காம உணர்ச்சியை பன்மடங்கு பெருக்கும் அத்திப்பால்
பாட்டி வைத்தியம் – மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய
பெரு மர வகை. பால் வடிவ ச் சாறு உடையது. பூங்கொ த்து வெளிப்படையாகத் தெ ரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய் க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கி றது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகி யவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும்,
பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக் கியாகவும் செய ற்படும்.
* அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப்போ க்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
* அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
* அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறு விளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50மி.லி.
கொதி நீரில் ஊறவைத்து வடி கட்டி நாள்தோறும் மூன்று வே ளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி ஆகிய வை தீரும்.
* அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெரு ப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக் காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆச னக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயி ற்றுப் போக்கு) தீரும்.
* அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டை களைச் சேர் த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.
No comments:
Post a Comment