Tuesday, July 17, 2012


கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறுபாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும்.
இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளி வாகக் கூறியுள்ளார்.
அதாவது ஒரு பெண் எப்போது கரு வுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங் கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும்.
இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்ல து மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வள ர்ந்த பின் கூட ஏற்ப டும்.
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சி யடையவும் எதிர்காலத்தில் மனதா லும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கரு வுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும்.
* கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலை யுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
* குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில்நிற்கக் கூடாது. ஜன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.
*மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனை ய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரி ல் குளித்து உடலையும் தலையை யும் நன்கு துடைக்க வேண்டும்.
* எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக் கூடாது.
*அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளலா ம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கு ம் குழந்தையைப் பாதிக்கும்.
* கருவுற்ற பெண்கள் சிலபேர் கும ட்டல் வாந்தி காரணமாக உண வை தவிர்ப்பார்கள். அப்படி தவிர் ப்பதால் குழந்தைக்குத் தேவை யா ன சத்துக்கள் கிடைக்காமல் போ கும்.
* அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளி தில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

No comments: