அது இருப்பவனுக்கு இது இருக்காது இது இருப்பவனுக்கு அது இருக்காது. அது இருக்கும் போது இது இருக்காது . இது இருக்கும்போது அது இருக்காது.அது இருப்பவனுக்கு இதுவும் இருந்து ,இது இருப்பவனுக்கு அதுவும் இருந்துவிட்டால் அவன் அதிர்ஷ்ட சாலி.அது இருக்கும் போது இதுவும் இருந்து, இது இருக்கும்போது அதுவும் இருந்தால், அவன் பூரணமான அதிர்ஷ்ட சாலி.
இதுவரை நான் சொன்னது என்னவென்று தங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் தமிழ் படமே பார்ப்பதில்லை என்று அர்த்தம். அது என்பதற்கு உடலுறவுக்கான வாய்ப்பு என்று அர்த்தம்.இது என்பதற்கு உடலுறவு கொள்ளும் சக்தி. என்று அர்த்தம்.
இதிலேதும் பெரிய தத்துவமோ, குழப்பமோ கிடையாது. எது ஒன்றுமே நான் அவெய்லபிள் எனும்போது தான் அதன் மீதான நாட்டம் உச்சத்தில் இருக்கும். அவெய்லபிள் எனும்போது அதன் மீதான கவர்ச்சி நாட்டம் ஆட்டோமேட்டிக்காக குறைந்து விடும்.
இதைதான் பழக பழக பாலும் புளிக்கும் என்று பழமொழி கூறுகிறது. தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுடிலிட்டி என்று எக்கனாமிக்ஸ் கூறுகிறது. “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் ஒரே சினேரியா தான். என்னதான் 30 வயதில் கல்யாணமானாலும் 20 வருசம் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.
இதில் பெண்ணானால் மாதவிலக்கு,அபார்ஷன்,பிரசவம்,சிசேரியன் இத்யாதி உபரி இழப்புகளுடன், ஆணும் பெண்ணும் ஸ்லோ பாய்சன் தனமாய் ரத்தத்தில் கலக்கும் முதுமை (கிழட்டுத்தனம்), சரீர பலகீனம்,வாழ்க்கை மீதான பார்வை மாற்றம் இத்யாதியுடன் ஒரே மனிதனுடன் (ஒரே பெண் மணியுடன் ) 20 வருஷம் கழிப்பதென்பது பொறுமையின் எல்லையை தொட்டுப்பார்க்க கூடிய அம்சம்.
ஏதோ பிள்ளை,குட்டி,பேயிங்க் கஸ்ட், சம்மரில் வந்து போகும் உறவினர் குழந்தைகள் ,கடன் காரர்கள் தவிர்த்துப்பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப்போகும்.
கணவர்களுக்கு ந்யூஸ் பேப்பர், மனவியர்க்கு மெகா சீரியல்ஸ் இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
உலக கணவன் மனைவியரை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். ஒன்று பிரிந்து விட்டவர்கள், இரண்டு பிரிய முடியாதவர்கள் (தைரியம் போதாதோ,வசதி போதாதோ,குழந்தைகள் எதிர்காலம் கருதியோ)
வாழ்க்கை என்பதே ஒன்றை மாற்றி ஒன்றை பிடிக்க முயன்று அனைத்தையும் இழந்து விடுவதே .மனித வாழ்வை காட்டிலும் அர்த்தமற்ற ஒன்று வேறில்லை.மனித வாழ்வில் எல்லாமே பொய்யாகவும் மரணம் ஒன்றே நிஜமாகவும் இருக்கிறது.
லௌகீக வாழ்வே வாழ்வு இதற்குமுன் பின் ஏதுமில்லை என்று முடிவு கட்டிவிட்டவர்கள் சீக்கிரமே ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். அதிலும் லௌகீக வெற்றிக்கு பின்னும் தொடரும் /அதிகரிக்கும் வெறுமைக்கு எதிராளியை (முக்கியமாய் தம் லைஃப் பார்ட்னரை ) பொறுப்பாக்கி விடுகிறார்கள்.
லௌகீகம் தவிர்த்து மற்றொரு வாழ்வு (அதை ஆன்மீகம் என்றாலும் சரி விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேடும் தேடல் என்றாலும் சரி) இருப்பதை உணர்ந்து வாழ்பவர்கள் இந்த லொள்ளிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.
இக உலக வாழ்வில் வாழ்வின் அர்த்தங்களை தேடி தேடி அதன் அர்த்தமற்ற தன்மையை அனுபவ பூர்வமாய் தெரிந்து கொள்வதே வாழ்க்கை. அகவுலக வாழ்வில் அடியெடுத்து வைத்துவிட்டாலே தாம்பத்யம் அதன் அச்சிலிருந்து விலகி ரொம்ப சின்னதாய் தோன்ற ஆரம்பித்துவிடும்
இந்த சின்ன பிரச்சினையை புரிந்து ரெக்டிஃபை பண்ண தெரியாமல்தான் , அல்லது சகித்துக்கொள்ள முடியாமல்தான் மகிளா (மகளிர்) போலீஸ் ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட் எல்லாம் நிரம்பி வழிகிறது. புதுமணப்பெண் தூக்கில் தொங்குகிறாள். கள்ளக்காதல் எதிரொலியால் வாலிபர் வெட்டிக்கொலையாகிறார்.
நான் ஒரு ஆண் என்பதால் என் பதிவுகள் எல்லாமே ஒர் ஆணின் கண்ணோட்டத்தில்தான் இருக்கின்றன. அதே கண்ணோட்டத்தோடு பெண்களுக்கு சில யோசனைகள் (சில வில்லங்கமானவையாகவும் இருக்கக்கூடும்) தருகிறேன்.
ஒரு அக்காவுக்கோ, தங்கைக்கோ இல்லே (நமக்கு அந்த குடுப்பினை இல்லை தலைவா!), ஒரு அம்மாவுக்கோ (1984லயே காலி) சொல்ல வேண்டிய விசயம்தான் இது. யதார்த்தத்துல சொல்லவும் செய்யறேன்.
பெண்கள்னா எல்லாரையும் ஒரே கொட்டில்ல அடைச்சுர முடியாது. ஆண்கள்ள பெண் தன்மை உண்டு. பெண்கள்ள ஆண் தன்மை உண்டு. . பெண் தன்மை கொண்ட ஆண் மனைவிக்கு சரி சமமான தோழனாக /தோழியாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இவன் பிரச்சினை என்று வந்தால் அதை எதிர்கொள்ள தடுமாறி மனைவியை தான் காய்வான். ஆண் தன்மை கொண்ட ஆணிடம் மனைவிக்கு இனம் புரியாத பயம் இருக்கும் . (இவர் எப்ப கொஞ்சுவாரு எப்ப கடிப்பாருன்னே தெரியாது) இவன் பிரச்சினை என்று வந்தால் என்னங்க சாயந்திரம் பால் நிறுத்திரவா என்று கேட்டால் “தபாரு .. இந்த பிரச்சினையெல்லாம் எனக்கு சம்பந்தபட்டது. நீ ஒன்னும் தோள் கொடுக்க தேவையில்லே. அதெல்லாம் நான் பார்த்துப்பேன். உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு என்பான். பெண்கள் தம் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களே முடிவு செய்யலாம்.
சாதாரணமா ஆண்களில் ஃபாதர்லி ஆட்டிட்யூட் இருக்கும். பெண்களில் மதர்லி டெண்டர் ஃபீலிங்ஸ் இருக்கும். பெண் தன் கணவனிலான ஆண் தன்மையை ஃபாதர்லி ஆட்டிட்யூடா நினைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாலும் பிரச்சினை வராது. உ.ம்: என்னடி இது ப்ளவுஸ் கட் பாதாளத்துக்கு போகுது அதே மாதிரி மனைவியில் உள்ள நச்சு கொட்டும் தன்மையை உம்:என்னங்க கேஸுக்கு எழுதி வைக்க மறக்காதிங்க மதர்லி நேச்சராக புரிந்து கொண்டாலும் பிரச்சினையில்லை.
சாதாரணமாக பெண்ணுக்கு அவளது தந்தை ஆதர்ச புருசராக இருந்திருப்பார். (அவருக்கு அப்போ 40 வயசா கூட இருந்திருக்கலாம்) அவருக்கிருந்த அதே பொறுமை, நிதானம், கேல்குலேட்டட் பிஹேவியர் 24 வயசு புருசனுக்கு இருக்கனும்னு எதிர்பார்ப்பாங்க இதனாலயும் பிரச்சினை வரும். அப்பா கிழட்டு புலி. கணவன் இளங்கன்றுனு புரிஞ்சிக்கிடனும். அதே மாதிரி ஆணுக்கு அவன் தாய் ஆதர்ச பெண்மணியாக இருந்திருப்பார். நாற்பது வயசுல அவர்க்கிருந்த அதே கைப்பக்குவம்,அதே சிக்கனம் 20 வயது மனைவிக்கும் இருக்கனும்னு எதிர்ப்பார்க்கிறது பேராசை.
உறவுகள் விசயத்துல பார்த்தா “அவருக்கு என்னைக்குமே எங்க சொந்தக்காரங்கன்னா அலட்சியம்”னு அவங்க சொல்வாங்க. “கல்யாணமாகி இத்தனை வருசமாச்சு இருந்தாலும் அவள் எங்க சொந்த காரங்களோட ஒட்டவே மாட்டேங்கிறா சார்” ன்னு அவர் சொல்வார். புருசன்,பொஞ்சாதிங்கறதையெல்லாம் தூர வச்சிட்டு யோசனை பண்ணுங்க. உங்களோட சின்ன வயசுல பழகின பத்து பேருக்கும், காலேஜ் லைஃப்ல பழகுன பத்து பேருக்கும், ஆஃபீஸ் கொலிக்ஸ் பத்து பேருக்கும் அவிகளோட உங்க ரிலேஷனுக்கும் வித்யாசமிருக்கா இல்லியா? மனித மூளை ஒரு வயசுக்கப்புறம் புது விசயங்களை ஏத்துக்க மறுத்துருது. பழைய விசயங்களோட எக்ஸ்டென்ஷனை வேணும்னா ஏத்துக்குமே தவிர, சர்வைவல் பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடிய விஷயங்களை ஏத்துக்குமே தவிர (உ.ம்: மேனேஜர் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ) மத்த விசயங்கள்ள அலட்சியத்த காட்டும். அப்படி பாலு நீருமா சேரனும்னா மறுபடி பால்ய விவாகத்துக்கு போக வேண்டியதுதான். இந்த விசயத்துல ஹவுஸ் வைஃப்க்கு இது சர்வைவல் பிரச்சினை என்பதால் ஓரளவு கணவன் பக்கத்து உறவுகளை கவர் செய்யவே முயல்வார் . முயன்றும் முடியாத விசயத்துக்கு காய்வது வேஸ்டுதானே.
என்னடா இது பதிவு ஆரம்பிச்சு பல பத்தி தாண்டியும் பலான சமாச்சாரமே காணோமேனு நினைச்சிங்கதானே.. வந்துட்டேன் ராசா. ஆயிரம் தான் மனிதன் பேண்ட் சட்டை போட்டாலும் , பெண் புடவை சுடிதார் போட்டாலும் உள்ளுக்குள்ள மிருகம் தான். அதுவும் காமம் ,பசி,உயிர் பயம் தாக்கும்போது அவன்/அவள் மிருகமாகிவிடுகிறாள் என்ன செய்ய? வீட்டில் கட்டி வைத்து வளர்க்கும் மிருகத்தை கு.ப. இயற்கை உபாதைகளை தீர்த்து கொள்ளவாவது உலவ விடுவதை போல உணவு, உயிர் பாதுகாப்பு,செக்ஸ் தேவைகள் நிறைவுற வேண்டும். இவற்றிற்கே பஞ்சம் வரும்போது மிருகம் சம்பிரதாய,சட்ட ,உறவு சங்கிலிகளை அறுத்துக்கொள்கிறது. இதில் ஆண்,பெண் என்ற வித்யாசம் ஏதுமில்லை. என்ன ஒரு வித்யாசம் என்றால் ராத்திரி இவன் கூப்பிட்ட போது மனைவி வரவில்லை என்றால் மறு நாள் என்னடி காபி இது மயிரு மாதிரி என்று மூஞ்சியில் அடிக்கிறான். இவள் செமை மூடில் இருக்க கணவன் டிவியில் எவளையோ பார்த்து கொண்டிருந்து விட்டு தூங்கிப்போனால் மறு நாள் ‘ஹும்..ஆயிரம் தடவை சொல்லியாச்சு கக்கூஸ்ல தண்ணி போக மாட்டேங்குதுன்னு ” என்பதில் புலம்பல் ஆரம்பித்து ப்ளாஸ்மா டிவியிலோ வேறு எந்த இழவிலோ போய் நிற்கும்.
கணவன் மனைவி தாம்பத்ய உறவு செழிக்க:
செக்ஸில் பெரும்பாலும் ஆண்தான் தூண்டுதல் தருபவனாக , முன்னோட்டம் தருபவனாக, செயல்படுபவனாக இருக்கிறான். எனவே ஆண் கு.ப செக்ஸ் கல்வியையாவது பெற்றிருக்க வேண்டும். ஒரு பெண் ( அட மனைவிக்குன்னு சொல்றேன் நீங்க கண்டவளுக்கு இதையெல்லாம் உபயோகிச்சு ஈவ் டீசிங்க் கேஸ்ல மாட்டிக்காதிங்க நான் பொறுப்பு கிடையாது) மூடில் இருக்கிறாளா இல்லையா என்பதை அறிய ஆண் நாய் போல அவள் ….ஐ முகர்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அகத்தின் அழகு முகத்தில் என்பது போல் யோனி உதடுகளின் நிலையை வாய் உதடுகளை வைத்தே கண்டு கொள்ளலாம். மினு மினுப்பும் தள தளப்புமாக இருக்கும்,உடம்பு லேசா சுடும்.( ஜுரமா கூட இருக்கலாம்) சுத்தமா இருப்பா.குளிச்சிருப்பா. சுமாரா மேக்கப் கூட போட்டிருப்பா.
( சாதாரணமா ஆக்டிவா,ஃப்ரெஷ்ஷா இருக்கிற பார்ட்டியா இருந்தா ஒரு மாதிரி டல்லா இருப்பாங்க ) உங்களை வெறுப்பேத்தக்கூடிய விசயங்களை எல்லாம் தவிர்ப்பாங்க.
நல்ல ஆரோக்கியமான உடலுக்கு செக்ஸ் எப்பவும் அலுக்காது. அதே சமயம் ஆரோக்கிய உடலும் இருந்து சூட்சும புத்தியுமிருந்தா கேள்விகள் எழும். இரண்டு மனதாகவே செக்ஸில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பது வேறு சங்கதி.
ஜெனரல் ஃபிட்னஸை பாதிக்க கூடிய விசயங்களை தவிர்த்துரனும். உம். மது, இதர மாது,மாவா,குட்கா,பான் பராக், கச்சா முச்சானு டீ சாப்பிடறது நொறுக்கு தீனி ,போதிய எக்ஸர்சைஸ் இல்லாமை
சனி 12 ராசிகளை கடக்க 30 வருசம் எடுத்துக்கறாரு. ஆனால் இதுல ஜாதகனுக்கு அவர் அனுகூலமா சஞ்சரிக்கிறது 10 வருசம் தான். சூரியன் 12 ராசிகளை கடக்க ஒரு வருசம்தான் எடுத்துக்கறாரு. ஆனால் இதுல ஜாதகனுக்கு அவர் அனுகூலமா சஞ்சரிக்கிறது நாலே மாசம் தான். சுக்கிரனும் ஒரு வருசத்துல 12 ராசிகளை கடக்கிறார்.ஆனால் இதுல இவரு ஜாதகனுக்கு 9 மாசம் அனுகூலமாக சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தான் பலான விசயத்துக்கு பொறுப்பு. சூரியன் பல் ,எலும்பு, முதுகெலும்பு,தலைக்கு அதிபதி.அவர் வருசத்துல 4 மாசம்தான் அநுகூலம். ஆனால் பல் ,எலும்பு, முதுகெலும்பு,தலை தொடர்பா அவதி படறவங்க குறைவு. செக்ஸுக்கு அதிபதியான சுக்கிரன் வருசத்துல 9 மாசம் அனுகூலமா சஞ்சரிக்கிறார். இருந்தாலும் ஆண்,பெண் ஒரே சமயம் உச்சம் எய்துவது துர்லபமாக இருக்கிறது. வெறும் தாம்பத்ய பிரச்சினையே வேறு வடிவங்களில் வெளிப்பட்டு டைவர்ஸ் வரை போகிறதென்றால் இதற்கு கிரகமா பொறுப்பு. இல்லை. சமுதாயம் பொறுப்பு.
இங்கே ஏறக்குறைய செக்ஸ் தடை செய்யப்பட்டுவிட்டது. எது ஒன்றுமே தடை செய்யப்பட்டால் தான் அதன் மீது ஆர்வம் மிகும். ஆர்வம் மிகுந்தால் செயல் திறன் பாதிக்கப்படும்.
எனவே இன்றைய இளைஞர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே “அது”என்னன்னு தெரிஞ்சுக்க ஒவ்வொரு செல்லும் துடிக்கிற வயசு இது. ஆனால் இந்த துடிப்பே “அது”ல உங்களை டம்மி பீசாயிரும் . ஸோ உஷார் !