அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புண்டு – நிபுணர்கள்
தலைமுடிக்கும் செக்ஸ்க்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்தே தலை முடியானது மனிதர்களி ன் பாலுணர்வை தூண்டும் பொ ருளாக இருந்துள்ளதாக நிபுணர் கள் கண்டறிதுள்ளனர்.
கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப் படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளு ம், கிருஸ்தவமத சகோதரிகளு ம் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக மழித்துவிட் டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக்கொண்டோ வாழ்க்கின்றனர்.
கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் பெரும்பாலோனோரின் கண்கள் அந்த பெண்ணைத்தான் பார்க்கின்றனர். அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புடையதாக நிபுணர்கள் கூறியுள்ள னர்.
அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம். அது மென்மை யை உணர்த்துகிறது. பெண்ணின் தைரியத்தை காட்டுகிறது. அனை வருக்கும் கவர்ச்சியான அழகை யும் தருகிறது. அதனால்தான் சிறப்புவாய்ந்த செக்ஸாலஜிஸ் டான எல்லீஸ், தனது செக்சுவல் சைக்காலஜி என்ற நூலில் கூந்த லானது பாலுணர்வை தூண்டும் ஒரு அம்சம் என்று குறிப்பிட்டு ள்ளார்.
கூந்தலானது கண்களை கவர்கி றது. அதனை தொட தூண்டுகிறது. எத்தனையோ டிசைன்களில் ந கைகளை அணிந்தாலும் கூந்தல் இல்லாத பெண்களுக்கு அழகு சற்று குறைச்சலாகத்தான் இருக் கும். கூந்தலானது கவர்ச்சியின் அம்சமாக கருதப்படுவதால்தான் பண்டைய காலங்களில் கணவ னை இறந்த பெண்களின் கூந்த லை மழித்து தலையில் முக் காடிட்டு வந்துள்ளனர். புத்த மதம், ஜைன மதத்தை தழுவிய வர்கள் துறவியாக முடிவு செய்த பெண்கள் தங்கள் கூந்தலை முற்றிலும் மழித்துக் கொண்டனர். இதன் மூலம் தங் களின் அழகை பிறருக்கு காட்சி ப்பொருளாக்காமல், பிறரை இம்சிக்காமல் இறைவன் சேவை யை கருத்தில் கொண்டு வாழ்கின்றனர் துறவிகள்.
கார்மேக கூந்தலைக் கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை அணிந்திருந்தாலும் அந்த கூந்தல் அழகே அவளை பேரழகியாககாட்டும் அதனால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய த்துவம் கொடுக்கி ன்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கூந்தலா னது காதல் உணர்வையும், பாலுணர்வையும் அதிகரிக் கும் பொருளாக இருந்துள்ளது. பெண்ணின் கூந்தல் அழகு ஆணின் மூளை யில் சமிக்ச்சைகளை தூண்டுகிறது. அதே போல் ஆணின் தலையில் கூந்தல் இருப்பது தான் அவர்களின் அழகையும் கவர்ச்சியி னையும் அதிகரிக்கிறது. அதனால்தான் பெரும்பாலான ஆண்கள் கொஞ்சம் முடி உதிரத்தொடங்கினாலே அழகு போய்விட்டதே என்று பதறத் தொ டங்குகின்றனர். தாம்பத்ய உறவின் போது கூந்தலை கோதுவதன் மூலம் உணர்வுகளை தூண்ட முடியும் என்றும் அவர்கள் எண்ணுகி ன்றனர்.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நறுமணத் தைலங்க ளை தடவி கூந்தலை வளர்த் ததாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. கலரிங், கர்லிங் உள்ளி ட்ட ஸ்டைல்களை செய்தும் கூந்தலை பரா மரித்துள்ளனர். கூந்தலை அழகுபடுத்துவது மனிதர்களின் சுதந்திர உணர் வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேபோல் பண்டைய திருமணங்களில் ஆணும், பெண்ணும் கூந்தலை முடிபோட்டு தங்களின் திருமண பந்தத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேபோல் தம்பதியரிடையே ஆரோக்கியமான தாம்பத்ய உறவுஇருக்கும் பட்சத்தில் கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த செக்ஸ் ஹார்மோன்களி ன் சுரப்பு சரியான அளவு இருக்கும் பட்சத்தில் அதி க அளவு கூந்தல் வளர்ச் சியடைகிறது. அதேபோ ல் அதிக அளவில் கவ லை ஏற்பட்டாலோ மன அழுத்தம் இருந்தாலோ கூந்தல் உதிரத் தொடங்குகிறது. நமது மன ஆரோக்கியத் தோடும், உடல் ஆரோக்கி யத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது கூந்தல்.
No comments:
Post a Comment