Monday, July 30, 2012


திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?


எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள்.
ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ஜே.பிரவுன் கூறியதாவது :
ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது.
அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும்.
இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.
மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம்.
அதனால், தினமும் முன்றுவேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீர் பருகுவது ஏன்?


உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம்… சூரிய ஔ படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கிறார்கள், இயற்கை வைத்தியர்கள்.
தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது.
உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவ ருபமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்க ளுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது.
நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவ தில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக் கிறது. நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை முலமாகவும், சளி முலமாகவும் வெளி யேற்றுகிறது.
நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமா காமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது.
முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைபடுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.
`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔ பட்ட தண்ணீர்தான்’ என்று கூறிள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றபடுபவர்.
இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யபடுவது தற்போது பிரபலமாகி வருகிறது.
`சூரிய ஔ பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணபடுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தபடுத்துகின்றன’ என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர்.
சீனாவில் முலிகை பொடிகளைக் கலந்து முலிகை குளியல் முறையினால் பல நோய்களை குணபடுத்துகிறார்கள். அதேபோல் பவுத்த மதம், யூத மதம், இஸ்லாமிய மதங்களிலும் குளிப்பதும் ஒரு சமயச் சடங்காகவே செய்யபடுகிறது.
உடலைச் சுத்தபடுத்துவது குளிபதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தபடுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.
குழந்தை பிறந்தது முதல் குளிபாட்டுதல், பந்யா வாசனம் செய்தல், பெண் குழந்தைகள் ருதுவானால் ருதுமங்கள் ஸ்நானம் செய்தல் போன்ற சடங்குகளிலும், திருமண காலத்தில் மணமக்களை நீராட்டும் சடங்குகளிலும் தண்ணீரால் உடலை தூய்மைபடுத்துவது வலிறுத்தபடுகிறது.
குளிப்பது என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. மேலும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களை கழுவும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.
ரோமாபுரியில் குளிப்பதை மிகவும் முக்கியமான ஒரு சடங்காகவே வைத்திருந்தார்கள். அவர்கள் அதிகமாக சூரிய ஔ பட்ட தண்ணீரில்தான் குளித்ததாக வரலாறு கூறுகிறது.
இயற்கையானது மனித சமுதாயம் நோயின்றி வாழ்வதற்காகவே தண்ணீரைம், சூரிய வெளிச்சத்தைம், காற்றையும் படைத்திருக்கிறது.

பால் குடிக்கும் பழக்கம் வேணும்!


குழந்தை பருவம் முதல் சிறுவர் பருவம் வரை அனைவரும் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். இந்த பருவத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கு பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. அதே நேரம் பெரியவர்களானதும், பால் குடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், 30 வயதுக்கு மேல் பால் குடிப்பது அவசியம். இந்த பருவத்தில், எலும்பு தேய்மானம் போன்றவற்றை தவிர்ப்பதற்காக போதுமான கால்சியம் சத்தை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
மக்கள் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிட துவங்கும் போது, பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை தான், முதலில் தவிர்க்கின்றனர். இதற்கு பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்துவிடும், அலர்ஜி ஏற்படும் என்று பல்வேறு காரணங்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. அதில், ‘வைட்டமின் சி’ மற்றும் இரும்புச் சத்து ஆகியவற்றை தவிர, பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன.
கால்சியம் சத்திற்கு பால் குடிப்பது முக்கியம்:
இயல்பான ரத்த அழுத்தம், ரத்தத்தின் திடத்தன்மையை சீராக வைத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பராமரிக்க, போதுமான அளவு கால்சியம் சத்து <உடலில் இருப்பது அவசியம். இது, மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் குடல் புற்றுநோய் ஆகியவை வராமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 1,000 மி.கி., கால்சியம் ஒரு பெண்ணுக்கு தேவை. ஒரு கப் ஆடை நீக்கப்பட்ட பாலில் 300 மி.கி., கால்சியம் நிறைந்துள்ளது.
பால் சாப்பிட சிறந்த முறை:
சைவ உணவு சாப்பிடுபவர்கள், பால் குடிப்பது மிகவும் முக்கியம். ஆனால் 2 வயதுக்கு பின், குறைந்த கொழுப்பு நிறைந்த பால் குடிக்க வேண்டும். தற்போது வர்த்தக ரீதியாக, கொழுப்பு குறைக்கப்பட்ட, கொழுப்பு நீக்கப்பட்ட மற்றும் பாலாடை நீக்கப்பட்ட பால் என, பல்வேறு வகையான குறைந்த கொழுப்பு நிறைந்த பால் கிடைக்கின்றன.
பால் பொருட்கள் ஒவ்வாமை உடையவர்கள், கால்சியம் சத்து அதிகம் நிறைந்த சோயா, சோயா பால், பச்சை காய்கறிகள், எள், சூரியகாந்தி பூ விதைகள், கசகசா, பாதாம் மற்றும் பிற பருப்பு வகைகள், கேழ்வரகு மற்றும் கீரைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
தினசரி குடிக்க வேண்டிய பாலின் அளவு
வயது அளவு
4 -9 வயதுடைய குழந்தைகள் 2 கப் முதல் 3 கப்
10-16 வயது 3 கப் முதல் 4 கப்
பெரியவர்கள் 2 கப் முதல் 4 கப்
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் 3 கப் முதல் 4 கப்
குறிப்பு: ஒரு கப் பால்= 250 மி.லி.,

சுத்தம்… சுகாதாரம்…!

ஆரோக்கியமான உடல்நிலை ஒருவருக்கு வேண்டும் என்றால் அவர் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மட்டும் போதாது; சுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்கள் நெருங்காது.
கை கழுவுவதில் இருந்து எல்லா விதத்திலும் சுத்தமாக இருந்தால் இந்த நோய்த் தொற்றுதலில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள்
டாக்டர்கள்.`ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ்’ என்ற பாக்டீரியா தான் அசுத்தமான கைகளில் இருந்து கொண்டு நோயை பரப்புகிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடும் சக்தி இந்த பாக்டீரியாவுக்கு இருக்கிறது. அதனால்தான், கையை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்கள் அந்த பாக்டீரியாவின் தாக்குதலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
இதில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிறுவனம் சில ஆலோசனைகளை உலக நாடுகளுக்கு கூறியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நோயாளிகளை பரிசோதித்த பிறகு தங்களது கைகளை கிருமி நாசினிக் கொண்டு கழுவ வேண்டும்.
மலம் கழித்த பிறகு கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
சாப்பிடப்போகும் முன்னரும் கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும் என்று கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

வேதனை தரும்… வெள்ளை படுதல்…


“மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்” என்றார் பாரதி.
பெண்களை கடவுளாக மதிக்கும் தேசம் நம் பாரத தேசம்.
பெண்களின் நலம் நாட்டின் நலம். பெண்களின் நலம்தான் குழந்தைகளின் நலம். ஆகையால் பெண்களின் நலத்தைப் பொறுத்தே ஒரு நாட்டின் நலமும் இருக்கும்.
இன்றைய நவீன உலகில் ஆணுக்குப் பெண் நிகராக போட்டி போட்டுக்கொண்டு பொருள் ஈட்டுகிறாள். ஆனால் பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், கருப்பைக் கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் பல பெண்கள் ஏன் பெண்ணாகப் பிறந்தோம் என மன வருத்தம் கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் தருவது இந்த வெட்டை நோய் என்று சொல்லப்படும் வெள்ளைப் படுதல் நோய்தான். இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.
வெள்ளைப் படுதல் அறிகுறிகள்
· பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்
· வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.
· வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.
· சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்
· வெள்ளைப் படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.
· இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல்.
நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
· பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும்.
· ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
· அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
· தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.
· சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
· அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
· அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
வெள்ளை நோயைத் தவிர்க்க
· உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
· பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
· உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
· நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மருந்து
இந்த வெள்ளைப் படுதல் நோயை குணப்படுத்த இந்திய மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. மூலிகைகளைக் கொண்டே இதனை குணப்படுத்த இயலும்
மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி
பூண்டுப்பல் -4
சின்ன வெங்காயம் - 4
நல்ல மிளகு - 5
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.
வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து
நன்னாரி வேர் - 10 கிராம்
அதிமதுரம் - 5 கிராம்
காய்ந்த திராட்சை - 5 கிராம்
மணத்தக்காளி விதை - 5 கிராம்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த செம்பருத்திப் பூ - 5 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் - 5 கிராம்
சின்ன வெங்காயம் - 3
நன்னாரி வேரை எடுத்து சிதைத்து அதன் உள்ளே உள்ள வேரை நீக்கி சதையை மட்டும் எடுத்து, அதனுடன் அதிமதுரம், மணத்தக்காளி விதை, காய்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த ரோ ஜா இதழ், சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக இடித்து, அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி அரை கப் அளவாக வந்தவுடன் வடிகட்டி தினமும் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் அடியோடு நீங்கும்.
· சிறுநீர் வெளியேறும்போது சுண்டி சுண்டி இழுப்பது மாறிவிடும்.
· மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக குருதிப் போக்கை மாற்றும், ஒழுங்கற்ற குருதிப் போக்கை சரி செய்யும்.
· ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கண்களைச் சுற்றியுள்ள கருப்பு, கழுத்திலுள்ள கருப்பு, இடுப்புப்பகுதியில் உள்ள கருப்பு போன்றவற்றை மாற்றும்.
· உடலிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கி முகத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
· மன உளைச்சல் நீங்கும். கை கால் குடைச்சல் நீங்கும்.
சிறுநீர் தண்ணீர்போல் வெளியேறும்வரை, இந்த கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தேவைப் பட்டால் கஷாயத்துடன் தேன் கலந்து அருந்தலாம்.
உணவு முறை
· அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.
· உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
· உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
· தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மேற்கண்ட மருந்துகளை முறையாக செய்து அருந்தினால், வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

10 தூக்கம்


உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம்.
சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.
விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் ‘அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும்.
தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.
வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது, மேற்கு.
பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது, தெற்கு.
எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம்! வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள்.
குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர்.
நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம்.
தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.
தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும்.
இதது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.
எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.
இரவில் தூங்கினால், பூமி குளிர்ச்சி அடைவதுபோல, உழைப்பினால், உடம்பில் ஏற்பட்ட வெப்பம் நீங்கி, உடல் குளிர்ச்சியாகும்.

Sunday, July 29, 2012


அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!


பெரும்பாலானவர்கள் `அரிப்பு’ என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்ற போகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.
பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறபுறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறபுறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையிலுள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.
கருவுற்ற காலங்களில் கர்பபை வாசல், பிறப்புறுபு போன்ற வற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை புறபகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறபுறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்துக் குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறபுறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.
குடாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறபுறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு.
அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?


தாம்பத்ய உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உச்சக்கட்டம் அடைவதில் ஏற்படும் சிக்கல் மனரீதியான சிக்கல்களை அளிக்கின்றன. உடல்ரீதியான, மனரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் பெயிலாகிவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எந்த சமயத்தில் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதோ, அல்லது பாலியல் ரீதியான நோய் தாக்கியுள்ள போதோ அவர்களுக்கு மனரீதியான ஒரு அழுத்தம் ஏற்படுகிறதாம். இதனால் அவர்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். எனவே கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான உறவு முறை பற்றி மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உச்சக்கட்டம் என்பது ஒரு உணர்வு. இது அடிப்படையில், பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்!
உலகில் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம் இந்த நிலையை அடைதல் என்பது எல்லோராலும் எளிதில் முடியாது. உடல் ரீதியான கோளாறுகள், நோய் பாதிப்புகள் இருந்தாலும் பெண்களால் உச்சக்கட்டத்தை எளிதில் அடைய முடியாது. எனவே செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை பெறவும்.
உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களுக்கு “Female Sexual Arousal Disorder (FSAD) எனப்படும் குறைபாடுகள் இருந்தாலும் பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுவதில்லை. உறுப்புகளில் வலி, வறட்சி போன்றவை ஏற்படும். இதுபோன்ற காரணங்களினாலும் உடலுறவினால் அவர்களுக்கு திருப்தி ஏற்படாத நிலை ஏற்படுகிறது.
சிறுநீர் தொற்றுப் பிரச்சினையினால் பெண் உறுப்புகளில் ஏற்படும் புண்களும் உடலுறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது. எனவே உடல் உறவில் திருப்தி இன்மையும், உச்சக்கட்டம்ஏற்படுவதில் சிக்கல் உள்ள பெண்கள் சரியான உளவியல் நிபுணர்களையோ, செக்ஸாலஜிஸ்ட்களையோ சந்தித்து ஆலோசனை பெறலாம்.

Thursday, July 26, 2012


ஆ! மிகவும் வந்திக்கத்தக்க கர்தாவும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காக, கொலைக்களத்தில் உண்மையாகவே இறந்தீர். ஆ! கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே எங்கள் நினைவுகளைக் கவனியும். ஆ! ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களைத் தப்புவியும். ஆ! கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே, சகல துன்பங்களினின்றும் காப்பாற்றும். ஆ! இயேசு இரட்சகரின் பரிசுத்த சிலுவையே, எங்கள் எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும். ஆ! எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்று எங்களைக் காப்பாற்றி நித்திய ஜீவனைத் தந்தருளும். ஆ! சிலுவையில் அறையுண்ட நசரேனாகிய இயேசுநாதரே, எப்பொழுதும் எங்கள்மீது இரக்கம் வையும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய மகிமையாலும் அவருடைய பாடுகளாலும் உயிர்த்தெழுதலினாலும் தெய்வத்தன்மைக்குரிய மோட்ச ஆரோகணத்தினாலும், எங்களைப் பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தீர். மெய்யாகவே நீர் பிறந்த பதிமூன்றாம் நாள் மூன்று இராஜாக்களால் தூபம், பொன், வெள்ளைப்போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர். பெரிய வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின் மேல் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு, நிக்கோதேமு, சூசை எனும் பக்கர்களால் சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யப்பட்டீர். மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய மகிமையானது எங்களை சத்துருக்களுடைய வஞ்சனைகளினின்றும் இப்போதும் எப்போதும் காப்பாற்றும். ஆ! ஆண்டவராகிய இயேசுவே! எங்கள்மீது கிருபையாயிரும். புனித மரியாயே, புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ............ (வேண்டியதை உறுதியாகக் கேட்கவும்).ஆ! கர்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின் வழியாய் இந்த பாவ உலகத்தினின்றும் உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே. அப்படியே நாங்களும் எங்கள் வாழ்வில், நாங்கள் படும் துன்பங்களை உமது இரக்கத்தின் கண்கொண்டு பாரும். எங்கள் பாடுகளை யாதொரு பழியும் கூறாமல் பொறுமையோடு சகிக்க கிருபை கூர்ந்தருளும். உமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா இடைய+றுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களைத் தப்புவியும் -ஆமென்.செபிப்போமாக:எங்கள் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வார்தைப்பாடு கொடுத்தபடியினாலே இயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்ளைப் பார்த்து எங்கள் பாவங்களையெல்லாம் பொறுத்து, உங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று உறுதியாக நம்பியிருக்கிறோம். -ஆமென் 

Wednesday, July 25, 2012


பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?* டீன் ஏஜ்… Tips

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.
*டீன் ஏஜில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இங்கே….. *
*பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?*
மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்தியமில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது. சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவிகளை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஸ்டைல் என்ற பெயரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காண வேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தளர்வான ஆடைகள் இப்பிரச்சினையைத் தவிர்க்கும்.
*லெஸ்பியன் என்பவர்கள் யார்?*
பெண் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்கு லெஸ்பியன் என்று பெயர். இவர்களுக்கு ஆணின் மீதான ஈர்ப்பு இன்றி, பெண்ணிடம் ஈர்ப்பு அதிகமிருக்கும். உடலளவிலும் இவர்களது நெருக்கம் அதிகமிருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதிலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்வதிலும் இன்பம் காண்பார்கள். இவர்கள் விஷயத்தில் முழுமையான செக்ஸ் உறவு இருக்காது. சராசரி செக்ஸ் உறவை வைத்துக் கொண்டு, இம்மாதிரி லெஸ்பியன் உறவில் இருக்கிற பெண்களும் உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு.



*டீன் ஏஜ் பெண்களுக்கேற்ற சரியான கருத்தடைமுறை எது? கருத்தடைமாத்திரைகள் பாதுகாப்பானவையா?*
டீன் ஏஜில் செக்ஸ் என்பதே ஆபத்தானது. அதற்குப் பாதுகாப்பு முறை வேறா? கருத்தடை மாத்திரைகள் என்பவை ஹார்மோன் மாத்திரைகள். கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிற பெண்கள், இதை மாதவிலக்கான குறிப்பிட்ட நாள் முதல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றம், கர்ப்பம் நிகழாமல் தடுக்கும்.
வாந்தி, தலைசுற்றல், பசியின்மை, திடீர் இரத்தப் போக்கு, எடை அதிகரிப்பு என கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வருடக் கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய்கூட வரும் என்கிறார்கள்.
டீன் ஏஜில், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணுறை உபயோகிப்பது நல்லது. அது பால்வினை நோய்களையும் தவிர்க்கும்.
*உயரத்தை அதிகரிக்கச் செய்ய ஹார்மோன் சிகிச்சை உண்டாமே?*
லைசின் மாதிரியான அமினோ அமிலங்கள்தான் இளம் வயதில் உயரத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. அதுவும் கூட குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பலன் தராது. அமினோ அமிலம் கலந்த புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் எடைக் கேற்ற உயரம் கிடைக்கும். ஹார்மோன் சிகிச்சைகள் பல பக்க விளைவுகளைக் கொண்டவை. மிக மிக எச்சரிக்கையாக செய்யப்படாத பட்சத்தில் இத்தகைய சிகிச்சைகள் பேராபத் துக்களை வரவழைக்கும்.

*மார்பகங்கள் குறித்து டீன் ஏஜ் பெண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்…. அவைபற்றி…?*
டீன் ஏஜைத் தொடுகிற வரை பிரா அணிய வேண்டாம். மார்பக வளர்ச்சி ஆரம்பித்ததும் சரியான அளவுள்ள பிரா அவசியம். குளிக்கும்போது மார்பகங்களை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். மார்பகங்களின் அடிப்பகுதியில் வியர்வை தங்கி, தொற்று நோய் வரலாம்.
மார்பகங்களின் நடுவே காம்புகள் இருக்கும். பெண் முழு உடல் வளர்ச்சி அடைகிற போது, இதுவும் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும். சில பெண்களுக்கு மார்பகக் காம்புகள் சற்றே உள்ளடங்கி இருக்கலாம். அது கர்ப்பம் தரிக்கிற சமயத்தில் தானாகச் சரியாகிவிடும்.
மார்பகக் காம்புகளின் நிறமும், அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். சில பெண்களுக்கு அந்த இடத்தில் ஒன்றிரண்டு ரோமங்கள் தென்படலாம். அதுவும் சகஜமான விஷயமே.
பேஷன் என்ற பெயரில் சில டீன் ஏஜ் பெண்கள் பிரா அணிவதில்லை. மார்பக வளர்ச்சி முழு வீச்சில் இருக்கிற டீன் ஏஜ் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்கேற்ற சப்போர்ட் தருவது பிரா. அதைத் தவிர்ப்பதால் மார்பகங்களின் ஷேப் மாறவும், தொய்வடையவும் வாய்ப்புகள் அதிகம்.

*உடலை ஸ்லிம்மாக வைத் திருக்க உடல் இளைக்க வைக்கிற மாத்திரைகள் சாப்பிடலாமா?*
உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் உடன் தொடர்பு கொண்டு, பசியின்மையை உண்டு பண்ணக்கூடியவை. இதன் விளைவாக, தூக்கமின்மை, மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். சிலவகை உடல் இளைக்கச் செய்கிற மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகிற உணர்வை ஏற்படுத்துமாம். இளம் தலைமுறைக்குப் பொறுமை ரொம்பக் குறைவு. உடல் இளைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை பொறுமை. உணவுக் கட்டுப்பாடு, சரியான சம விகித உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி போன்றவை மட்டுமே அழகான உடலுக்குத் தீர்வு.
*By Dr.ஷர்மிளா*

பயர்பாக்ஸ் ட்ரிக்ஸ்

பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்து பல்வேறு டிப்ஸ்களும் தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்த டிப்ஸ்களே அதன் பயன்பாட்டிற்கும் அடிப்படையாய் அமைகின்றன. அண்மையில் அதிகம் அறியப்படாத வசதிகள் சிலவற்றை பயர்பாக்ஸ் தொகுப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்பட்டது. அவை அனைத்துமே ஒருவருடைய பிரவுசிங் அனுபவத்தினை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் அமைப்பதாக உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. டேப்களுக்கு காப்பி அமைக்க: ஒரு குறிப்பிட்ட டேப்பில் அதற்கான திறக்கப்பட்ட தளம் இருக்கும். இப்படியே நிறைய தளங்களைத் திறக்கலாம். சில வேளைகளில் இரு முனைகளில் உள்ள டேப்களில் உள்ள தளங்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டியதிருக்கும். அப்படியானால் ஒரு முனையில் உள்ள டேப்பினை அடுத்த முனையில் உள்ள தளம் அருகே இழுத்து வைக்கலாமா? அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கு ஒரு காப்பி எடுத்து, இன்னொரு முனையின் அருகே அமைத்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா! அதெப்படி ஒரு டேபிற்கு காப்பி அமைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா! ஆனால் காப்பி அமைக்க முடியும் என்பதே உண்மை. எந்த டேப்பிற்கு காப்பி அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதன் மீது கர்சரை வைத்து, பின் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே அதனை இழுத்து வந்து, டேப் பாரில் காலியாக உள்ள இடத்தில் விடவும். இப்போது விட்ட இடத்தில் அந்த டேபிற்கான காப்பி கிடைக்கும். இதனையும் திறந்து இயக்கலாம். தேவையில்லை என்றால் ஒன்றை மட்டும் மூடிவிடலாம்.
2.டூல்பாரில் சிறிய ஐகான்கள்: இது ஒரு சின்ன வசதிதான். இருந்தாலும் பலர் இதனை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணுகிறேன். நேவிகேஷன் பட்டன்களை சிறிதாக அமைக்க விரும்புகிறீர்களா! டூல்பாரில் உள்ள ஹோம் ஐகான் மீது கர்சரைக் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் கஸ்டமைஸ் (Customize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கட்டத்தில் உள்ள ஐகான்களை நீக்கலாம்; அல்லது புதியனவற்றை இணைக்கலாம். அதே நேரத்தில் யூஸ் ஸ்மால் ஐகான்ஸ் என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் ஐகான்கள் அனைத்தும் சிறியதாகக் காட்டப்படும்.

Saturday, July 21, 2012


ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!



ஆண்மை குறைவு?
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும்.
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுற வில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடி க்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந் துகளை தயார் செய்து,
விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.
இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுக ளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக் கம் இளைஞர்களுக்கு வேண் டுமல்லவா? இத்தகைய வினா க்களுக்கு விடையளித்து, தெ ளிவுபடுத்தி தைரியப்படுத்துவ தே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற் பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்திஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற் படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவை களில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர்.
இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக் கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும்உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமி த்து வைக்கப்படுகின்றது. அது நிறை ந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவி ட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந் துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக்கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக் கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல்திறன் குறை ந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் கார ணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.
பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என் றார் மகாத்மா காந்தி. பயம் பல த்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்ப தையும் இழக்கும்படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்தி க் கொள்ள வேண்டும். மனதிற் கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்துகொள்ளுதல், சக்தியான உணவை உண் ணுதல் போன்றவைகள் இந்த நோய்களி ல் இருந்து நம்மை காப்பாற்றும்.
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகி த்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப் பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைக ளையும் அவ்வப்போது ஏற்படும் உடல் நலக் கோளாறுகளுக்காக உட் கொள் ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரை கள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல்உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய் கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர் தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுத ல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்ற வை செய்யலாம்.
இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக் கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!



ஆண்மை குறைவு?
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும்.
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுற வில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடி க்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந் துகளை தயார் செய்து,
விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.
இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுக ளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக் கம் இளைஞர்களுக்கு வேண் டுமல்லவா? இத்தகைய வினா க்களுக்கு விடையளித்து, தெ ளிவுபடுத்தி தைரியப்படுத்துவ தே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற் பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்திஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற் படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவை களில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர்.
இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக் கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும்உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமி த்து வைக்கப்படுகின்றது. அது நிறை ந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவி ட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந் துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக்கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக் கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல்திறன் குறை ந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் கார ணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.
பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என் றார் மகாத்மா காந்தி. பயம் பல த்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்ப தையும் இழக்கும்படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்தி க் கொள்ள வேண்டும். மனதிற் கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்துகொள்ளுதல், சக்தியான உணவை உண் ணுதல் போன்றவைகள் இந்த நோய்களி ல் இருந்து நம்மை காப்பாற்றும்.
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகி த்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப் பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைக ளையும் அவ்வப்போது ஏற்படும் உடல் நலக் கோளாறுகளுக்காக உட் கொள் ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரை கள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல்உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய் கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர் தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுத ல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்ற வை செய்யலாம்.
இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக் கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா?



ஆணோ, பெண்ணோ, திருமணத்தி ற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந் தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றி தான்.
ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந் த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு பதற்றத்தையே ஏற்படுத் தியிருப்பார்கள். புதுமணத் தம்பதியரும் பரிட்சைக்கு தயாராகி
வரும்மாண வர்களைப் போல ஒருவித டென்ச னுடனேயே முதலிரவு அ றைக்கும் நுழைவார்கள். எதை ப்பற்றியும் கவலைப்படாமல் ரிலாக்ஸ்சாக இருந்தாலே பாதி வெற்றிதான். முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதிய ரா? அப்படி எனில் அவசரப்படா மல் இந்த கட்டுரையை படியு ங்கள்..
பரிசோதனை முயற்சி வேண்டாம்
தாம்பத்திய உறவிற்காக முதல்முறையாக இருவரும் நெருங்கும் போது, அனுபவமின்மையினால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத் தான் செய்யும் எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொறுமை யுடன் கையாளுவது அவசியம். புதிதாய் திருமணமாகி வந்துள்ள பெண் தன் னைப்பற்றி தவறாக நினைத்துவிடுவா ளோ என்ற எண்ணத் திலேயே பதற்றம் தொற்றிக்கொள்ளும். எனவே உறவு தொடங்கும் முன்பே அவசரப்படாமல் சிறிது நேரம் முன்விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இது பெண்ணை அச்சுறுத் தாமல் பரவசமூட்டும். முதல் நாளிலே யே வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்காக பரிசோதனை முயற்சியில் ஈடுபடவேண்டாம், ஏனெனில் அது விபரீ தமாகிவிடும்.
வலியால் பதற்றம்
பெண்ணுக்கு வலி ஏற்படுவது இயற்கை, சிலருக்கு கன்னித்தன்மை இழப்பதன் காரணமாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. இதனால் பெண்ணுக்கு பதற்றம் ஏற்படும். எனவே பெண்ணின் பதற் றத்தைப் போக்கி சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டியது ஆண்கள்தான். பெண்ணுக்கு வசதி யான பொஸிசன்களை கற்றுத்தர வேண்டும். பாதுகாப்பான, மென்மையான அணுகுமுறைக ளை கையாளவேண்டும். அப்பொழுதுதான் உற வின் மகிழ்ச்சியை இருவரும் அனுபவிக்க முடி யும்
பாதுகாப்பு அவசியம்
முதல் உறவின் போது எல்லா பெண்களுக்குமே ரத்தம் வரவேண்டும் என்று அவசியமில்லை. ரத்தம் வரவில்லை என்றால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவ ளாக இருப்பாளோ என்ற சந்தேக விதை எழத்தேவையில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயி ற்சி செய்தல் போன்ற காரணங் களினால் கன்னித்தன்மை ஜவ் வு கிழிந்து போக வாய்ப்புள் ளது. எனவே ரத்தம் வரவில் லை என்றாலும் அதை எண் ணி கவலைப்பட வேண்டியதில்லை .
உடனடியாக குழந்தை பேறு வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியர் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ள வே ண்டும். கர்ப்பம் தரித்த பின்னர் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது நல்லது.
பெண்மையும், மென்மையும்
நம்மை ‘நிரூபித்தாக’ வேண்டும் என்பதற்காக முதல் நாளிலேயே மிகவும் சிரத்தை எடுக்க வேண்டி ய அவசியமில்லை. ஏனெனில் பெண்ணுக்கும் அது முதல் ராத்திரி தானே. பெண்ணுக்கும் அதைப்ப ற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அது அவர்களை பரவசப்படுத்தவே செய்யும். எனவே பல்வேறு ‘சோர்ஸ்கள்’ மூலம்பெற்ற கேள்வி ஞானத்தை எல்லாம் முதல்நாளன்றே மனைவிக்கு கற்று த்தர வேண்டியதில்லை.
முதல்நாள் என்பது அறிமுகமாகவே இருக்கட்டும். மென்மையாக வே அது தொடங்கட்டும். அப்பொழுதுதான் மறுநாட்களிலும், வரும் நாட்களிலு ம் எதிர்பார்ப்பும் அதிகமாகும், உறவும் போரடிக்காமல் இனிமையாக தொட ரும்.