Tuesday, October 9, 2012


ஆபாச படங்களை பார்ப்பதால் ?

பிரிட்டன் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணி யிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.இணையதளங்களில் மட்டுமல்லாமல், ஐ பாட், மொபைல்போன், பத்திரிகைகள், "டிவி' "டிவிடி' உள்ளிட்ட வடிவங்களில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் தற்போது நிலவுகிறது.இதனால், பல்வேறு நாடுகளில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.


மேலும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களை பார்க்கின்றனர். நான்கு சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களை பார்க்கின்றனர்.இத்தகைய இளைஞர்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திப்பது நல்லது.ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர். 
ஆயிரத்து 57 பேரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, 80 சதவீதம் பேர் "எக்ஸ்' தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இத்தகைய படங்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



வயது வந்தவர்களுக்கு மட்டும் ?

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண், தன் கேப்பிட்டல் சினிமா கம்பெனியின் 6வது படம் ஆரண்ய காண்டம்.
புதுமுக இயக்குநர் குமாரராஜா இயக்கத்தில், ரவிகிருஷ்ணா புதுமுகம் யாஸ்மின் நடிக்கின்றனர். இந்தியில் 170 படங்களில் நடித்த ஜாக்கி ஷெராவத் ஆரண்யா காண்டம் படத்தில் சிங்க பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


படம் முடிந்து ஏற்கனவே பல திரைப்பட விழாக்களிலும் பரிசு பெற்றுள்ளது. ஆனாலும் தமிழக திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சென்சாரில் 52 கட் செய்யுமாறும், இந்தபடம் நம் கலாச்சாரம் மீறிய சில காட்சிகள் இருப்பதாலும், மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சென்சிட்டிவான விஷயம் என்றும் மறுத்துள்ளனர். படக்காட்சிகளை கட் செய்ய ஒத்துக்கொள்ளாத படக்குழுவினர், டிரிபியூலுக்கு அனுப்பி வைத்து, ஒரு கட்டும் செய்யாமல் ஏ சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆனாலும் இவர்களாகவே முன்வந்து அபத்தமான சில வசனங்களை மட்டும் நீக்கியுள்ளனர்.


படத்தை பற்றி சொல்லும் போது நாட்டில் மிருகத்தனமாக சில மனுஷன்கள் பற்றிய படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் சரண். கூடவே இந்தபடம், காதல், உணர்ச்சி, ஆக்ஷன் இப்படி எல்லாம் உண்டு. இது ஒரு மெச்சூர் ஆடியன்ஸ்காக உள்ள படமாக இருக்கும். ஓட்டு போடும் தகுதி உள்ள இளைஞர்களே பார்க்க வேண்டும். தயவு செய்து உங்கள் குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

இதனிடையே இப்படத்தை பற்றி கேள்விப்பட்ட வரை, சென்னையில் உள்ள பிரபலமான ஒரு ஏரியாவில் வசிக்கும் ரவுடிகளின் கதையை படமாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

No comments: