2030ல் புகைப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்?
வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீத ஆண்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்துக்கும், புகையில்லாத போதை பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளனர் என மருத்துவ ஆய்வு கூறுகிறது.
புகை பிடிப்பது, தன்மை தாமே அழித்து கொள்வதற்கு சமமாகும். நாட்டில் தற்போது புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், இதே நிலை நீடிக்குமானால் 2030ம் ஆண்டில் சுமார் 8 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் புகை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் புற்று நோய் அதிகமாக தாக்கி வருகிறது. புகைப்பவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறதென்றும் மருத்துவ ஆய்வு கூறியுள்ளது.
உலகில் புகை பிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment