Sunday, June 17, 2012


அழிய மறுக்கும் பைல்களை அழிப்பதற்கு
சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படுகையில் அது அழிய மறுக்கும். கீழ் காட்டப்படும் செய்தியில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.
Cannot delete file: Access is deniedThere has been a sharing violation.The source or destination file may be in use.The file is in use by another program or userMake sure the disk is not full or write –protected and that the file is not currently in use.
பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற வகையில் செய்திகள் கிடைக்கலாம். 
அழிக்க மறுக்கையில் மட்டுமன்றி, பைலுக்கு வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும். இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்தச் செய்தி எதனால் வருகிறது என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது அன்லொக்கர் (unlocker) என்னும் புரோகிராம். 
இதனை http://page2rss.com/page?url=ccollomb.free.fr/unlocker/ என்ற தளத்தில் பெறலாம். 
இந்தப் பைலை இலவசமாக இணையத்தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டோல் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், அன்லொக்கர் புரோகிராமை, அந்தப் பைலின் பெயர் அல்லது ஃ போல்டரின் பெயரில் ரைட் க்ளிக் செய்து இயக்கத்திற்கு கொண்டுவரலாம்.
அப்போது அந்தப் பைலை ஃ போல்டரை அழிக்கவிடாமல் தடுக்கும் லொக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில் Unlock என்பதில் க்ளிக் செய்தால் , அனைத்து லொக்கர்களும் விலக்கி கொள்ளப்பட்டு,பைல் அழிக்கப்படும் அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழிகிடைக்கும். 

No comments: