மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே அவர்களால் உயிர்வாழ முடியும். சத்தான உணவு, ஆரோக்கியமான பழக்கவழங்களினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதேபோல தம்பதியரிடையே ஏற்படும் மனமொத்த செக்ஸ்சிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உண்டு சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு நம் உடலில் இருக்கிறதோ அதனைப் பொருத்து உடலில் நோய்கள் வந்தாலும் ஒரு சில நாட்களில் ஓடிப்போய்விடும். அதேபோல் காயங்களும் ஆறிவிடும். இதற்குக் காரணம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் எனப்படும் ஹார்மோன்தான்.
இந்த ஹார்மோன் தாம்பத்ய உறவின் மகிழ்ச்சியான தருணங்களில் இது அதிகம் சுரக்கின்றதாம். தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக, மனமொத்து மகிழ்ச்சியாக உறவுகொண்டால் மட்டுமே இது அதிகம் சுரக்கும் என்று கூறும் நிபுணர்கள், கடனே என்று உறவு கொள்பவர்களுக்கு ஆக்ஸிடோசின் அளவு சுரப்பது குறைந்து விடுகிறது என்கின்றனர்.
அமெரிக்காவில் ஒஹையோ மாகணத்தில் இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200 ஜோடிகள் பங்கேற்றனர். அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை தாம்பத்ய உறவில் ஈடுபட்டனதனால் அவர்களுக்கு 30 சதவிகிதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருந்ததை கண்டறிந்தனர்.
ஆய்வின் போது சில தம்பதியரின் தொடையில் அவர்களின் அனுமதியுடன் சூடு வைத்து காயம் ஏற்படுத்தினர் ஆய்வாளர்கள். அவர்கள் பரஸ்பரம் அதிக பிரியமுடன் உறவு கொண்டதில் தொடைப்புண் சீக்கிரமாகவே குணமானது. அதேசமயம் சரியான அளவில் உறவில் ஈடுபடாதவர்களுக்கு புண்கள் எளிதில் குணமாகவில்லை.
இதேபோல் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 35 ஆயிரம் ஜோடிகள் பங்கேற்றனர். தாம்பத்ய உறவு விசயத்தில் ஆக்டிவாக இருக்கும் தம்பதியர்களுக்கு இதயநோய் பிரச்சினைகள் எட்டிப்பார்ப்பதில்லை என்று ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
தாம்பத்ய உறவு என்பது ஏரோபிக் எக்ஸர்சைஸ் போலத்தான். உறவின் போது கிட்டத்தட்ட 200 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. எனவேதான் இதனை மகிழ்ச்சிகரமான உடற்பயிற்சி என்கின்றனர் பாலியல் நிபுணர்கள்.
அதேபோல் மனச்சோர்வு பிரச்சினைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிகச்சிறந்த மருந்து செக்ஸ்தான். தம்பதியர்களில் ரெகுலரான செக்ஸ் வாழ்க்கை இல்லாத தம்பதியர்களை மனச்சோர்வு எளிதில் தாக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதிக மன அழுத்தம் காரணமாக ஒரு சில பெண்களுக்கு ஹிஸ்டீரியா பிரச்சினைகளும் ஏற்படும். அந்த நேரத்தில் வைப்ரேட்டர் மூலம் செயற்கை செக்ஸை ஏற்படுத்தி சிகிச்சை அளித்துள்ளனர் நிபுணர்கள்.
ஆரோக்கியமான செக்ஸ் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறதாம். அதேபோல் தாம்பத்ய உறவின் போது சுரக்கும் அட்ரீனலின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்கள்தான் மூளையின் செயல்திறனை தூண்டுகின்றன என்று ஜெர்மன் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
தாம்பத்ய உறவின் கிளைமேக்ஸ் இன்பத்தின் போது சுரக்கும் எண்டார்பின், செரடோனின் இரண்டும் மக்களின் மனநிலையில் மாறுதலை ஏற்படுத்தி வாழ்க்கையில் இனி எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறதாம்.
நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் ரெகுலாரான செக்ஸ் வாழ்க்கையினால் ஆண்களுக்கு ஏற்படும் புரஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு குறைகிறதாம். இதற்குக் காரணம் உறவின் போது சுரக்கும் ஹார்மோன்தான் என்கின்றனர். 55 வயது முதல் 75 வயதுவரை உடைய 1000 ஆண்கள் பங்கேற்ற ஆய்வின் முடிவில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது எல்லாமே தம்பதியருக்கிடையே நடைபெறும் ஆரோக்கியமான செக்ஸ் மூலம் மட்டுமே ஏற்படும். செக்ஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கண்ட இடங்களுக்கு போய் வந்தால் அப்புறம் உடலானது நோய்களின் கூடாரமாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment