Sunday, October 7, 2012


விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?


விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.
ஒரு சுவாரஸ்யமான மாறுதல்.சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஹார்மோன் செய்வது என்ன வென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி அடைவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது.முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருது வாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.
இதற்குப் பிறகுதான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண் குறியின் அடிப்பகுதியிலும் விதைப் பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்பு மயிர்தான். இத னைக் கண்டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.
சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?
இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம் பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.
பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதையூடாக வெளி வருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி – இன்ப அதிர்ச்சி ஆகியவை யில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபி த்து விடுகிறது. விந்து வெளியே றியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. சில வேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.
பதினான்கு வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. ஆனால் ஆண் குறியும் விதைப்பையும் வளர்ச்சியுற்ற போது போலக் கருநிறம் அடைவதில்லை.இதே காலக்கட்டத்தில் பூப்புமயிர் கருமையாகும் போது சுருளுகிறது.
உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறுகிறது?
முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில்தான் வேகத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. இது வரை மிக மிக வேகமான வளர்ச்சியை அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதினைந்தரையாகும் போது வளர்ச்சி முற்றுப் பெறுகிறது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமை நிறமாகிறது.பூப்புமயிர் தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து வயிற்றின் கீழப் பகுதி தொப்புள் வரை பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியிலும் நடைபெறும்.அநேக பையன்களுக்கு அவர்களின் கால்களிலும், கை அக்கிளிலும், தோள்களிலும் முதுகுகளி லும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும்.
பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?
சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்க ளிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசை யின் பிறபகுதியிலும் இறுதியாக நாடி ப்பகுதியிலும் வளரத்தொடங்குகிறது.
பதினாறு பதினேழு வயதை அடைந்த பிறகும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு இத்தகைய திடீர் வளர்ச்சி காணப்படாவிட்டால் பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது.உங்களுக்கு சில ஹார்மோன் மருந்துகளைச் பரிந்துரை செய்வார்கள்.

No comments: