Tuesday, August 7, 2012


திருமணம் செய்யப்போறீங்களா? அடிப்படை தெரிஞ்சிருக்கணுமே!

புதிதாக திருமணம் செய்துக்கொள்ளப்போகும் இளசுகள் செக்ஸ் குறித்த சில அடிப்படை விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் விழித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
காதலும் உணவும்
நாம் உண்ணும் உணவு நம் பசியை தீர்பதற்கு மட்டுமல்ல. நம் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. ஆணோ, பெண்ணோ சத்தான உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஆரோக்கியமாக உறவுக்கு வழி ஏற்படும். அதன்மூலம் அறிவார்ந்த ஆரோக்கியமான சந்ததிகள் பிறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், மீன் போன்ற உணவுகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்துதான் நம் ஊரில் திருமணம் நிச்சயமானால் விருந்து, திருமணம் முடிந்த பின்னர் புதுமணத் தம்பதியருக்கு விருந்து வைக்கின்றனர்.
அடிப்படை விசயங்கள்
திருமணம் ஆகப்போகிறது என்றாலே சில விசயங்களை அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். திருமணம் ஆன நண்பர்களிடம் அடிப்படை விசயங்களை கேட்டுத்தெரிந்து கொள்வதில் தப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் சந்தோசமான விசயங்கள் சிலவற்றை சுவாரஸ்யமாக பேசவேண்டும் என்கின்றனர் அவர்கள். அப்பொழுதுதான் அந்த பெண்ணுக்கும் ஓரளவிற்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடற்பயிற்சி அவசியம்
ஆணோ, பெண்ணோ உடல் கட்டமைப்பிற்கு உடற்பயிற்சி அவசியம். நடனம் கூட உடல் அமைப்பினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே வாக்கிங், ஜாகிங் தவிர சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். திருமணம் ஆன புதுமணத் தம்பதியர் மனதிற்குப் பிடித்த இசையை போட்டு இஷ்டத்திற்கு நடனமாடுங்கள். அதுவே கிளர்ச்சியூட்டக்கூடிய உடற்பயிற்சிதான்.

No comments: