செக்ஸ் உறவுக்குப் பின் தூக்கம் உடலுக்கு நல்லதா?
Posted by admin
நல்ல செக்ஸ் உறவுக்குப் பின் அடித்துப் போட்டது போல தூக்கம் வரும். இது ரொம்ப நல்லதுதான் என்கிறார்கள் அமெரிக்க உளவியலாளர்கள்.அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் அல்பிரைட் கல்லூரி ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின. அதில், செக்ஸ் உறவுக்குப் பின்னர் வரும் தூக்கம் குறித்தும், அதுதொடர்பாகவும் கருத்துக் கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் அவர்களுக்குத் தெரிய வந்தது என்னவென்றால் நல்ல உறவுக்குப் பின் வரும் தூக்கத்திற்கும், ஆண்களின் மன நிலைக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதே.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான டேணியல் கிரெகர் கூறுகையில், செக்ஸ் உறவுக்குப் பின்னர் ஆண்களுக்குத்தான் அதிகம் தூக்கம் வரும். இது நல்லதுதான். காரணம், திருப்திகரமான உறவும், அதீத பாசம், அன்பும் கொண்ட ஆண்களுக்குத்தான் இப்படி தூக்கம் வருகிறதாம். இது நாங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். எனவே உறவுக்குப் பின் ஆண்கள் நன்றாக தூங்கினால் அது நிச்சயம் பெண்களுக்குத்தான் நல்லது என்றார்.
இந்த ஆய்வுக்காக 456 ஆண் மற்றும் பெண்களை பேட்டி கண்டனர். அவர்களிடம் செக்ஸ் உறவுக்குப் பிந்தைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர். அதில் செக்ஸுக்குப் பின்னர் யார் முதலில் தூங்கப்போவது என்பது முக்கியமான கேள்வியாகும்.
இதில் உறவுக்குப் பின்னர் தூங்கப் போனவர்களிடம் தங்களது பார்ட்னர்களிடம் அதீத பாசமும், அன்பும், உறவு குறித்த நிறைவும் இருப்பது தெரிய வந்ததாம்.
மேலும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டவர்களில் முதலில் ஆண்கள்தான் சீக்கிரம் தூங்கி விடுகிறார்களாம். அதேசமயம், செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளாத தம்பதிகளில் முதலில் தூங்குவது பெண்களாம்.
இதுகுறித்து கிரகெர் கூறுகையில், ஆண்களுக்கு உறவின்போது திருப்தியும், தங்களின் மனைவி மீது அதீத அன்பும், பாசப் பிணைப்பும் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் திருப்திகரமான மன நிலைக்குப் போய் விடுகிறார்கள். இதுவே அவர்களது தூக்கத்தை விரைவுபடுத்துகிறது என்றார்.
இதுபோக செக்ஸுக்குப் பின்னர் செய்ய வேண்டியவை குறித்து சில டிப்ஸ்களையும் கிரகெட் அடுக்குகிறார்.
உச்சத்தை எட்டி பின்னர் அது முடியும்போது உங்களது பார்ட்னரை விட்டு உடனே விலக முயலாதீர்கள். அவருடன் நெருக்கமாக படுத்திருங்கள்.
தலையை கோதி விடுவது, முத்தமிடுவது, கை விரல்களால் மென்மையாக வருடிக் கொடுப்பது, செல்லமாக கொஞ்சிப் பேசுவது போன்றவற்றை செய்யுங்கள்.
உறவு முடிந்தவுடன் பாத்ரூமுக்கு ஓடுவது நல்லதல்ல. அது உறவை கசக்கச் செய்து விடும்.
உடல் ரீதியான நெருக்கம், உறவோடு முடிந்து விடுவதில்லை. அதற்குப் பிறகும் கூட அது நீடிப்பது அவசியம்.
உறவுக்குப் பின்னர் கடைப்பிடிக்கவே கூடாத ஒரு விஷயம் உள்ளது. அது – செல்போனை எடுத்து சுவிட்ச் ஆன் செய்வது, மிஸ்டு கால் வந்துகுக்கா, மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பது.
No comments:
Post a Comment