10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்-ஆய்வு
தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.
செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடிய செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யமான சில விஷயங்கள்...
உறவுக்கு ஏற்ற கால அளவுசிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுசகரியங்களே ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.இருவருக்கும் ஏற்ற நிமிடங்கள்ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும். எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.முன் விளையாட்டுக்கள்உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதுமானது என்கிறது ஆய்வு அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது என்கிறது ஆய்வு முடிவு.இரவு நீண்டிருந்தாலும், நம் உறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கின்றனர் ஆய்வாள
No comments:
Post a Comment