ஒரு பெண் எழுதிய பெண்களுக்கான காமசூத்ரா
வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன்
என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர்கே.ஆர். இந்திரா. ஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப் பட்டுள்ள இந்நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்க ளை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காம சூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையை யும் தன் பக்கம் ஈர்த்துள் ளார்.
கடந்த ஜூன் முதல் வாரம் இந்த நவீன காமசூத்ரா விற்பனைக்கு வந்துள்ளது. அதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், செக்ஸ் குறித்த அவர்க ளின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எழுதி யுள்ளாராம்.
வாத்சாயனரின் காமசூத்ரா நூலை நான் படிக்க ஆரம்பித்தபோது, அது முழுக்க முழுக்க ஒரு ஆணால், ஆண்களுக்காகவே எழுதப்ப
ட்டதாகவே எனக்குத் தோன்றியது. ஆணி ன் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வு கள்தான் அதில் மேலோங்கி இருந்தன. ஒரு ஆண் தனது இச்சையை எப்படித் தணிப்பது என்பதற்கான வழிகாட்டியாக வே இது தெரிந்தது. ஆணாதிக்கம் நிறை ந்த நூலாகவே அது எனக்குத்தென்பட்ட து. எனவேதான் பெண்களுக்கான காம சூத்ராவை எழுத நான் தீர்மானித்தேன்.
இதற்காக ஒரு ஆய்வையே நடத்தினேன். 50 கேள்விகள் அடங்கிய ஒரு வினாத்தா ளை, பெண்களிடம் கொடுத்து அவர்களி ன் கருத்துக்களை அறிந்தேன். ஒவ்வொ ரு பெண்ணும் பத்து பேரிடம் கருத்துக் கேட்டுத் தெரிவிக்குமா றும் கோரியிருந்தேன். செக்ஸ் அனுபவம் குறித்த கேள்விகள் அவை . அவர்கள் தங்களது முழுமையான பெயர், முகவரிகளைக் கொடுக்
கவில்லை. 20 சதவீதம் பேர்தான் பதிலளித்திருந்தனர்.
பெரும்பாலான மலையாளப் பெண்களுக்கு செக்ஸ் விழிப் புணர்வு இருந்தாலும் கூட அவர் கள் வெளிப்படையாக அதைச் சொ ல்ல முன்வரவில்லை. இருப்பினு ம் அவர்களுடன் தனிப்பட்ட முறை யில் பேசியபோது நிறைய தகவல் களை என்னால் சேகரிக்க முடிந்தது. அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதினேன் என்றார்.
No comments:
Post a Comment