Monday, July 16, 2012


பயனுள்ள தகவல்கள் தரும் பாதுகாப்பான தளம்




அண்மையில் இணையத்தில் உலா வந்த போது பார்த்த ஒரு தளத்தின் மீது நான் தீராத ஆசை கொள்ளும் அளவிற்கு அது என்னைக் கவர்ந்தது. கம்ப்யூட்டர் மலருக்கான பல டிப்ஸ்களை மட்டுமின்றி, பல பயனுள்ள தகவல்களையும் அது தந்தது. மேலும் நம்மை உற்சாகப்படுத்த கேம்ஸ்கள் பலவற்றையும் அது கொண்டுள்ளது. இந்த தளத்தின் முகவரி:http://www.safesurfer.org/ இந்த தளம் பல பிரிவுகளைக் கொண்டு அழகாக நம்மைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றவுடன் தளம் அமையும் விதம் பாராட்டத்தக்கதாய் அமைகிறது. இதன் பிரிவுகளைப் பார்க்கலாம்.
Forum: இதில் இந்த தளத்தைக் காண வருபவர்கள் கூறும் கருத்துக்களைப் படிக்கலாம். நீங்களும் உங்கள் கருத்தை எழுத வேண்டும் என எண்ணினால், இதில் பதிந்து கொள்ள வேண்டும். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்பதால், இந்த தளம் வரும் அனைவரும் இதில் தங்களைப் பதிந்து கொள்வார்கள்.
2� Blog: நாம் சில கருத்துக்களை பைசாவுக்கு புண்ணியம் இல்லாதது என்று வேடிக்கையாகவும் (சில வேளைகளில் சீரியசாகவும்) கூறுவோம் அல்லவா! அது போல்தான் இதுவும். இங்கு நீங்களும் உங்களைப் பதிந்து கொண்டு எழுதலாம். டிப்ஸ், ட்ரிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் குறித்த தலைப்புகளில் தகவல்கள் ஆகியவற்றைத் தரலாம்.
The Buzz : இந்தப் பிரிவில் நாம் ஆர்வம் கொண்டுள்ள பல தலைப்புகளில் அண்மைக் காலத்திய செய்திகளையும் தகவல்களையும் படிக்கலாம். ஸ்போர்ட்ஸ், சயின்ஸ், உடல்நலம், தொழில் நுட்பம் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
Lingo: இன்டர்நெட் குறித்த ஸ்லாங் என்னும் வழக்குச் சொற்கள் மற்றும் சுருக்குச் சொற்களைக் காணலாம். மேலே உள்ள ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் உள்ள எழுத்து ஒன்றில் அழுத்தினால், அந்த எழுத்தில் தொடங்கும் சொற்கள் குறித்த விளக்கங்கள் கிடைக்கும்; அல்லது ஸ்குரோல் செய்து கீழாக இதன்பக்கங்களைக் காணலாம்.
Tips’n’Trix: நான் அதிகம் விரும்பும் பிரிவு. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் குறித்த பல டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் இந்தப் பிரிவில் தரப்படுகிறது. அது மட்டுமின்றி நீங்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் என்று ஒரு பட்டியல் காட்டப்படுகிறது.
மேற்கண்ட பிரிவுகளுடன் இன்னும் சில பயனுள்ள பிரிவுகள் உள்ளன. அவற்றை நீங்களே இந்த தளம் சென்று அறிந்து கொள்ளலாம்.

No comments: