Sunday, October 28, 2012


மாரடைப்பும் உடலுறவும்


மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் உடலுறவில் ஈடுபடலாமா?

இது சம்பந்தமாக நிறையச் சந்தேகங்கள் நம் மக்களிடையே இருக்கின்றது.

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவில் ஈடுபடக்கூடாது மீறி உறவில் ஈடுபட்டால் அவர் உடலுறவின் போதே மாரடைப்பு வந்து இறந்து விடுவார் போன்ற கருத்துக்கள் நம் மக்களிடையே நிலவுகின்றன.

உண்மையில் மாரடைப்பு வந்த ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு 6 கிழைமைகளின் பின்னரே உறவில் ஈடு படத் தொடங்க வேண்டும்.

சில நபர்களில் அவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளின் காரணமாக உறவிலே நாட்டம் குறைந்து காணப்படலாம்.

இவ்வாறானவர்கள் உங்கள் வைத்தியரை நாடி ஆலோசனை பெற வேண்டும் (உங்கள் இஷ்டப்படி மாத்திரைகளை நிறுத்த வேண்டாம்)


உடலுறவின் போது நெஞ்சு வலி ஏற்பட்டாலோ , மூச்செடுக்க கஷ்டம், வழமைக்கு மாறான நெஞ்சு படபடப்பு போன்றவை ஏற்பட்டாலோ உங்கள் வைத்தியருக்குச்சொல்லவும்

No comments: