ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது?
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்ப து. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தய ங்காமல் செய்யக் கூடிய வள் பெண். இப்படிப் பிற ருக்கு உதவி செய்து கொண் டு, அந்த உதவி செய்யும் கு ணத்தையே தான் வாழ்வதற் கும், பயன்படு த்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.
உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வர லாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தா ள்.
உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்கவேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட் டதை போலவே, பெண் ணுக்கும், உலகி ல் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட் டிருக்கிறது.
நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாது காவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காத லனாக இருந் து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண் தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத் தகைய திறனுள்ள ஆடவ னைத் தக்க வைத்துக் கொள்வதற் காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திற னும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங் களாக இருந்தன.
பாலின்பத்தையும், பராமரிப் பை யும் அந்த காலத்து பெண் கள்தான் தங்களுக்கு சாதகமா ன ஆயுதமா க பயன்படுத் தினார்கள்.
திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனு டன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ் நிலையில், புதிய மனிதர்களோ டு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண் ணும் செல்கி றாள்.
புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையு ம், கணவனின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பண்பையும் வள ர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண் ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவ ன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள்.
தனது கணவன் ஆறுதலாக, சுக மாக, மகிழ்ச்சியாக இருப்பதற் கான ஒரு சூழலை பெண் உரு வாக்கி தனது நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்கிறாள். இதன்மூலம் கண வன் தன்னை மீண்டும் மீண் டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள்.
தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவ னாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்க ளையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.
பெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவ ள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினை த்துக் கொள்வாள். அவ ளது விருப்பத்துக்கு மாறாக சிறி து நடந்து கொண்டாலும், ந ம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய் வாள். ஏனென்றால் பெண் எல்லாவற்றையும் விட காதலுக்காகவே அதிகமாகக் கவலைப்ப டுகிறாள்.
ஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில்அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்பு வது காதலிப்பதையும், காதலிக்கப்படுவ தையும் தான்.
உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகி ய ஒவ்வொன்றையும் தனது தாயின் உண ர்வின்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இய ல்பாகப் பெறுகிறாள்.
ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந் தை செல்வதில்லை. ஒவ்வொரு செய லை யும் தாயிடம் இருந்து கற்றுக் கொள் கிறது.
வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. காதலிக்கவும், காதலிக்கப்படவும் அவளுக்குச் சக்தி யை அளிக்கிறது. பிறரை நேசிக் கவும், பராமரிக்கவும், பாதுகாக்க வும் திறனை அளிப்பதோடு, ஆ ண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.
ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெரு க்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இரு ந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரு ம் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறா ள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.
No comments:
Post a Comment