ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்!
ஓய்வற்ற பணிச்சூழல், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வது என தம்பதியரிடையேயான பிஸியான சூழ்நிலை அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில்இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில தின இடைவெளி என்றால் பராவாயில்லை. அதுவே வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட சில தம்பதியர் இணையாமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இடையே பிணைப்புகள் இன்றி இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இடைவெளியை குறைத்து இணக்கத்தை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்பதை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
வேலை வேலை என்று அலைந்து விட்டு உங்களவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? அவரை வசத்திற்கு கொண்டுவரவேண்டுமா? சில டிரிக்குகளை செய்துதான் ஆகவேண்டும். அறைக்குள் உங்களவர் இருக்கும் நேரம் பார்த்து உடை மாற்றுங்களேன். அந்த சந்தர்ப்பம் அனைவருக்கும் வாய்க்காது. உங்களின் நளினமான உடல் அமைப்பை பார்த்து உங்களவருக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.
வாசனையும் மயங்கலாம்
மனதை மயக்கும் வாசனையான பெர்ப்யூம் உபயோகியுங்களேன். பெர்ப்யூம் பிடிக்காதவர்கள் மல்லிகைப்பூவை சூடி உங்களவரின் முன் அப்படியும், இப்படியும் நடக்கலாம். இந்த வாசனைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆணோ, பெண்ணோ மனதிற்கு இதம் தரும் வாசனைக்கு மயங்கித்தான் ஆகவேண்டும்.
கவர்ச்சிக்கு மாறுங்கள்
காலை நேரத்திலும், வீட்டுச் சூழ்நிலையிலும் இழுத்து போர்த்திய உடையுடன் இருக்கும் நீங்கள் உங்கள் படுக்கை அறையிலாவது கொஞ்சம் உடைகளுக்கு விடை கொடுக்கலாம். இருவருமே கவர்ச்சிகரமான உடைக்கு மாறுங்கள். அதுவே உங்கள் இருவரின் இடைவெளியை குறைக்கும் மிகப்பெரிய ஆயுதம். கவர்ச்சிகரமான படங்களையும், வீடியோக்களையும், அனைவரின் முன்னிலையில் பார்க்க முடியாது. ஆனால் அந்தரங்கத்தில் அதை பார்த்து ரசிக்கலாம். அதன் மூலம் உங்களின் உணர்வுகள் தூண்டப்படலாம்.
இடத்தை மாற்றுங்கள்
குடும்பத்தை கவனிக்கவும், வீட்டு வேலையை பார்க்கவும் மட்டுமே மனைவிக்கு நேரம் சரியாக இருக்கிறதா? படுக்கை அறைக்கு வந்தாலும் உங்களை சரியாக கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? நீங்கள்தான் அவரை வழிக்கு கொண்டுவரவேண்டும். தினசரி செய்யும் செயல்களில் இருந்து கொஞ்சம் மாற்றத்தை கொண்டுவாருங்கள். குழந்தைகளை சில நாட்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களின் பொறுப்பில் விடுங்கள். வீட்டு வேலைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அவுட்டிங் செல்லுங்கள். சினிமா, இரவு ஹோட்டலில் டின்னர் என கொஞ்சம் மூடு மாறட்டம். அப்புறம் பாருங்கள் அன்றைய இரவு உங்களுக்கானது என்பதை உணர்வீர்கள்.
No comments:
Post a Comment