Showing posts with label helth. Show all posts
Showing posts with label helth. Show all posts

Thursday, June 21, 2012


ஜாதிக்காய் நேச்சுரல் வயகர

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:
ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

பட்டுக் கூந்தலை பெற வேண்டுமா?--அழகு குறிப்புகள்


பட்டுக் கூந்தலை பெறவேண்டுமா?

விளம்பரங்களில் வருவது போன்றபட்டுக் கூந்தலை பெற வேண்டுமா. 
இதோ சில கூந்தல் பராமரிப்புகுறிப்புகள் ;
ü ஒரு கை அளவு வேப்பிலைஎடுத்து நாலு கப் தண்ணீரில் நன்குகொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால்தலையை அலசி வந்தால் பொடுகுவராமல் தடுக்கலாம் .
ü வினிகரை தலையில் தடவிகுளித்து வந்தால் பொடுகுதொல்லை குறையும் 
ü சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் . 
ü வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூஇவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில்கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியைஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில்தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல். 
ü ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலைவறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .
ü அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர்உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
ü ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவிஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில்இருந்து விடுபடலாம்  
ü தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரைகலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டிகொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையைபேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண்தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .
ü முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும்உங்கள் கூந்தல் .
ü முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்தஉணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் . 
ü இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையேதடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல்தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசைஉள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
ü எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்லஎண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டுசிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவிசீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடிஉதிர்வதையும் தடுக்கலாம் .