முளை தானியங்கள் அற்புத, அதிசய உணவுகள் அதிக அளவில் தெம்பும், ஆரோக்கியமும், ஆற்றல், உடல் சக்தி, உழைப்பு சக்தி தரும் ஒப்பற்ற உணவுகள். நமது உணவின் ஒரு அங்கமாக, சமைக்காமல் சேர வேண்டும். எல்லா இடங்களிலும் இப்போது முளைக்க வைத்தும் கிடைக்கிறது. பச்சைபயறு, வேர்க்கடலை, கோதுமை, கேழ்வரகு, கம்பு, மூக்குக்கடலை, உளுந்து போன்றவைகளில் இருந்து முளை தானியங்கள் தயாரிக்கலாம்.
- கொண்டைக் கடலை
- பச்சைபயறு
- கோதுமை
முளை தானியங்கள் தயாரிக்கும் முறை:
- 50 கிராம் தானியங்கள் முளைத்த பின் 300 கிராம் முதல் 400 கிராம் வரை பெருகிவிடும். 8 முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின் ஈரப் பருத்தி துணியில் அத்தானியங்களைக் கட்டி 8 முதல் 12 மணி நேரம் வரை காற்றில் விட்டால் நல்ல முளை கிளம்பி வரும். ஒரு மணி நேர இடை வெளியில் சிறிது தண்ணீர் தெளிக்கலாம். இப்பொழுது முளை தானியங்கள் தயார். இந்த முளை தானியங்களை காலை உணவாக சாப்பிடலாம்.
முளை தானியங்கள் சாறு தயாரிக்கும் முறை:
- ஏதேனும் ஒரு தானியத்தை முளைக்க விட்டு முளைத்த தானியம் 150 கிராம் அளவில் எடுத்து கழுவி சமைக்காமல் பச்சையாக அரைத்து அத்துடன் 150 மி.லிட்டர் தண்ணீர் சோ்த்து வடிகட்டவேண்டும். சுவைக்காக தேன், தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.
முளை தானியங்களில் காணப்படும் சத்துக்கள்:
- வியப்பூட்டும் வகையில் தானியங்கள் முளைக்கும் போது சத்துக்கள் பல மடங்குகள் பெருகி மனிதர்களுக்கு பல நன்மைகளை தருகிறது.
- புரதம், விட்டமின்கள், தாது உப்புகள், காரத்தன்மை மிகுந்து, அமிலத்தன்மை குறைந்து நல்ல பலன் தருகின்றது. மேலும் தேவையற்ற மாவுச்சக்தி, வெப்பசக்தி ஆகியவற்றை குறைய செய்கிறது. புரதம், உயிர்ச்சத்துக்கள் அதே அளவு கூடுவதால் நமது இளமை மீட்கப்படுகிறது. உடல் எடையிலும் எட்டு மடங்கு பெருக்கமடைவதால் குறைந்த அளவில் நிறைந்த பலன்களைப் பெறுகிறோம்.
- கலோரி வெப்பசக்தி 15 விழுக்காடும்
- மாவுச்சத்து 9 விழுக்காடு குறைந்தும்
அதற்கும் மேலாக கூடும் சத்துக்கள் கீழே தரப்படுகின்றன.
- புரதம் 30% கூடுகிறது
- கால்சியம் 35% கூடுகிறது
- சோடியம் 700% பல்கிப் பெருகிறது
- இரும்புத்தாது 40% வளர்கிறது
- பொட்டசியம் 80% வளர்கிறது
- பாஸ்பரஸ் 55% உயர்கிறது
அதே போல் உயிர்ச்சத்துக்களும் கூடுகின்றன.
- விட்டமின்எ – 280%
- விட்டமின் B1 – 210%
- விட்டமின் B2 – 510%
- நியாசின் – 255%
- அஸ்கார்பிக் அமிலம் விட்டமின் C – 500 விழுக்காடுக்கு மேலும் பெருகி அற்புத ஆற்றலை தருகின்றன.
- அமினோ அமிலங்களும் கூடுகின்றன. இதில் பெருகியப் புரோட்டினும், சத்துக்களும் எளிதாக ஜீரண மயமாகும் நிலையில் உள்ளதால் மனிதர்களின் மலிவான உணவுகள் எனலாம். முளைத்த தானியங்கள் வாயுத் தொல்லைகள் தருவதில்லை.
மருத்துவக் குணங்கள்:
- குளிர்ச்சி மிகுந்தது. வெயில் காலங்களில் நன்றாகப் பயன்படுத்தலாம்.
- உடல் சூடு, மலக்கட்டு, மூலப்பிணிகள் குறையும்.
- பசியை நீக்கும் ஆற்றல் மிகுந்த உணவாகும்.
- முளைத்த பச்சைப் பயறு ஒருவாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், வயிற்றுப்புண் ஆகியவைகள் குறையும்.
- உடல் தொப்பை, பருமன், நீரழிவு நோய், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
- உடலின் ஆற்றல், பிராண சக்தி ஆகியவற்றை பெருக்கிவிடும்.
- உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளும் புத்துணர்வும், புதிய சக்தியும் கிடைக்கும்.
- நோஞ்சான் குழந்தைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
- வேலைப் பளு மிகுந்தவர்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
No comments:
Post a Comment