Tuesday, October 9, 2012


இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையேயான தாம்பத்ய உறவுதான். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் தான் தாம்பத்யத்தின் சிறப்பம்சம்.

உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல சக்திகளை கொண்டுள்ளது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.

சிந்தனை சீரடையும்உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.சோர்வு நீங்கும்நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை உடலுறவு சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.இளமை கூடும்கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும். ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.வாரம் இருமுறை தேவை உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

அச்சம் அகன்றால் உச்சம் அடையலாம்!

. 
Orgasam
தாம்பத்ய சுகம் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பமும் கை கூடும். செக்ஸ் பற்றியும் அதனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம்.


தாம்பத்ய சுகத்திற்கான உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை நாம் நமது பார்ட்னருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற எக்ஸ்போசர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் அடிப்படை சிக்கலும், பல பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த முழுமையான அறிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்கின்றனர் உளவிலாளர்கள்.


உச்சநிலை விழிப்புணர்வுஆர்கசம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் சிரமம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இதுகுறித்து முதலில் கவலைப்படுவதை விட்டு விட வேண்டும். மன நிலை முழுமையாக தாம்பத்ய உறவில் ஈடுபடாதபோது இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. இது மனோ ரீதியான பிரச்சினைதான் என்றாலும் சில டிப்ஸ்களை கடைப்பிடித்தால் இதிலிருந்து விடுபடலாம் என்பது உளவியல் வல்லுநர்களின் அறிவுரை.இயலாமையால் ஏற்படும் ஏமாற்றம்சில பெண்களுக்கு ஏதேனும் ஒரு நிலையில் உச்சக்கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு உறவின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை. உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள், என்றோ அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.அவசரம் வேண்டாமே!உறவின் போது பெரும்பாலான பெண்களின் கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதிலேயே அவர்களின் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள்.இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிரியான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும். அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.பிறப்புறுப்பு வறட்சிபெண்களுக்கு உணர்வின் போது எழுச்சி ஏற்படுவதிலும் சில சமயங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக பிறப்புறுப்பில் வழவழப்புத் தன்மை குறைந்து, அது அவர்களது பார்ட்னர்களுக்கு சிரமத்தைத் தர நேரிடும். இதையும் தவிர்க்கலாம். அதேபோல உறவுக்கு முன்பும், உறவின்போதும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது மிக மிக அவசியம். அப்படி ஏற்பட்டால் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து போகும். இதனால் உறவு கசந்து போகும்.பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட இரண்டு காரணங்கள் உண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலு}ட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹால்தான் இந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்பதன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம். அதன்படி நடக்கலாம். நாமே கூட மன ரீதியாக இதை சரி செய்ய முடியும். இதற்காகவே பல புத்தகங்கள், வீடியோக்கள் உள்ளன. அவற்றை அணுகி சுயமாக அறிந்து கொள்ளலாம். எனவே உச்சத்தை அடைவது சிக்கலா இருக்கே என்ற கவலையை விட்டு விட்டு அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினால், எல்லாம் இன்ப மயமாகும்!.

அரவணைப்புகளையும், முத்தங்களையும் விரும்பும் ஆண்கள்!


Hugging
செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறதாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில்தான் அதிக நாட்டம் இருக்கிறதாம்.


இந்த வித்தியாசமான தகவலை ஒரு ஆய்வு முடிவு சொல்லியுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு அதிக அளவில் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும்தான் அதிகம் விரும்புகிறார்களாம்.



அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம்.



ஒன்று முதல் 51 ஆண்டு காலம் இணைந்து வாழும் 5 நாடுகளைச் சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வுக்காக பேட்டி கண்டு அவர்கள் மூலம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.



ஆய்வு முடிவுகளின்படி, திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் கூறுகிறது.



செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். 



அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.



என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.



இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது.

   

No comments: