ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல் |
|
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.
ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.
ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்
பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?
சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.
காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.
செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங் களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறி விடுகிறது.
உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.
கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.
பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.
குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்.
செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
இளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.
ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான். சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.
கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத்; தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.
இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்.
காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள். |
|
|
|
|
No comments:
Post a Comment