Monday, July 30, 2012


தண்ணீர் பருகுவது ஏன்?


உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம்… சூரிய ஔ படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கிறார்கள், இயற்கை வைத்தியர்கள்.
தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது.
உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவ ருபமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்க ளுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது.
நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவ தில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக் கிறது. நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை முலமாகவும், சளி முலமாகவும் வெளி யேற்றுகிறது.
நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமா காமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது.
முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைபடுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.
`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔ பட்ட தண்ணீர்தான்’ என்று கூறிள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றபடுபவர்.
இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யபடுவது தற்போது பிரபலமாகி வருகிறது.
`சூரிய ஔ பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணபடுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தபடுத்துகின்றன’ என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர்.
சீனாவில் முலிகை பொடிகளைக் கலந்து முலிகை குளியல் முறையினால் பல நோய்களை குணபடுத்துகிறார்கள். அதேபோல் பவுத்த மதம், யூத மதம், இஸ்லாமிய மதங்களிலும் குளிப்பதும் ஒரு சமயச் சடங்காகவே செய்யபடுகிறது.
உடலைச் சுத்தபடுத்துவது குளிபதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தபடுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.
குழந்தை பிறந்தது முதல் குளிபாட்டுதல், பந்யா வாசனம் செய்தல், பெண் குழந்தைகள் ருதுவானால் ருதுமங்கள் ஸ்நானம் செய்தல் போன்ற சடங்குகளிலும், திருமண காலத்தில் மணமக்களை நீராட்டும் சடங்குகளிலும் தண்ணீரால் உடலை தூய்மைபடுத்துவது வலிறுத்தபடுகிறது.
குளிப்பது என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. மேலும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களை கழுவும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.
ரோமாபுரியில் குளிப்பதை மிகவும் முக்கியமான ஒரு சடங்காகவே வைத்திருந்தார்கள். அவர்கள் அதிகமாக சூரிய ஔ பட்ட தண்ணீரில்தான் குளித்ததாக வரலாறு கூறுகிறது.
இயற்கையானது மனித சமுதாயம் நோயின்றி வாழ்வதற்காகவே தண்ணீரைம், சூரிய வெளிச்சத்தைம், காற்றையும் படைத்திருக்கிறது.

No comments: