Saturday, July 21, 2012


நகங்கள் வெள்ளையாக இருக்க ஆசையா?

http://tamilmedia24.com/images/ladiessite/medium/1342246984white nail.jpg
பெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை அழகுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் தருவார்கள். இதனால் அவர்கள் நகங்களை நீளமாக வளர்த்து அதற்கு அழகிய வடிவத்தைக் கொடுத்து, அதன் மேல் நெயில் பாலிஸ் போடுவார்கள். மேலும் நெயில் பாலிஸ் போடாமல் நகங்களை வெள்ளையாக வைத்தும் அழகுப்படுத்தலாம். இதற்கு மெனிக்யூர் எனப்படும் நகங்களை வடிவமைப்பதை செய்தால் மட்டும் நகங்களானது அழகாக வெள்ளையாக இருக்காது. ஆகவே அத்தகைய நகங்களை வெள்ளையாக்க சில வழிகள் வீட்டிலேயே இருக்கின்றன.

நகங்கள் வெள்ளையாக....

1. எலுமிச்சை ஒரு சிறந்த நகங்களை அழகுபடுத்த பயன்படும் பொருள். ஒரு துண்டு எலுமிச்சை பழத்தை எடுத்து நகங்களில் சிறிது நேரம் தேய்த்து, ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதனால் நகமானது வெள்ளையாக மின்னும்.

2. சிறிது எலுமிச்சைபழச்சாற்றை சோப்புத் தண்ணீரில் விட்டு, 4 முதல் 7 நிமிடம் வரை ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசவும்.

3. எலுமிச்சையானது நல்ல மருத்துவ குணம் கொண்டது. பெரும்பாலும் நகங்கள் வெள்ளையாக தெரியாமல் இருக்க காரணம், நகங்களின் இடையில் நீண்ட நாட்கள் அழுக்குகள் இருப்பதாலே. இவ்வாறு அழுக்குகள் நீண்ட நாட்கள் தங்கி அதன் நிறத்தை மாற்றிவிடுகிறது. இத்தகைய அழுக்குகள் போக எலுமிச்சை சாற்றில் தினமும் நகங்களை ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் நகங்களானது நல்ல பொலிவுடன் இருக்கும்.

4. பேக்கிங் சோடாவை பயன்படுத்தியும் நகங்களை வெண்மையடையச் செய்யலாம். வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு கரைத்து, பின் நகங்களை ஊற வைத்தால் நகமானது பார்க்க அழகாக இருக்கும். இதனை தினமும் செய்யாமல், வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும்.

5. வெள்ளை வினிகரும் ஒரு சிறந்த பொருள். வெதுவெதுப்பான சோப்பு நீரில் சிறிது வெள்ளை வினிகரை சேர்த்து 8 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவலாம்.

6. எப்படி பற்கள் வெண்மையாக இருக்க பேஸ்ட்டை பயன்படுத்துகிறோமோ, அதேபோல் நகங்களையும் பேஸ்ட்டால் வெள்ளையாக்கலாம். போஸ்ட்டை நகங்களில் தடவி 4 8 நிமிடம் உற வைத்து, பின் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால், நகமானது வெள்ளையாகும்.

7. ஒரு துண்டு எலுமிச்சையுடன் உப்பைத் தொட்டு, நகங்களில் கொஞ்ச நேரம் தேய்த்தால் நகங்கள் வெள்ளையாக மின்னுவதோடு, நகங்கள் வழுவழுப்போடும் பளபளப்போடும் காணப்படும்.

இவ்வாறு செய்தால் நகங்களை வெள்ளையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்

No comments: