Wednesday, July 25, 2012


பயர்பாக்ஸ் ட்ரிக்ஸ்

பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்து பல்வேறு டிப்ஸ்களும் தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்த டிப்ஸ்களே அதன் பயன்பாட்டிற்கும் அடிப்படையாய் அமைகின்றன. அண்மையில் அதிகம் அறியப்படாத வசதிகள் சிலவற்றை பயர்பாக்ஸ் தொகுப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்பட்டது. அவை அனைத்துமே ஒருவருடைய பிரவுசிங் அனுபவத்தினை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் அமைப்பதாக உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. டேப்களுக்கு காப்பி அமைக்க: ஒரு குறிப்பிட்ட டேப்பில் அதற்கான திறக்கப்பட்ட தளம் இருக்கும். இப்படியே நிறைய தளங்களைத் திறக்கலாம். சில வேளைகளில் இரு முனைகளில் உள்ள டேப்களில் உள்ள தளங்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டியதிருக்கும். அப்படியானால் ஒரு முனையில் உள்ள டேப்பினை அடுத்த முனையில் உள்ள தளம் அருகே இழுத்து வைக்கலாமா? அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கு ஒரு காப்பி எடுத்து, இன்னொரு முனையின் அருகே அமைத்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா! அதெப்படி ஒரு டேபிற்கு காப்பி அமைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா! ஆனால் காப்பி அமைக்க முடியும் என்பதே உண்மை. எந்த டேப்பிற்கு காப்பி அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதன் மீது கர்சரை வைத்து, பின் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே அதனை இழுத்து வந்து, டேப் பாரில் காலியாக உள்ள இடத்தில் விடவும். இப்போது விட்ட இடத்தில் அந்த டேபிற்கான காப்பி கிடைக்கும். இதனையும் திறந்து இயக்கலாம். தேவையில்லை என்றால் ஒன்றை மட்டும் மூடிவிடலாம்.
2.டூல்பாரில் சிறிய ஐகான்கள்: இது ஒரு சின்ன வசதிதான். இருந்தாலும் பலர் இதனை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணுகிறேன். நேவிகேஷன் பட்டன்களை சிறிதாக அமைக்க விரும்புகிறீர்களா! டூல்பாரில் உள்ள ஹோம் ஐகான் மீது கர்சரைக் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் கஸ்டமைஸ் (Customize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கட்டத்தில் உள்ள ஐகான்களை நீக்கலாம்; அல்லது புதியனவற்றை இணைக்கலாம். அதே நேரத்தில் யூஸ் ஸ்மால் ஐகான்ஸ் என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் ஐகான்கள் அனைத்தும் சிறியதாகக் காட்டப்படும்.

No comments: