Monday, August 20, 2012

தற்கொலைக்குத் தூண்டும் மன அழுத்தம்





நேரத்துக்கு தக்கவாறு மனநிலை மாறுதல் சாதாரனம். ஆனால் வெறுமையும் நம்பிக்கையின்மையும் மனதை சூழ்ந்து கொண்டு மனதை விட்டு அகலாவிட்டால் அது மன அழுத்தம் ஆகும்.
நம் வேலைத் திறனும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் மன அழுத்தத்தால் தொலைந்து போகும் என்பது நிச்சயம். .நண்பர்களையும் பிடிக்காது. பொழுது போக்கும் பிடிக்காது. அதிகம் சோர்வடைவீர்கள். ஒரு நாள் பொழுது கழிவதே கடினமாக உணர்வீர்கள். நம்பிக்கையின்மையும் கவலையும் அதிகரிக்கும். ஆனால் அன்பும் ஆதரவும் கிடைக்கம்போது சற்று நன்றாக உணர்வீர்கள்.ஆகையால் மன அழுத்தம் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடப்பதே அதனின்று விடுபட சிறந்த வழியாகும்.
நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள்,,தோல்விகள், நம்பிக்கை துரோகமும் நமக்கு கவலையும் சோகத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தும். ஆனால் மன அழுத்தம் என்பது இதைவிட மேலான சமாச்சாரம். மன அழுத்தம் கொண்டவர்கள் இருட்டு குகையில் வாழ்வதாகவே அர்த்தம். ஆனால் சிலர் விசனப்படமாட்டார்கள். அவர்கள் வெறுமையில் வாழ்க்கையே இல்லை என நிணைத்துக் கொண்டு உணர்ச்சியற்று எதிலும் அக்கறையில்லாத நிலையில் இருப்பர்.
ஆண்கள் அதிகம் கோபப்படுவார்கள், படிப்பு, வேலைத்திறன், சாப்பாடு, தூக்கம், சந்தோசம், ஜாலி எல்லாமே போய்விடும். அட மொத்தத்தில் செத்துப் போகலாமுன்னு தோனும்
யாருமே உதவமாட்டார்கள் என்ற மன நிலையும் தான் எதற்குமே உதவ மாட்டோம் என்றும் தனக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் சின்ன விஷயங்களை பெரிது படுத்தியும் நிணைப்பர். என்ன நண்பர்களே மனசுக்குள்ளே எங்கேயோ லேசா பயம் வருதா.


கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதென அறிவீர்
அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை
கவனமின்மை இதற்குமுன் சுயமாக செய்த வேலைகள் இப்போது முடியாமல் போகும்.
நம்பிக்கையின்மையும் யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்ற ஏக்கமும் ஏற்படும்
பசி இருக்காது அல்லது அதிகம் சாப்பிடுவீர்கள்
எதிர்மறையான எண்ணங்களை நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கட்டுப்படுத்த முடியாது.
எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவீர்கள், சின்ன விஷயத்துக்கும் ஆவேசம் அடைவீர்கள்
வாழ்க்கை அர்த்தம் அற்றது என நிணைப்பீர்கள்
அதிகமாக மது அருந்துவீர்கள், அதிக முறை உடலுறவில் ஈடுபட முணைவீர்கள் அல்லது நாட்டமே இருக்காது.
விவரிக்க முடியாத வலிகள்; தலைவலி, முதுகு வலி, சதை வலி வயிற்றுவலி போன்றவை வரும்.


பெண்களுக்கு மன அழுத்தம் 2 மடங்கு அதிகம் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். மாத விடாய்க்கு முன் மன அழுத்தமும் பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தமும் அதிகம் உண்டு.
மன அழுத்தங்களில் ஏடிபிகல்(atypical), டிஸ்த்மியா(dysthemia), என. பல வகை உண்டு பருவநிலை மாறுபாட்டால் மனஅழுத்தம்(seasonal affective disorder) குளிர்காலங்களில் வரும். அதற்கு வெளிச்ச சிகிச்சை(light therapy) உண்டு. பைபோலார் மன அழுத்தம்(bipolar depression) மிகவும் மோசமானது.
சிகிச்சை பல நோய்களுக்கு நேரடியாக மருத்துவம் உண்டு. ஆணால் மன அழுத்தம் அப்படியல்ல. அது ஒரு உயிரியல்,மனோதத்துவம் மற்றும் சமூகம் சம்பந்தப்பட்டது. ஒருவருடைய லைப்ஸ்டைல் மற்றும் மரபனு கூட மன அழுத்தம் உண்டு பண்ணும்.

No comments: