Thursday, September 20, 2012


ஆண், பெண் காமஇச்சை பற்றி கணிகபுத்திரர் கருத்து...*

ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் பல வழிகளில் உண்டாகலாம் என்கிறது காமசூத்திரம். அவற்றில் காம இச்சையின் தன்மையைப் புலப்படுத்த சுமார் 10 காரணங்களையும் அது கூறுகிறது.
அவை.....

உடல் கவர்ச்சி
ஏக்கம்
தூக்கமின்மை
மனப்பற்று
உடல் மெலிதல்
வெறுப்பு
வெட்கமின்மை
குழப்பம்
மயக்கம்
உயிர் ஊசலாடுதல்....

ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் ஏற்பட்டால், அவனிடம் மேற்கூறிய இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும். அதை வைத்துப் புரிந்து கொள்ளலாம் என்கிறது காமசூத்திரம்.

இது தவிர, ஒரு பெண்ணின் உடல் அமைப்பையும், உடலில் உள்ள சில குறிப்பிட்ட அடையாளங்களையும் கொண்டே சில விஷயங்களைப் புரிந்து கொள்ளாலாம் என்கிறது காமசூத்திரம். அவை என்ன....?

விருப்பம்
கணவனிடம் காட்டும் பற்று
கற்பு

காம இச்சையில் தீவிரமானவளாக இருப்பாள். அல்லது ஆசை குறைந்தவளாக இருப்பாள். ஆனால் வேறு காமநுல் வல்லுநர்கள், பெண்ணின் உடல் அமைப்பு, மற்றும் அடையாளங்களைக் கொண்டு சாpயாகத் தீர்மானிக்க முடியாது என்கின்றனர். வேறு எப்படித் தெரிந்து கொள்வதாம்? அந்தப் பெண்ணின் நடத்தையைக் கொண்டே தீர்மானிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் அந்தந்தப் பருவத்தில் ஒரு வித இனக்கவர்ச்சி உண்டாவது இயற்கை தான். இதன் இயல்பைப் பற்றி கணிகபுத்திரர் என்ற காமசூத்திர வல்லுனர் என்ன கூறுகிறார் எனப் பார்க்கலாமா....

அழகான ஆடைகளை அணிந்து கவர்ச்சியான தோற்றத்துடன் இருக்கும் ஆணையே ஒரு பெண் விரும்புவாள். அதே போலத்தான் அழகான தோற்றத்ததையுடைய பெண்களிடமே ஆண்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள். ஆண்களிடம் கொள்ளும் மோகத்தை பெண்கள் அவ்வளவு சாதாரணமாக வெளிக்காட்டுவதில்லை. மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பின்னால் என்ன நிகழுமோ என்ற அச்சம்தான் என்கிறார் கணிகர். அதோடு அந்த ஆண் ஆசைகாட்டித் தன்னை மோசம் செய்து விடுவானோ என்ற பயமும் சேர்ந்து கொள்வதால் தான் ஒரு ஆணே தன்னை விரும்பி வந்தாலும் அவனைப் புறக்கணித்து விடுகிறாள் பெண் என்பது அவர் கருத்து.

No comments: