Tuesday, August 7, 2012


செக்ஸ் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் செயற்கை டயட்!

உடல் எடையை உடனடியாக குறைப்பதற்காக செயற்கையான முறையை கையாளுவதால் தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் நிபுணர்கள்.
உடல் எடையை குறைப்பதற்காக இன்றைக்கு பலமுறைகளை கையாளுகின்றனர். உணவை குறைவாக சாப்பிடுவது, கலோரி குறைந்த உணவுகளை சாப்பிடுவது என டயட் இருக்கின்றனர். ஹெசிஜி எனப்படும் டயட் முறையை பின்பற்றுபவர்களுக்கு உடல் எடை குறைவதோடு பல்வேறு எதிர்வினைகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் கலோரிகள்
human chorionic gonadropin என்பதன் சுருக்கமே எச்சிஜி. இது பெண்களுக்கு பிரசவ நேரத்தில் சுரக்கும் ஒரு ஹார்மோன். இதனை உடல் எடையை குறைப்பதற்காக ஊசி மூலமோ, மாத்திரை மூலமாகவோ தூண்டுகின்றனர். இந்த ஹார்மோன் தூண்டப்படுவதன் மூலம் ஒரு நாளைக்கு 500 முதல் 800 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. ஆனால் இதன் மூலம் பாலுணர்வு சக்தியில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஹெச்சிஜியினால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி உடனடியாக அதிகரிக்கிறது. அதன் மூலம் ஆண்களின் பாலுணர்வு தூண்டுதல் தற்காலிகமாக அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உடல் எடை குறைந்த உடன் ஹெச் சி ஜி எடுத்துக்கொள்ளும் அளவை படிப்படியாக குறைக்க நேரிடும். அப்பொழுது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைந்து மனிதர்களின் பாலுணர்வும் படிப்படியாக குறைந்து போய்விடும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
தினசரி 500 முதல் 800 கலோரிகள் வரை குறைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்படும் ஹெச்சிஜியினால் மற்ற பின் விளைவுகளும் ஏற்படுகின்றன. பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாவதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல்கள் உருவாகின்றன. அது தவிர தலைவலி, ஆண்களின் மார்பின் வளர்ச்சி அதிகரித்தல் போன்ற பின் விளைவுகள் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கையான வழி
உடல் எடையை குறைப்பதற்காக செயற்கை முறையை கையாள்வது தேவையற்ற பாதிப்பினை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். ஹெச்சிஜி டயட் மனிதர்களின் பாலுணர்வு சக்தியை தற்காலிகமாக அதிகரித்து பின்னர் உடனடியாக குறைக்கிறது. இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் சிக்கல்கள் எழுகின்றன. எனவே உடல் எடையை குறைப்பதற்காக சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைதான் சிறந்தது என்று கூறும் ஆய்வாளர்கள் இதனால் மனிதர்களின் பாலுணர்வு சக்தியும் சரியான அளவு இயற்கையாக உயரும் என்கின்றனர். எனவே செயற்கை முறையில் உடல் எடையை குறைக்க அதிக பணம் செலவழிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கூறுயுள்ளனர்.

No comments: