குழந்தையை குளிப்பாடுவது எப்படி? குழந்தை இருக்கிறவங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!
உங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை. குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படி?
தினசரி குழந்தையை குளிப்பாட்டலாம் குழந்தையை குளிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் உடலை சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து துடைத்து விடலாம். எதுவாக இருந்தாலும், குழந்தையின் தொப்புள் கொடியை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்
குழந்தையை குளிக்க வைக்கும் போது தொப்புள் கொடிமீது சில சொட்டு தேங்காய் எண்ணெய் வைத்த பிறகு குளிப்பாட்டினால் ஈரத்தினால் சீழ் பிடிப்பது தவிர்க்கப்படும்.தொப்புள் கொடி நன்கு காய்ந்து விழ வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
குளிக்க வைக்கும் ஒவ்வொரு முறையும் குழந்தையின் தலையையும் அலச வேண்டியது மிகவும் முக்கியம்.
குழந்தையின் தலையை கால்களின் இடுக்கில் வைத்து முகத்தை கீழ் நோக்கிப் பிடித்தபடி தலை முடியை அலசலாம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாது.
குழந்தைக்குப் போடும் சோப்பு அல்லது ஷாம்புவையே தலைக்குப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் சோப்பு அல்லது ஷாம்புவோ எதைத் தேய்த்தாலும், அதன் தன்மை அகலும் வரை நன்கு அலச வேண்டும். இல்லையெனில் அலர்ஜி ஏற்படும்
குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு தலையில் எண்ணெய் தேய்ப்பதை தவிர்க்கவும்.
குளிப்பாட்டிய உடன் குழந்தையின் வாய், காது, மூக்கில் தங்களுடைய வாயை வைத்து ஊதுவார்கள். இதுதவறான பழக்கம். தொற்றுக்கிருமிகள் குழந்தையினுள் எளிதாக புகுந்து ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதுபோன்ற ஊதும் பழக்கத்தை தவிர்க்கவேண்டும்
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment