Wednesday, December 12, 2012


பெண்ணின் மனதைப் பாதிக்கக்கூடிய அந்த மூன்று நாட்களில் உறவு வைத்துக் கொள்ளலாமா?வேதனையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ பேர்கள் குமுறியிருந்தார்கள். இது உண்மைதான். உடம்பு நன்றாக இருக்கும்போது வேலை வேலை என்று அலைந்துவிட்டு. பீரியட்ஸ் சமயத்துல ரொம்ப தொந்தரவு பண்றாங்க! நாங்க பக்குவமாக எடுத்து சொன்னாலும் எரிஞ்சு விழறாங்க என்று பெரும்பாலான பெண்கள் புலம்புகிறார்கள்.ஆண்கள் தங்களது ஆசையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகாலாக பெண்களை உணர்ச்சியற்ற ஜடம்னு நினைக்கிறாங்க. விலங்குகளைப் பொறுத்தவரை பெண் விலங்குகளுக்கு வரும் அந்த மாதிரியான சூழ்நிலையில் ஆண் மிருகங்கள் கிட்டே நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் பெண் மிருகமானது ஒருவித எரிச்சலான கோபத்துடன் தனது எதிர்ப்பை காட்டும்.அதேபோல் ஒரு பெண்ணால் தன் எதிர்ப்பை எந்த அளவுக்கு காட்ட முடியும்? அப்படியே காட்டினாலும் வேண்டாப் பொண்டாட்டி நின்னாலும் குற்றம் நடந்தாலும் குற்றம் என்று எதற்கெடுத்தாலும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் ஒரு எதிரியை விரட்டுவதை போல் ஆண்கள் கோபத்தை காட்டுவார்கள். அது சில ஆண்களின் இயல்பு. அது தப்பு. ஆனால் தங்களதுபிடிவாதத்தை காட்டி நேரடியான உறவை மேற்கொள்ளாமல், தங்களது ஆசையை தீர்த்து கொள்கிறார்கள். பீரியட்ஸ் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? என்று சில பெண்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதில் அவர்களுக்கு உண்மையாக விருப்பம் இருக்கிறதா? அல்லது கணவனின் போர்ஸ் இருக்கிறதா? என்பதை தான் பார்க்க வேண்டும்.ஏற்கனவே கடந்த பகுதியில் மாதவிடாய் பிரச்சனைகளைக் கூறியிருக்கிறேன். கர்ப்பப்பையின் உட்புறச்சுவர்கள் பலவீனமாகவும் உதிரப் போக்காகவும் இருக்கும்பட்ஷத்தில் எளிதில் தொற்று நோய்கள் தொற்றி கொள்ளும் அபாயம் இருக்கிறது.எனவே உடலுறவு வைத்துக் கொண்டால். அடுத்தடுத்து ஏற்படும் பீரியட்ஸ் சமயங்களில் அதிகமான ரத்தபோக்கு. வலி. எரிச்சல் கர்ப்பபையில் கட்டி போன்ற அபாயங்கள் நிகழக்கூடும். அப்புறம் நீங்கள் டாக்டருக்கு பீஸ் கட்டியே ஓய்ந்து விடுவீர்கள். டாக்டரை பார்க்க கால்கடுக்க க்யூவில் நின்று. முன்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்க போராடுவீர்கள். இத்தனைக்கும் காரணமான உங்களது கணவர், எனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி. நீயே போய்ட்டு வா. ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனா உங்க அம்மாவ கூப்பிடு! என்று டாட்டா காட்டிவிட்டு போய்விடுவார். இதுதான் பலரது குடும்பங்களில் அன்றாடம் நடக்கிறது.இன்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஆண்கள் துன்பத்தில் பெண்களை அம்போ என்று பரிதவிக்க விடுவது நடைமுறை வாழ்க்கை.இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது எளிது. ஆனால் திருமணம் ஆன பின்புதான் திருமண வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த நடைமுறை வாழ்க்கை, டென்ஷன், கவலை, குடும்ப பிரச்சனையோடு அந்த மூன்று நாட்களை கழிப்பது நரக வேதனை என்று கூறுகிறார்கள்அதே மாதிரி பலவீனமான இதயம், எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு கொண்டிருப்பது, டென்ஷன் இவற்றால் பீரியட்ஸ் நாட்கள் முன்னதாக வரும். சிலருக்கு உடலுறவு ஈடுபட்ட மறுநாளே உதிரப்போக்குடன் மூன்று நாட்கள் தொடங்கிவிடும்.இதற்கு என்ன காரணம்? உடல் பலவீனம். கர்பப்பை சுவர்கள் வீக்காக இருப்பது தான். அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. மகப்பேறு மருத்துவரிடம் மறைக்காமல் தனது பிரச்சனைகளை மனம்விட்டு சொல்ல வேண்டும்.

No comments: