Friday, September 14, 2012


சுயஇன்பம் பற்றி மாபெரும் அலசல் – 1 (முதலில் அனுபவித்தவர்)

 
விடலைகளின் விசயத்தில் எல்லோரும் கவணம் கொள்வதில்லை. நாளுக்கு நாள் இங்கு பாலியல் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அதைத் தடுக்க முடியாவிட்டாலும், தடுக்க முயற்சி செய்கின்ற தொடர்.
ஆண் குழந்தைகளின் முகத்தில் மீசை துளிக்க ஆரமிக்கின்ற நேரம், பாலியல் பற்றிய புரிதல்களும், தேடுதல்களும் தொடங்குகின்றன. அந்த தேடுதலின் விளைவுகளினால் நண்பர்களாலோ, தானாகவோ அவர்களுக்கு சுயஇன்பம் அறிமுகமாகிறது. ஆனால் அப்போதிலிருந்து அவர்களுக்குள் “சுயஇன்பம்” பற்றிய கேள்விகள் துளைத்தெடுக்க ஆரமிக்கின்றன.
இந்த பழக்கம் சரியானதா?.
நாம் மட்டும் தான் இதைச் செய்கிறோமா?.
பெண்களுக்கும் இப்பழக்கம் இருக்கிறதா?.
இதை வி்ட்டுவிட இயலுமா?.
தொடர்ந்தால் ஆண்மை பறிபோகுமா?.
ரத்தம் தான் விந்தனுவாக வெளியேறுகிறதா?.
இந்த உணர்வு ஏன் எனக்கு ஏற்படுகின்றது?.

இதெல்லாம் சிறு எடுத்துக்காட்டுதான். இது போல எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் விடை எளிதில் கிடைப்பதில்லை. இவை எல்லாவற்றிக்கும் விடையளிக்கவே இந்த தொடர். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஆதரவு தாருங்கள்.
சுயஇன்பம் -
ஆணோ, பெண்ணோ தன்னுடைய பிறப்புறுப்பினை வலுக்கட்டாயமாக தூண்டிவிட்டு இன்பம் அனுபவி்ப்பதே சுய இன்பம். இந்த செயலின் மூலம் புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதே நோக்கமாகும். சுயமாக தனக்குதானே பிறப்புறுப்பினை தூண்டிவிட்டுக்கொள்ளுதலையும், பிறருக்கு செய்வதையும் இதோடு இணைத்துவிடலாம். ஆங்கிலத்தில்Masturbation என இது அழைக்கப்படுகிறது.
இதற்கு கைமுட்டி, கைப்பழக்கம், கையடித்தல் என பல்வேறான பெயர்கள் இருக்கின்றன. இந்த வார்த்தைகள் ஆண்களின் சுயஇன்பத்தினைக் குறிப்பதாக உள்ளது. பெண்களின் சுயஇன்பத்தினைக் குறிக்க, கைப்போடுதல் என்று கிராமத்தில் சொல்வார்கள்.
ஆண் சுயஇன்பம்
ஆண் சுயஇன்பம்
பெண்ணின் சுயஇன்பம்
மாறி சுயஇன்பம் கொள்ளுதல்
மாறி சுயஇன்பம் கொள்ளுதல்
எல்லோரும் நினைக்கிற மாதிரி சுயஇன்பம் அனுபவிப்பது, தப்பான விஷயம் இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால் இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றவர்கள் குறைவு.
- டாக்டர் நாராயணரெட்டி – உயிர் புத்தகத்தில்.
இதை இந்து மதம் தவிற மற்ற எல்லா மதங்களும் மறுக்கின்றன. ஏன் இந்து மதம் மறுக்கவில்லையா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. (இந்து மத குருமார்கள் வேண்டுமானால் மறுக்கலாம்). முனிவரின் சிந்தியிருந்த விந்தினை கிளி உண்டு கிளிக்கு பிள்ளை பிறந்தமையை சுகர் பிரமம் கதை விவரிக்கிறது. சகோதரனில் சுகர் பிரம்மம் – ஒரு வினேத உயிர் என்ற இடுகை கூட வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நான் சொன்னதை அறிந்து கொள்ள இயலும்.
சுயஇன்பத்தை முதலில் அனுபவித்தவர்-
ஆடாம்
சுயஇன்பத்தினை முழுவதுமாக ஆதரிக்கிறது எகிப்திய மதம். பழங்கால எகிப்திய கடவுள் ஆடாம்.இவர் சுயம்புவாக உருவானவர்.உலகமே வெற்றிடமாக இருந்த சமயம்.அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுயஇன்பம் அனுபவித்தார். ஆக முதலில் சுயஇன்பம் அனுபவித்தவர் ஆடாம் கடவுள்.
அவருடைய ஆண்குறியிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷூ மற்றும் டெஃப்நட் என்னும் இரண்டு கடவுள்கள் தோன்றினர்கள். பிறகு அவர்கள் இருவரும் இணைந்து உயிர்களைப் படைத்தார்கள் என்கிறது எகிப்திய புராணம்.
இன்பம் தொடரும்,…

No comments: