2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் திகதி உண்மையில் என்ன நடக்கும் ?
(ஜோதிடரீதியான ஓர் ஆராய்ச்சி)
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் திகதி இது உலகத்தின் பெரும்பாலானோரை பயத்தில் ஆழ்த்தியுள்ளஒரு நாள்.இந்த நாளில் என்ன அப்படி உள்ளது என்றால் எல்லோரும் சொல்வது உலக அழிவு என்னும் ஓர்வார்த்தையையே. என்ன இது உலக அழிவா என்று எல்லோரும் நடுங்கி நிற்கிறார்கள்.சரி நாம் இதன் உண்மைதன்மை போலித்தன்மை என்பவற்றை ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்.உலக அழிவுக்கு எல்லோராலும்கூறப்படும் முதற்காரணம் மாயன் நாட்காட்டி முடிவு மற்றும் நிபுறு கோள் தாக்கம் மற்றும் ஹிப்புறுபைபிளின் கூறப்பட்டவை ஆகும்.முதலில் நாங்கள் மாயன் நாட்காடியை எடுத்து கொள்வோமாகின் இதுஅமெரிக்க ஆதி குடிகளான மாயன் இனத்தவரால் எழுதப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம்திகதியுடன் முடிவுறுகிறது இதுவரை மாயன் கணித்தவை பிழைத்ததில்லை எனவும் ஆகவே இவர்களின்நாட்காட்டி முடிவுடனேயே உலகமும் அழிந்து விடும் என்கிறார்கள் சிலர் இதை விட மற்றகாரணங்களுக்கும் ஒவ்வறு விளக்கங்கள் கொடுக்கிறர்கள். அது நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.நான் இதைஎல்லாத்தையும் விட்டுவிட்டு நமது ஜோதிடப்படி இதற்கு எதாவது பதில் உண்டா என பார்ப்போம்.
நமது ஜோதிட சாஸ்திரங்க்ளில் உலகம் பற்றியுள்ள கருத்துகளை பார்ப்போமாகின் இந்த உலகத்தின் ஆயுள்காலம் 4 யுகங்களாகும் அதாவது கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் ,கலியுகம் என்பவை ஆகும்.அதாவது மொத்தம் 43,20,000 வருடங்கள் இதை ஒரு சதுர் யுகம் என்பர்.ஒவ்வொறு யுக முடிபிலும் ஒருபிரளயம் ஏற்படுவது வழமை.இப்போது 3 ஆம் யுகம் முடிந்து 4 ஆவது யுகமாகிய கலியுகம் ஆரம்பமாகிநடைபெற்று வருகிறது.இந்த வருடம் கலியுகத்தில் 5114 ஆம் வருடம் ஆகும்.இன்னும் கலியுகம் முடியநான்கு லட்சம் வருடங்களுக்கு மேல் உள்ளது இதன் முடிவிலேயே உலகம் அழியும்.அப்படியானால் 2012 ல்ஒன்றுமே நிகழாதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.ஒன்றுமே நிகழாது என முற்றாக இந்தவிடயத்தை நாம் புறம் தள்ளி விட முடியாது.ஏன் எனில் தற்போது உள்ள கிரக சஞ்சார மாற்றங்களைஅவதானிக்கும் போது நீதிக்கிரகமான சனிபகவான் துலாம் ராசிக்குள் 10.11.12 முதல் சனிபகவான் உச்சமாகத்துவங்கிவிட்டார்.இந்த உச்சநிலையானது பொதுவாக 100 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும்.இந்த முறை220 நாட்கள் இருக்கப் போகிறது.இதே கால கட்டத்தில் கலியுகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்இராகு பகவான் 02.12.2012 அன்று துலாம் ராசிக்குள் நுழைந்து இருக்கிறார். ராகு பகவான் நிழல் கிரகமாகஇருந்தாலும்,அவருடன் யார் சேருகிறார்களோ அவரது சுபாவத்தை வாங்கி,பல மடங்கு பூமியில்மனிதர்களிடையே வெளிப்படுத்துவது அவரது வழக்கம்.
உதாரணமாக யுத்தகிரகமான செவ்வாயுடன் சேரும்போது,திடீர் கலகங்களும்,போராட்டங்களும் அதிகரிக்கும்.சுக்கிரனுடன் சேரும் போது உலகெங்கும் முறையற்ற உறவுகள் பெருகும்;வக்கிரமான உறவுகள்பிரபலமடையும்.புதனுடன் சேரும் போது வர்த்தகத்தில் புதுப்புது குற்றங்கள் நடைபெறும்.சந்திரனுடன்சேரும்போது நம் அனைவருக்குமே விபரீதமான எண்ணங்கள் உருவாகும்.குருவுடன் சேரும் போது காவிஉடுத்திய போலிகள் அவமானப்படுவார்கள்;போலி நிதிநிறுவனங்கள் இழுத்து மூடப்படும்;ஊழல் செய்தநிதித்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பாராமல் சிக்கி சிறைக்குச் செல்வார்கள்.
அதே போல,நீதி நேர்மை நியாயம் இவைகளைப் பாதுகாப்பது சனிபகவானே! நம் ஒவ்வொருவருக்கும்ஆயுளையும்,தொழிலையும் தருபவரும் அவரே! அவர் உச்சமாகும்போது ராகு இணைவது என்பது சுமார் 300ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்ந்த அநீதிகளுக்கு உரிய நீதி இந்தஒன்றரை ஆண்டுகளில் கிடைக்க இருக்கிறது.(சனிபகவான் 16.12.2014 வரையிலும்,ராகு பகவான் 21.6.2014வரையிலும் துலாம் ராசியில் பயணிக்கிறார்கள்)
தீவிரவாதம்,ஒழுங்கீனம்,முறையற்ற உறவுகள்,வதந்தி,மல்டி லெவல் மார்கெட்டிங்,குறைந்த உழைப்பின்மூலமாக மித மிஞ்சிய வருமானம் பார்த்தல்,கமிஷன் தரக் கூடிய தொழில்கள்,பிறப்பு உறுப்பு,அளவற்ற காமஇச்சை,இன்றைய ஆங்கில மருத்துவம்,விதவை,சர்ப்பங்கள்,விஷப் பொருட்கள்,அதிரடிமுன்னேற்றம்,உளவுத் துறை,கணிப்பொறி,செல்போன், நெட்வொர்க்குகள்,குறுகிய காலத்தில் மிகப் பெரியஅளவிலான பாதிப்புகள் போன்றவைகளுக்கு ராகு பகவான் மட்டுமே காரகத்துவமாகிறார். தொழில்,நீதிநியாயம்,ஆயுள்,மனித எலும்பு, இரும்புத்தொழில், அடிமைத் தொழில், அடிமைகள் வாழுமிடம்,தொழிலாளர்கள் தங்குமிடம்,கீழ்ஜாதி மக்கள் இவைகளுக்கு காரகத்துவம் சனிபகவான் ஆவார்.
ராகு தனித்து இருக்கும்போது ஒருவிதமாகச் செயல்படுகிறார்;அவரே ஒரு கிரகத்துடன் சேரும் போது அந்தகிரகத்தின் காரகத்துவத்தை வாங்கி பூமியிலிருப்பவர்களுக்கு வழங்குகிறார்.எனவே, அதர்மப்பாதையில்தர்மம் காக்கப்பட இருக்கிறது.
அதே சமயத்தில், 15.12.2012 சனிக்கிழமையன்று யுத்தக்கிரகமான செவ்வாய் தனது உச்சராசியான மகரராசிக்குள் நுழைகிறார்.நுழைந்து 23.1.2013 வரை மகரராசியைக் கடக்கிறார்.இந்த சூழ்நிலையில் உச்சசெவ்வாய் முழுப்பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.ஏற்கனவே,உச்சமாகிவிட்ட நீதிக்கிரகமானசனிபகவானும் தனது பார்வையான பத்தாம் பார்வையால் அதேகடகராசியைப்பார்வையிடுகிறார்.கடகராசியில் நாம் வாழும் பூமி பிறந்தது(???!!). உச்சச் செவ்வாயானவர் தனது ஏழாம் பார்வையால் கடகராசியை இதே 45 நாட்களுக்கு பார்க்கிறார்;உச்ச சனியானனவர் தனது பத்தாம்பார்வையால் கடக ராசியை ஏற்கனவே பார்த்து வருகிறார்.
இந்த 45 நாட்களில் நாம் வாழும் பூமியும், இந்தியாவும் போரால்,கலகத்தால்,அன்னிய நாட்டுஉளவுத்துறைகளின் குரங்குச் சேஷ்டைகளால் கடுமையாக பாதிக்கப்படும்;நயவஞ்சகத்தால் கோடிகளைச்சுருட்டியவர்கள் மாட்டிக்கொள்வார்கள்;தண்டனைக்குள்ளாவார்கள்;அல்லது அவமானப்படுவார்கள்;அவர்கள்அரசியலில் மீண்டும் தலையெடுக்கவேமுடியாது.அதை விட இயற்கையில் பல சீற்றங்களும் வரவாய்ப்புண்டு.சனி பகவான் ஆனவர் பஞ்சபூதங்களில் காற்றுக்கு பொறுப்பானவர் செவ்வாய் ஆனவர்நெருப்புக்கு பொறுப்பானவர்.ஆகவே இவை இரண்டும் தமது உச்ச பிரதேசத்தில் இருந்து நமது உலகத்தின்இராசியான கடகத்தை பார்கிறார்கள் ஆகவே உலகத்தில் அக்கினி புயல் வீச வாய்ப்புண்டு.உலகத்தில் சனிஆதிக்கமான நாடான அமெரிக்காவிலும் அதை அண்டிய நாடுகளிலும் இக்காலங்களில் பாரிய பாதிப்புகள்எற்படலாம்.
அதைவிட இரு கிரகங்களும் கடகராசியை பார்ப்பதால் இந்தியாவிலும் அதை அண்டிய நாடுகளிலும் பலஇயற்கை மாற்றங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.சில வேளைகளில் நீரால் சில பிரச்சனைகள்ஏற்படலாம்.(மழை,கடல் கொந்தலிப்பு) உலகம்முழுவதுமே பண மோசடி செய்த அயோக்கியர்கள்வகையாகச் சிக்கிச் சீரழிவார்கள்;கறுப்புப் பணம் மொத்தமும் அரசாங்கத்தை வந்து சேரும்.
கடகம் மற்றும் மேஷ ராசியினர்தான் அதிகமாக இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்றுஎண்ணாதீர்கள்.அனைத்து ராசியினரும் கடுமையாகவே பாதிக்கப்படுவார்கள்.தனுசு ராசி மற்றும் லக்னத்தில்பிறந்தவர்கள் வாகனப்பயணத்தின் போதும்,சாலையைக் கடக்கும்போதும்,ரயில் பாதையைக்கடக்கும்போதும் மிக நிதானமாக இருக்க வேண்டும் ஏனெனில் சில விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கடகராசியினர்கடந்த ஓராண்டில் செய்த தப்புக்களின் விளைவுகள் கர்மவினையாக திரும்பவரும்.மிதுனராசியினர் பேசும்பேச்சுக்கள் குடும்பத்திலும்,அலுவலகத்திலும் குழப்பத்தை உருவாக்கும். கன்னிராசியினர் அளவுக்கு மீறிபொறுத்துப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் பயண நேரம்தவிர மற்ற நேரங்களில் காலபைரவ மந்திரத்தையோ,அவர்களுடைய இஷ்ட தெய்வ மந்திரத்தையோவிடாமல் ஜபித்து வருவது அவசியம்.கும்ப ராசியினர் மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள்மருத்துவமனைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
தினமும் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் அல்லது ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபட்டுவருபவர்களுக்கு பெரிய அளவில் பிரச்னைகள் வராது;ஏழரைச்சனி நடைபெறும் கன்னி,துலாம்,விருச்சிகம்ராசியினரும்,அஷ்டமச்சனி நடைபெறும் மீன ராசியினரும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழல்உருவாகும்.எனவே,இன்றிலிருந்தாவது ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.
முனீஸ்வரரைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள்,முனி என்ற பெயரைக் கொண்டவர்கள் தினமும் ஏதாவதுஒரு மிருகம் அல்லது பறவைக்கு உணவு தானம் செய்வது நல்லது;ஜோதிடர்கள் கண்டிப்பாக ஸ்ரீகால பைரவர்வழிபாடு செய்து வருவது அவசியம்;ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒருபோதும் அசைவம்சாப்பிடக்கூடாது;மது அருந்தக் கூடாது;முறையற்ற உறவில் ஈடுபடவே கூடாது.
பூமியின் புவியியல் அமைப்பில் மகத்தான மாற்றங்கள் நிகழும் காலம் இந்த 45 நாட்கள் ஆகும்.அல்லதுமகத்தான மாற்றங்கள் நிகழ்வதற்கான அடையாளங்கள் வெளிப்படும்;இதே போன்ற சூழ்நிலை 10.4.2013 புதன்முதல் 21.5.2013 செவ்வாய் வரையிலும்;
19.8.2013 திங்கள் முதல் 8.10.2013 செவ்வாய் வரையிலும்; ஏற்பட இருக்கிறது.
ஆகவே நமது உலகம் முற்று முழுதாக அழிவதற்கான சந்தர்ப்பங்கள் மிக குறைவாகவே உள்ளதுநாஸ்டலாமஸ் என்னும் அந்நிய நாட்டு தீர்க்க தரிசியின் கருத்துப்படி 2012 க்கு மேல் உலக யுத்தம் ஏற்படால்என்ற கருத்து உள்ளது.இது வரும் 2 வருடங்களுக்குள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு இது 2025 ஆம் ஆண்டு வரைநடைபெறாலாம் என்கிறார்.அதை விட எமது இந்திய நாட்டின் நாஸ்டலாம் என்று அழைக்கப்படும் தீர்க்கதரிசியான வீரபிரம்மேந்திர ஸ்வாமி சுவாமி அவர்களின் கருத்துப்படி உலக அழிவுப்பாதை 1900 ஆம்ஆண்டே ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.அதாவது 1900 முதலே ஒவ்வொறு இயற்கை அனர்த்தமும்அதிகரிக்க தொடங்கி விட்டது.
|
உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர்மட்டும் விழித்திருப்பதுதான், காதல்!
Friday, December 14, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment