூட சில பெண்களுக்கு ஏற்படலாம். அந்தப் பெண் – அந்தச் சமயத்தில் உணர்ச்சிவசப்படுவாள், மனதில் பெரு விருப்பம் இருக்கும், கணவன் மீது பேரன்புடன் இருப்பாள், ஃபோர்பிளே (Foreplay)  எனும் முன்விளையாட்டுகளிலும் தீவிரமான காதலுடன் செயல்படுவாள். ஆனால், க்ளைமாக்ஸ் கட்டத்தில் அதாவது உடல் உறவு சமயத்தில்தான் அவளையும் அறியாமல் பிறப்பு உறுப்பில் இந்தப் பிரச்னை அரங்கேறும். அந்தப் பெண்ணின் உடம்பே ஒருவிதமான விறைப்புத்தன்மைக்கு உள்ளாகிவிடும்.
நாம் மேலே சொன்ன கதையில் – கணவன் காட்டிய அவசரத்தையும் முரட்டுத்தனத்தையும் பார்த்து அந்தப் பெண் அதிர்ந்துபோயிருக்கிறாள். ‘அய்யோ வலிக்கும் போலிருக்கே’ என்கிற அதீத கற்பனை பயத்தை ஏற்படுத்தி வெஜைனிஸ்மஸ் நிலைக்குத் தள்ளிவிட்டது. இந்த உளவியல் உண்மை தெரியாத கணவன், ‘அவள் உடல் உறவுக்கு ஏனோ மறுக்கிறாள்’ என்று எண்ணிக்கொண்டு சகட்டுமேனிக்குத் திட்ட,  அவள் மேலும் பதற்றமாகி இருக்கிறாள்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன? இந்தப் பெண்ணுக்கு சிஸ்டமேட்டிக் டிசென்சிடிசேஷன் (Systematic Desensitization)  என்ற பிஹேவியரல் தெரபி கொடுக்க வேண்டும்.
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் புரிந்துகொள்ள வேண்டியது:
முதல் முறை கூடும்போது ஒவ்வொரு கணவனும், ‘இவன் அவசரப்பட மாட்டான், முரட்டுத்தனமாக நடந்துகொள்ள மாட்டான், வலிக்குது என்றால் உறவைத் தள்ளிப்போடுவான், அனுசரணையாக நடந்துகொள்வான்’ என்கிற நம்பிக்கையை மனைவியின் மனதில் விதைப்பதுமாதிரி நடந்துகொள்ள வேண்டும்.
செக்ஸ் நடவடிக்கை நடைபெறவில்லை என்றால், கணவனும் மனைவியும் தவறாகப் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பிப்பார்கள். இதனால் உண்மையில் என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அடுத்து அந்தப் பெண்ணின் உணர்வில் அது ஆழமாகப் பதிந்து, அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகலாம்.
மனைவி ரிலாக்ஸ் ஆக கணவன் வாய்ப்பு தர வேண்டும். செக்ஸ் என்பது ஈஸியானது என்பதுமாதிரி பேச்சும் நடவடிக்கையும் இருக்க வேண்டும். ஒரு பெண்ணை மிகவும் ரிலாக்ஸ் ஆக வைத்து, அவளைப் பதமான நிலைக்குக் கொண்டுவந்து பின்பு அனுபவிக்க ஆரம்பித்தால், அதில் கிடைக்கும் இன்பத்தின் தித்திப்பு கூடுதல்தான்.  பலவந்தம் எப்போதுமே முழுமையான திருப்தியைத் தராது.
பெற்றோரும் பெரியோரும் கூடலைப்பற்றி பயம் காட்டாமல், சந்தோஷமான வார்த்தைகளைச் சொல்லித்தர வேண்டும். வெஜைனிஸ்மஸ் என்பது மனப் பிரச்னையால் ஏற்படும் உடல் பிரச்னை என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்!

அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான ஆலோசனைகள்
  • முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.
  • திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக் கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப் போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப் போடுவதில் தவறே இல்லை. அதே நேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை.
  • சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை உண்மை வாழ்க்கையில் புரட்டிப் பார்ப்பது தவறு. நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அது பற்றி துணையே கேட்டாலும் வாய் திறக்கக் கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை.
  • முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
  • திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப் புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தைச் செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை, கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு உங்கள் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.
  • முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையைப் பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களைப் பார்த்து, துணையையும் அது போன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். "நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்பது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி தூர எறிந்து விடுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையைக் காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.
  • குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த பத்தாவது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா... குவா.... சத்தம் கேட்கலாம்.
  • சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அது பற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப் போய்விடும்.
  • இப்போதெல்லாம், திருமணம் முடிவாகி விட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
  • முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், "அய்யோ... நம்மால் முடியாதோ?" என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணி விட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும்.
  • மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மன நெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே?
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய உடலுறவு முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி ஆலோசனைகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.

தாய்ப்பாலை கணவன் குடிக்கலாமா? Adult breast feeding


மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது. இந்த நிலை Adult breast feeding எனப்படுகிறது.இதன் மூலம் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நெருக்கம் / மன உடன்பாடு அதிகரிப்பதாகவும் கருத்துச் சொல்லப்படுகிறது.
அந்தக் காலம் இருந்தே இந்தப் பழக்கம் மக்களிடையே நிலவி வருகிறது.தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக சில நோய்களுக்கு இது மருந்தாகும் என்ற நோக்கத்தில் அதைக் குடிப்பவர்களும் உள்ளது.
உண்மையில் தாய்ப்பாலில் சில புற்று நோயை எதிர்க்கும் சக்தி உள்ளதாகவும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதிலாக உங்கள் கணவர் தாய்ப்பால் குடிப்பதால் மருத்துவ ரீதியாக அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

முதலிரவை சந்திக்கும் தம்பதியருக்கு! First Night !


கணவன்,மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை.முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்.
அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல.முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம்.இதில் பல வியாதிகள் அடக்கமாம்.பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம்.
முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள்.ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள்.அளவோடு சாப்பிடுங்கள்.உடலும்,மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும்.அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும்.அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும்.அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம்.
முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது.தண்ணீர், பால்,பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது.
வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும்.அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.உறவை பலப்படுத்தும்.எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல் உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித்தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது.இதுவே நல்ல துவக்கம்.முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும்.அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு ?


தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி. அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு.
சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு. குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும்.
அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர். அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம்.
சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு. நமது ஊர்களிலெல்லாம் செக்ஸ் உணர்வுகளால் தூண்டப்படும், தனிமையில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணிக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இருந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித்துள்ளனர்.

மர்ம உறுப்பு மயிரில் பேன்களா? (Adult- nymph& nits)



இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொற்றிக் கொள்கின்றன. இவற்றில் மூன்று வகை உண்டு. முதிர்பேன் (Adult ) இளம்பேன் (nymph) மற்றும் ஈர் (nits). முதிர்ந்த பெண் பேன், ஈர் அல்லது முட்டைகளை பாலுறுப்பில் உள்ள மயிரிலோ அல்லது தோலிலோ இட்டுவிடும். இந்த முட்டைகள் 7-14 நாட்களுக்குள் இளம்பேனாக அவதரித்து விடும். பேன்கள் மனித ரத்தத்தை உறிஞ்சியே உயிர் வாழும். இது தவிர, மனித உடம்பின் வெப்பம் மற்றும் சொரசொரப்பான தோல் பகுதியில் தான் இவை உயிர் வாழ முடியும். இவை தலை முடியில் வாழாது.
இது பரவும் முறை:
* இது பெரும்பாலும் பாலுறுப்புப்பேன் உள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு கொள்வதால் தான் தொற்றிக் கொள்கிறது.
* இந்தப் பேன்கள் உள்ளவர்களுடன் உங்கள் உடைகள், டவல், போன்றவற்றை பகிர்ந்து கொள்வது.
* இந்தப் பாதிப்பு உள்ளவர்களின் படுக்கையில் தூங்குவது.
* இந்த வகைப் பேன்கள் நாய், பூனை போன்ற மிருகங்களின் உடம்பில் வாழாது, அதனால் மிருகம் மூலமாக இது பரவ வாய்ப்பு இல்லை.
* மற்றவர்களின் வேர்வை, அல்லது நெருங்கி பழகுவதாலும் உங்களுக்கு தொற்றிக் கொள்ளக் கூடும். நீங்கள் மிகவும் அசுத்தமான இடங்களில் வசித்தால் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படலாம்.
பாதிப்புகள்:
இந்தப் பேன்கள் ரத்தம் குடிப்பது, மற்றும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு எந்த நோயையும் தராது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூன்றில் ஒரு பங்கு இந்த பேனுள்ள மக்களுக்கு, மற்றொரு பால்வினை நோயாலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இதனால் உங்களுக்கு இந்த பேன்கள் இருந்தால் மற்ற பால்வினை நோய்கள் இருக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. இதே போல ஒரு சிறுவனோ சிறுமிக்கோ இந்த வகைப் பேன்கள் தாக்கி இருந்தால் அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு (பலாத்காரம்) உட்படுத்தப் பட்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இது போல இல்லாவிட்டாலும், இதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்த சிறுவன்/சிறுமியை தீர விசாரிப்பது நல்லது.
நிவாரணம்:
* முதலில் உங்களைத் தொற்றி இருப்பது இந்த வகைப் பேன்கள் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.நல்ல வெளிச்சமும், ஒரு கண்ணாடியையும் வைத்து, ஒரு பேனை பிடுங்கி, உற்று கவனியுங்கள். அது கிட்டதட்ட ஒரு சின்ன நண்டு போலவே இருக்கும்.
* நீங்கள் மருத்துவரை அணுக வேண்டுமா என்று யோசியுங்கள். மருத்துவர் உதவி இல்லாமல் நீங்கள் இந்த பேன் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்றாலும், உங்களுக்கு வேறு பால்வினை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவரை அணுக முடிவு செய்தால், நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
* நீங்கள் மருந்துக் கடைக்கு சென்று Permethrin 1% pyrethrins சேர்ந்த லோஷன் வாங்கிக் கொள்ளுங்கள். இது கிடைக்காவிட்டால், சாதாரண லோஷனாவது வாங்கிக் கொள்ளுங்கள்.
* இந்த பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்: கண்ணாடி, ரேசர் அல்லது முடி நீக்கும் கிரீம், நல்ல சீப்பு, நிறைய தண்ணீர், சோப்பு, நீங்கள் வாங்கி வந்த ஷாம்பு மற்றும் டவல்.
* முதலில் உங்கள் உறுப்பில் உள்ள முடிகளை ரேசரை வைத்தோ அல்லது கிரீமை வைத்தோ முற்றுமாக நீக்கி விடுங்கள். முக்கியமாக உங்கள் ஆசன வாய்க்கு (குண்டி) அருகே உள்ள முடிகளையும் கவனமாக நீக்குங்கள். உங்கள் அக்குள், வயிறு போன்ற இடங்களில் இந்த பேன்கள் இருப்பதாக சந்தேகித்தால், அவற்றையும் நீக்கி விடுங்கள்.
* இப்போது நீங்கள் வழித்த ரோமத்தை கவனமாக தண்ணீரில் போட்டு ப்ளஷ் செய்து விடுங்கள். இது போல செய்யாவிட்டால், இந்த பேன்கள் மற்றவர்களையோ அல்லது உங்களையோ திரும்ப அணுக வாய்ப்பு உண்டு.
* உங்கள் உறுப்புப் பகுதியை நீங்கள் (சுடு) நீரில் அரை மணி நேரம் முக்கி வையுங்கள். உங்கள் வீட்டில் பாத் டப் இல்லையென்றால் ஒரு பெரிய வாளியை உபயோகப் படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம், கிட்ட தட்ட எல்லா ஈர்களையும் நீங்கள் ஒழித்து விடலாம்.
* இப்போது நீங்கள் வெளியே வந்து, நன்றாகத் துவட்டிக் கொண்டு, கண்ணாடி மற்றும் வெளிச்சத்துடன் இன்னும் பேனோ அல்லது ஈரோ தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அவற்றை பிடுங்கி எறியுங்கள்.
* இப்போது லோஷனை தடவிக் கொள்ளுங்கள்.
* உங்கள் படுக்கைத் துணிகள், மற்றும் தலையணை உறை ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, புதிதாக அவற்றை வாங்கி உபயோகப் படுத்துங்கள். குறைந்தபட்சம், அவற்றை வெந்நீரில் துவைத்து, பின் உபயோகப் படுத்துங்கள்.
* இப்போதைக்கு நீங்கள் இந்தப் பேன்களை ஒழித்து விட்டீர்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்கு, தினமும் உங்கள் உறுப்பை நீங்கள் உற்றுக் கவனியுங்கள், ஏனெனில் ஒரே ஒரு பேன் உயிரோடு இருந்தால் கூட, அது தினமும் ஆறு முட்டைகளை இட்டு, பன்மடங்காக பெருகி விடும்.
* இரண்டு வாரங்களுக்கு யாரோடும் உடலுறவு கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களுக்கு இதைப் பரப்புவதை தவிர்க்கலாம்.

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?


விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.
ஒரு சுவாரஸ்யமான மாறுதல்.சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஹார்மோன் செய்வது என்ன வென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி அடைவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது.முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருது வாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.
இதற்குப் பிறகுதான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண் குறியின் அடிப்பகுதியிலும் விதைப் பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்பு மயிர்தான். இத னைக் கண்டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.
சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?
இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம் பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.
பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதையூடாக வெளி வருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி – இன்ப அதிர்ச்சி ஆகியவை யில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபி த்து விடுகிறது. விந்து வெளியே றியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. சில வேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.
பதினான்கு வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. ஆனால் ஆண் குறியும் விதைப்பையும் வளர்ச்சியுற்ற போது போலக் கருநிறம் அடைவதில்லை.இதே காலக்கட்டத்தில் பூப்புமயிர் கருமையாகும் போது சுருளுகிறது.
உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறுகிறது?
முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில்தான் வேகத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. இது வரை மிக மிக வேகமான வளர்ச்சியை அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதினைந்தரையாகும் போது வளர்ச்சி முற்றுப் பெறுகிறது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமை நிறமாகிறது.பூப்புமயிர் தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து வயிற்றின் கீழப் பகுதி தொப்புள் வரை பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியிலும் நடைபெறும்.அநேக பையன்களுக்கு அவர்களின் கால்களிலும், கை அக்கிளிலும், தோள்களிலும் முதுகுகளி லும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும்.
பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?
சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்க ளிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசை யின் பிறபகுதியிலும் இறுதியாக நாடி ப்பகுதியிலும் வளரத்தொடங்குகிறது.
பதினாறு பதினேழு வயதை அடைந்த பிறகும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு இத்தகைய திடீர் வளர்ச்சி காணப்படாவிட்டால் பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது.உங்களுக்கு சில ஹார்மோன் மருந்துகளைச் பரிந்துரை செய்வார்கள்.

விரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்

தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறேன் என நல்லா சாப்பிட்டாச்சா ? அது பற்றி கொஞ்சம் குற்ற உணர்வு வேறு இருக்கா? வாங்க உடல் எடை குறைப்பது பற்றி கொஞ்சம் பேசுவோம் !
************
உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் " பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது" ! இது பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை குறிப்பு எடுத்து உங்களோடு இங்கு பகிர்கிறேன்: 

அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த  முறை "பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி.  இம்முறையை அமெரிக்காவின் "Agriculture and Food and Drug Administration" அங்கீகரித்துள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் !

இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :

முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக 

இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.

மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)

நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம் 

ஐந்தாம் நாள் : 

காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி. 

இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி. 

நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் 

ஆறாம் நாள்: 

காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள் 

இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். பீப் (மாட்டு கறி)

ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு 
உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !

எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !

இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும். 

அதே பத்திரிக்கையில் இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:

காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம் 

காலை உணவு: Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும். 

காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்

மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம் 

நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை 

எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும் 

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும். 

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .

*******
"வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? "என கேட்கிறீர்களா?  ஆம் எனில் நீங்கள் என் இனம் ! ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !

இந்த இரு வழிகள் தவிர, நான் நேரடியே ( First hand experience ) உடல் குறைக்க முயன்ற இன்னொரு வழியை ( ஜிம் இல்லை !) இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன் !
*****

சுய இன்பம் – வாழ்க்கைக்கு தேவை ஏன்?


சுய இன்பம் – வாழ்க்கைக்கு தேவை ஏன்?
உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும்.
“அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடையும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள்.
சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப்படவேண்டிய விஷயம் அல்ல.உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.
இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
1) 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
2) 75% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.
நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.
நீங்கள் தினமும் பலமுறை சுய இன்பம் அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு சுய இன்பம் அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள்
குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான்.
நீங்கள் கீழ் கண்டவாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:
1) பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.
2) நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.
3) உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது பருப்பையோ (கிளிடோரிஸ்) தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.
4) விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப் படுத்துவதோ படு சாதாரணமான விஷயம் என்று சொல்லத் தேவை இல்லை.
ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை. இது உங்கள் ஆண்மையை பெருக்கவே செய்கிறது. நீங்கள் கை அடித்தால், உங்கள் உறுப்பு பாதையில் உள்ள பழைய விந்துக்களை வெளியேற்றி, புதிய, மேலும் அதிகம் சீறிப் பாயக் கூடிய விந்து தயாராகிறது. இதனால், கர்ப்பம் அடைய வாய்ப்புகள் கூடுமே தவிர, குறைவதில்லை.
இங்கிலாந்து அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா? பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான்.

மார்பகம்(முலைகள்)


மார்பகம்(முலைகள்)
மார்பகம் என்பது பெண் பாலூட்டிகளில் காணப்படும் முக்கியமான உறுப்பு. பிறந்த குழந்தைகளுக்கு உணவாகப் பாலை உற்பத்தி செய்து வழங்குவது இதன் தொழிலாகும். பல பண்பாடுகளில் பெண்கள் மார்பகங்களை மறைத்து உடை அணிவதே பண்பாட்டுக்கு ஒத்தாகக் கருதப்படுவதுடன் சமூகத்தினால் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பழங்குடி மக்களிடையே மார்பகங்களை மூடி உடையணியும் வழக்கம் இல்லை. ஆண் பாலூட்டிகள் குட்டிகளுக்குப் பாலூட்டுவது இல்லையாதலால் அவற்றுக்கு வளர்ச்சியடையாத மார்பகங்களே உண்டு.
வளர்ச்சியும் வடிவமும்
சிறுமிகளுக்கு மார்பகங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கின்றன. அவர்கள் பூப்பெய்திய பின்னரே மார்பகங்கள் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இவற்றின் வடிவங்கள் பல்வேறுபட்டவையாக அமைகின்றன. இதற்கு மரபியற் காரணிகளும், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களின் அளவும், நொதியங்களும் காரணமாக அமைகின்றன.
குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மார்பகங்கள் தளர்வடையத் தொடங்குகின்றன. குழந்தைகளுக்குப் பாலூட்டுவது இதனை விரைவுபடுத்தும் என்ற கருத்து நிலவினாலும், சில ஆய்வு முடிவுகள் இதனை மறுக்கின்றன. மார்பகங்களின் அளவு, கருவுற்ற தடவைகள், உடல் நிறைச் சுட்டெண், புகை பிடித்தல், வயது என்பன இவை தளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அமைப்பு
மார்பகத்தின் ஒரு பகுதி சுரப்பியாகும். இது குழந்தை பெற்ற பெண்களில் அவற்றுக்கு உணவளிப்பதற்காகத் பாலை உற்பத்தி செய்கிறது. தாயின் மார்பகங்களில் உற்பத்தியாகும் பால் தாய்ப்பால் எனப்படுகின்றது. தாய்ப்பாலே குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.
மார்பகமொன்றின் வெட்டுத் தோற்றம்
1 – மார்புச் சுவர், 2 – மார்புத் தசைநார்கள், 3 – பால் சுரக்கும் சுரப்பி, 4 – முலைக் காம்பு, 5 – முலைக் காம்புத் தோல், 6 – பாற்குழாய், 7 – கொழுப்பு, 8 – தோல்

காமத்தினால் உடலில் நடக்கும் மாற்றங்கள் – Human Sexual Response Cycle


ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ காம இச்சை தோன்றினால், அது நான்கு நிலைகளை அடையும்.
இதை மொத்தமாக ஆங்கிலத்தில் ” “Human Sexual Response Cycle” என்று சொல்லுகிறார்கள். அந்த நிலைகள்:
1. துண்டப்படுதல் நிலை (Excitement Stage)
2. சம நிலை (Plateau Stage) இந்த நிலையில் நீங்கள் சீராக உட
லுறவு செய்து கொண்டிருப்பீர்கள்.
3. உச்ச கட்டம் (Orgasm Stage)
4. முடிவுற்ற நிலை (Resolution Stage). இந்த நிலையில் உங்கள் உடல் காம இச்சை தீர்ந்து, சகஜ நிலைக்கு திரும்பி வந்து விடும்.
அடிப்படைக் காரணங்கள்:
* பார்வை மூலமாக காம வயப்படலாம், உதாரணமாக தமிழ் டர்ட்டி பார்ப்பது.
* தொடுதல் மூலமாக காம வயப்படுவது. உதாரணமாக, தொடுவது, முத்தம் கொடுப்பது, தடவுவது.
* செவி மூலமாக காம வயப்படுவது. உதாரணமாக பக்கத்து வீட்டில் உடலுறவு நடப்பதை கேட்பது போன்றவை.
1. துண்டப்படுதல் நிலை (Excitement Stage)
* உங்கள் காம நிலைகளில் இதுதான் முதல் நிலை. இதனால் உங்கல் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
* ஆண் பெண் இருவருக்குமே, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, வியர்வை வெளியேறல், மூச்சு வாங்குவது, தசை முறுக்கேறல் ஆகியவை அதிகரிக்கும்.
* பெண்களுக்கு, அவர்களின் முலைக் காம்புகள், கடினமாகி, விறைப்பாகி விடும்.
* பெண்களின் மார்பகம் சற்றே பெரிதாகி, மேலுடம்பில் உள்ள ரத்தக் குழாய்கள் புடைத்துக் கொண்டு விடும்.
* பெண்களின் புணர்புழையில் உள்ள தசைகள் பெரிதாகி, உறுப்புக்கு உள்ளே வழவழப்புத் தன்மை கூடும்.
* ஆணுருப்பு  பாதி நிலையிலேயோ, அல்லது முழுமையாகவோ விறைத்துக் கொள்ளும்.
* ஆண்களின் விதைப் பைகள் மேல் நோக்கி ஏறி காணப்படும்.அதே போல விதைப்பைகள் இறுகி, ஒரு பந்து போல ஆகி விடும்.
2. சம நிலை (Plateau Stage):
இந்த நிலை தூண்டப்படுதல் நிலை முடிந்ததும் தொடங்கி விடும். இந்த நிலையில் நீங்கள் சீராக உடலுறவு செய்து கொண்டிருப்பீர்கள்.
உங்களை அறியாமல் நீங்கள் வாய் மூலமாக சத்தம் போடுவீர்கள்.
பெண்களின் கிளிட்டோரிஸ் (clitoris) உள்ளே அடங்கி விடும்.
ஆண்களின் உறுப்பில் இருந்து முந்து-விந்து திரவம் (Pre -ejaculation ) வெளியேறும்.
3. உச்ச நிலை (Orgasm Stage) :
மற்ற எல்லா நிலைகளை விட, இந்த நிலை ரொம்ப குறுகிய நேரமே நடக்கும். பெண்களுக்கு பல உச்சகட்டங்கள் தொடர்ந்து நேரலாம்.ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. ஆண்களுக்கு ஒரே முறை தான் உச்சம் ஏற்படும், அது விந்து வெளியேறும் போது தான் நடக்கும்.
* உங்கள் மூச்சு, இதயத் துடிப்பு, வியிர்வை சுரத்தல் போன்றவை மிக அதிகமான அளவில் இருக்கும்.
* பெண்ணின் உறுப்பும், உள்ளே இருக்கும் கருப்பையும் (Uterus) இரண்டுமே குறுகும் (கருப்பிடிப்பதற்காக) .
* ஆண்களுக்கு விந்து வெளியேறும். இந்த விந்து வெளியேறுவது ஒரே முறையில் இல்லாமல், விட்டு விட்டு வெளியேறும். இதனை ஆங்கிலத்தில் (Waves Of Ejaculation) என்று சொல்லுவார்கள். சாதாரணமாக ஆணுக்கு மூன்று முறை விட்டு விட்டு விந்து பீய்ச்சி அடிக்கும். முதல் இரண்டு முறையில் தன் மிக அதிகமாக விந்து வெளியேறும்.
* தசைகள் உங்களை அறியாமல் முறுக்கேறி(Involuntary Contraction), தசைப்பிடிப்பு ஏற்படலாம்.நீங்கள் கத்தவோ, முனகவோ வாய்ப்பு அதிகம் உண்டு.
4. முடிவுற்ற நிலை (Resolution Stage):
* உங்களுக்கு உச்ச கட்டம் முடிந்ததும், ஒரு சாந்தமான, சுகமான உணர்வில் இருப்பீர்கள்.
* ஆண்களுக்கு, குறி விறைப்புத் தன்மை நீங்கி, தொங்கும் நிலைக்கு வந்து விடும்.
* பெண்களுக்கு, பெண்ணுறுப்பு புடைப்பு நீங்கி, சாதாரண நிலைக்கு வந்து விடும்.
* இருவருக்குமே, மூச்சு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை சகஜ நிலைக்கு வந்து விடும்.
* ஆண்களால் உடனே காம நிலைக்கு திரும்ப முடியாது, மறுபடி காம நிலைக்கு திரும்ப கொஞ்ச நேரம் பிடிக்கும் (refractory time). ஆனால்
* பெண்களால் , உடனே காம நிலைக்கு திரும்பி, காமத்தோடு செயல்பட முடியும்.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? – ஆணுறுப்பு பெரியதாக இருந்தால் தான் அதிக இன்பம் கிடைக்குமா


 ஆண்மை பறிபோகுமா?
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும்,தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது,ஆணுறுப்பு சிறுத்து விடும்,சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம்பரம் செய்கிறார்கள.இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது.அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது.சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி,அணுறுப்பில் சுருக்கம்,பால்வினை நோய்கள்,விந்து நீர்த்து போதல்,மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது.
இதனை மேலும் உறுதி படுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன் பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்னவென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திரக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரணங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம்.ஆண்களின் விரையில் சிலருக்கு வொரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.
ஆணுறுப்பு பெரியதாக இருந்தால் தான் அதிக இன்பம் கிடைக்குமா…?
ஆணுறுப்பு மிக நீளமாக இருந்தால் தான் செக்ஸில் முழு இன்பம் அனுபவிக்க முடியும் என்று நினைப்பதே ஒரு முட்டாள்தனமான எண்ணம்.ஒரு ஆணுக்கு உடல் உறவின் போது மூன்று அங்குலம் நீள ஆண்குறி இருந்தால் மட்டுமே போதும்.உறுப்பின் நீளம் முக்கியமில்லை,உடல் உறவில் மிக மிக முக்கியமானது ஆணுறுப்பின் வீரிய மிக்கவிரைப்பு தன்மைதான்.விரைப்புத் தன்மையில் குறைபாடு இருந்தால் தான் கவலை கொள்ள வேண்டும்.

ஆண் குறியை பெரிதாக்க வழிகள் – (Penis Pump)


மாத்திரைகள் :
இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின் சி, மற்றும் எல்-அர்ஜினைன் (L-Arginine). மேலும் , நல்ல தரமான மருந்துகள் அவற்றின் உட்பொருட்களை குடுவையின் மேலேயே பதிவு செய்திருப்பார்கள். அவற்றைப் படித்து, அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது என்று பாருங்கள்.
களிம்புகள் (கிரீம்):
ஆண் குறியைப் பெரிதாக்க நிறைய களிம்புகள் விற்கப்படுகின்றன. இவை ஆண் குறியின் நீளம் மற்றும் அகலத்தை அதிகப் படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இவை நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வைக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்தக் களிம்புகளை தினமும் ஆண்குறியின் மேல் மென்மையாக தடவிக் கொள்ள வேண்டும். தடவிய பின் லேசாக சூடாகவும், இதமாகவும் இருக்கும்.
பட்டைகள் (Patches):
மேல் நாடுகளில் இப்போது புதிதாக வந்திருக்கும் ஒரு விற்பனைப் பொருள் ‘penis enlargement patch’ . அதாவது ஆணுறுப்பு பெரிதாக ஒரு விதமான பட்டை விற்கப் படுகிறது. இந்த பட்டை காயத்திற்கு அடி பட்டால் போடப்படும் பட்டி (band aid) போல இருக்கும். அதை நீங்கள் உங்கள் அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டால் போது, அதில் உள்ள மருந்துப் பொருட்கள் உடலால் உறிஞ்சப் பட்டு, உங்கள் ஆண் குறி பெரிதாகும். இந்தப் பட்டையை கிட்டத்தட்ட 48-72 மணி நேரம் வரை தினம் அணிந்து விட்டு, பின்பு எறிந்து விட வேண்டும். பிறகு வேறு ஒரு பட்டையை அணிந்து கொள்ள வேண்டும்.
கருவிகள்:
* ஆணுறுப்பு பெரிதாகச் செய்யும் பம்புகள் (Penis Pump)
* நீளமாக்கும் கருவி (Penis Extenders)

பருவம் அடைந்த பெண்களுக்கு என்ன உணவு தேவை?


பருவம் அடைந்த பெண்களுக்கு என்ன உணவு தேவை?
பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ்சள்… இப்படி பொங்கலுக்கு பயன்படுகின்ற அத்தனை பொருட்களும் மனிதனை பாதுகாப்பதில் முக்கிய இடம் இருக்கிறது. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகையின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்.
”தமிழர்களின் கலாசாரத்தோடு கருப்பட்டிக்கும், சர்க்கரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் பாட்டனும், பூட்டனும் தங்கள் தேகத்தை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள இவற்றைத்தான் அதிகமாகச் சாப்பிட்டார்கள். கருப்பட்டி உடலுக்கு வலிமையை யும், குளிர்ச்சியையும் தரவல்லது. அன்றாட உணவில் கருப்பட்டியைச் சேர்த்துக் கொண்டால்… எலும்புத் தேய்மானம், மூட்டுவலி, கருப்பைக் கோளாறு, தசைப்பிடிப்பு,பல் சம்பந்தமான நோய்கள் அண்டாது. காரணம், கருப்பட்டியில் இருக்கும் கால்சியம் சத்துதான்.
தினசரி மிச்சமாகும் சோற்றில் தண்ணீர் விட்டு வைப்பது நம் வீடுகளில் வழக்கம். இதை ‘நீர் ஆகாரம்’ என்பார்கள்; சித்த மருத்துவத்தில் ‘நிசிநீர்’ என்போம். அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததும் இந்த நீர் ஆகாரத்தை ஒரு மடக்கு குடித்துவிட்டு, கருப்பட்டியை ஒரு கடி கடித்துக் கொள்வார்கள். இது, உடல் சோர்வை ஓட ஓட விரட்டி விடும். பின்னர் வயல் வரப்பில் எவ்வளவுதான் உடலை வருத்தி வேலை செய்தாலும் களைப்பே தட்டாது. கைக்குத்தல் அரிசியையும், கருப்பட்டியையும் கலந்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ‘வைட்டமின் பி’ சத்து அதிகமாகக் கிடைக்கும்.
கருப்பட்டி கலந்த எள்ளுருண்டையை குழந்தைகளுக்குத் தயார் செய்து கொடுக்கலாம். இது ருசியாக இருப்பதுடன், சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் பல் சொத்தை போன்ற எந்தத் தொந்தரவையும் தராது. சுக்கு கருப்பட்டி, கருப்பட்டி பணியாரம், சத்துமாவு போன்ற பாரம்பரிய உணவுகள், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகமாக்கும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி செய்து கொடுக்கலாம். இது அவர்களின் இடுப்புக்கும், கருப்பைக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுக்கு, மிளகு, கடுகு, வெந்தயம், ஓமம் உள்பட 11 மருத்துவ குணங்கள் கொ ண்ட மூலிகைகளோடு கருப்பட்டி அல்லது சர்க்கரையை சேர்த்துக் கொடுத்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாவதுடன் கருப்பைக்கும் பலத்தைத் தரும்.
”சர்க்கரையும் அதி அற்புதமான மருந்துதான். வாந்தி, பித்தம், நாக்கு சுவையின்மை இவற்றைப் போக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கும் ஜலதோஷத்தை போக்குவதற்கும் பாரம்பரியமாகவே தமிழர்கள் சர்க்கரைப் பாகைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சர்க்கரைக்கே இவ்வளவு சத்து இருக்கும் போது, அதன் மூலப் பொருளான கரும்பில் எவ்வளவு இருக்கும்? தொடர்ச்சியாக விக்கல் உள்ளவர்களுக்கு மூன்று சொட்டு கரும்புச் சாறைக் கொடுத்தால் அது நின்று விடும். மஞ்சள்காமாலை நோய் வந்தவர் கள் கரும்புச் சாறு குடித்தால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.
சீஸனில் மலிந்து கிடக்கும் சிறுகிழங்கு, மூக்கிழங்கு, சீனிக்கிழங்கு, குடி கிழங்கு , கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு என்று அத்தனையும் சத்தான சமாசாரங்களே..! இவற்றையும் பொங்கலோடு சேர்த்துச் சமைத்து மரியாதை காட்டுகிறார்கள் தமிழ் மக்கள்.
”விவசாயத்தையும், விவசாயிகளையும் தாங்கிப் பிடிக்க தமிழர்கள் தந்து விட்டுச் சென்றிருக்கும் பண்டிகைதான் பொங்கல். அதைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில், பாரம்பரிய உணவுகளையும் ஆண்டுக்கு ஒரு முறை சமைப்பது என்று நம்முடைய உணவையும் மாற்றிக் கொண்டுவிட்டோம். இனியாகிலும்… அடிக்கடி இத்தகைய உணவுகளை சமைப்போம்… நம் உடல் நலத்தை உறுதியாக்குவோம்!

Wednesday, October 3, 2012

வெற்றி :-======கடமையை செய்தால் வெற்றி,கடமைக்கு செய்தால் தோல்வி.இஷ்டப்பட்டு செய்தால் வெற்றி,கஷ்டப்பட்டு செய்தால் தோல்வி.பொறுப்பாய் செய்தால் வெற்றி,வெறுப்பாய் செய்தால் தோல்வி.ஆவலாய் செய்தால் வெற்றி,பாவலா செய்தால் தோல்வி.வியர்வை சிந்தினால் வெற்றி,அயர்ந்து தூங்கினால் தோல்வி.சிரத்தையாய் செய்தால் வெற்றி,அரட்டை அடித்தால் தோல்வி.ஊக்கத்தோடு உழைத்தால் வெற்றி,ஏக்கத்தோடு நின்றால் தோல்வி