Sunday, October 28, 2012


செக்ஸ் உறவின் போது அவசரப் படாதீங்க...!!



செக்ஸ் உறவின்போது விந்தணு முந்துதல் பலருக்கும் ஏற்படும் ஒரு சங்கடமான சமாச்சாரமாகும். இதனால் டென்ஷன், ஒருவிதமான உறுத்தல், தர்மசங்கடம் ஏற்படும். மேலும் பெண் துணைக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்படும். பல சமயங்களில் உறவு பெரும் கசப்பான அனுபவமாக மாறி விடும். ஆனால் இதை சரி செய்ய முடியும்.
உறவின்போது விந்தணு முந்தி வருவதைத் தவிர்க்க சில பொசிஷன்கள் மற்றும் உபாயங்களைக் கடைப்பிடிக்கலாம். பார்க்கலாமா....

உறவின்போது அதிக அளவிலான அழுத்தம் மற்றும் முயற்சிகளைத் தரும்படியான பொசிஷன்களைக் கடைப்பிடிக்கும்போதுதான் விந்தணு வேகமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே அதுபோன்ற பொசிஷன்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

மிஷனரி பொசிஷன்.. இதில்தான் ஆண்களுக்கு வேகமாக விந்தணு வருகிறது. எனவே இந்த பொசிஷனை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.

தலைகீழ் மிஷனரி பொசிஷன்.. அதாவது ஆண்கள் மீது பெண்கள் ஏறிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இப்படிச் செய்வதன் மூலம் ஆண்கள் அதிக முயற்சியையும், அழுத்தத்தையும்செயல்படுத்தத் தேவையில்லை. மேலும் இந்த உறவை பெண்கள்தான் கட்டுப்படுத்துவார்கள். எனவே இந்த பொசிஷனில் விந்தணு முந்தும் பிரச்சினைக்கு வாய்ப்பு மிகக் குறைவு.

உறவில் ஈடுபடும்போது அதி வேகமாக இயங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நிதானமாக, மெதுவாக, இயல்பாக இயங்குங்கள். கிளைமேக்ஸ் வரப் போவது போலத் தெரிகிறதா.. ஸ்பீடைக் குறைத்து விடுங்கள். முடிந்தால் உறுப்பையும் சில விநாடிகளுக்கு வெளியே எடுத்து விடுங்கள். இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட முடியும், விந்தணு வேகமாக வெளியேறுவதையும் தடுத்து நிறுத்த முடியும்.

No comments: