Monday, July 16, 2012


கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,அன்பான உறவுகள், சுற்றத்தார் என் றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிக ளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடு வார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம்.
எந்த நிலையில் வயிற்றில் குழந்தை யைத் தாங்கி இருக்கும் பெண் ணுக்கு எப்போதுமே மற்ற உறவுக ள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற் றெல்லா உறவுகளையும் பின்னுக்குத்தள்ளி குழந்தை முதல் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.
எதைச் சாப்பிடுவதென்றாலும் அடடா இது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளுமா! என்று யோசித்துவிட்டே சாப்பிட வேண்டியதாகிவிடுகிறது. இது அம்மாவுக்கும் குழ ந்தைக்குமான ‘எமோஷனல் பா ண்டிங்’ என் பதோடு குழந்தையின் நலனுக்கும் அவசியமானது என்ப தால் வயிற்றில் குழந்தை இருக் கும்போது சூடாக காபி, டீ சாப்பி டலாமா ?  ஹெர்பல் டீ குடிக்கலா மா? மசாலா உணவுகளை ஒரு கட்டுக் கட்டலாமா, கூடாதா? நெய்யில் செய்த பலகாரங்களை சாப்பிடலாமா? தேன் சாப்பிடலாமா? போன்ற சந்தேகங்களுக்கு உலக அழகி அம்மா க்கள், உள்ளூர் அழகி  அம்மாக்கள் என் ற வரை யறைகள் எல்லாம் எதுவுமி ல்லை. கர்ப்ப கால டயட் சந்தேகங்கள் அம்மாவாகப் போகும் யா ருக்கு வேணாலும் வரலாம்.) இது போன் ற சில பொதுவான கர்ப்ப கால டயட் சந்தேகங்களுக்கு சென்னை ம ருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் ரமாதேவி இங்கு பதில் அளிக்கிறார்.
(சமீபத்துல குழந்தை பெற்ற உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் பிரசவத்துக்கு முன்பு இதே சந்தேகங்கள் இருந்தி ருக்கலாம் இப்ப அவ ங்களுக்கு சுகப் பிரசவத்துல அழகா ஒரு குட்டி ஐஸ் பிறந்தாச்சு.)
இனி கேள்விகளுக்குப் போவோமா…
கர்ப்பமாய் இருக்கும் போது சூடான பா னங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக் கும் குழந்தைக்குச் சுடுமா?
டாக்டர் பதில்:   “அம்மா சூடான பானங் கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சுடும் என்ப தெல்லாம் கற்பனை. குழந் தைக்குச் சுடாது.
கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பா னங்களையும், உணவுப் பொருட்களையும் சாப்பிடும்  பழக்கம் சிலருக்கு இருக்கலாம். அப்படி சாப்பி டும்போது உணவுக் குழாய் புண் ணாகி அல்சர் வர வாய்ப்பிருப்பதா ல் சூடாக சாப்பிடக் கூடாது என்பது தான் மருத்துவரீதியான காரண ம்.’’
கர்ப்பிணிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாதா?
டாக்டர் பதில்:  “ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். சளி பிடிக்காமல் இருக்கு ம் வரை பிரச்சினை இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்குஇதமாக இருக்கிறதென்று ஆசை ஆசை யாக தினமும் ஐஸ்க்ரீம், ஜில்லென்று ஜூஸ் வகைகளாக சாப்பிட்டுப் பழகினா ல் அது கடு மையான சளி, இருமலில் கொண்டு விடும்.கர்ப்ப காலங்களில் சா தாரண நாட்களில் நாம் எடுத்துக் கொள் ளும் இருமல், சளி மரு ந்துகளை எடுத் துக்கொள்ள முடியாது. அந்த மருந்துகள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதி க்க வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் பெரியவர்கள் கர்ப்பிணிகளை அதிக குளிர்ச்சியான, அதிக சூடான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள அனு மதிப்பதில் லை.’’
கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா ?
டாக்டர் பதில்: “ப்ளட் சுகர் லெவலில் (Blood Sugar ) இன்சுலின்குறைவாக இருப்பவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத் தலாம். ப்ளட் சு கர் லெவலில் இன்சுலின் அதிகமாக இருப் பவர்கள் தேன் சாப்பிடுவதைக் குறைப்பது நல்லது. இல்லாவிட்டால் ரத்தத் தில் சர் க்கரையின் அளவு அதிகரித்து வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கக்கூ டும். தேனில் ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதி கமிருப்பதால் ஆக்சிஜன் ஃப்ரீரேடிக்கிள்க ளை கட்டுப்படுத்தி மூளை மற்றும் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் செயல்படும் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும் சக்தி அதற் குண்டு.”
கர்ப்ப காலத்தில் எடை கூடி விடக் கூடாது என்பதற்காக கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும்  உண வுப் பொருட்களை பெருமள வில் குறைத்து விட்டு புரோ ட்டின்கள் அதிகமிருக்கும் உணவுப் பொருட்களை மட் டும் எடுத்துக்கொள்ளலாமா?
டாக்டர் பதில்:  “இது முற்றிலும் தவறு. கர்ப்ப காலம் என்பது வயிற் றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத் துக்குத் தேவையானசத்தான உணவுகளை சாப்பி ட வேண்டிய காலமே தவிர சாப்பாட்டைக் குறைத்து டயட்டில் இருக்கும் காலம் அல்ல.  வயிற்றிலிரு க்கும் குழந்தையின் போஷாக்கி ற்கு கார்போஹைட்ரேட்டு கள் மிகவும் அவசியம். மே லும் நமது உடலின் ரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் மூ ளைச் செல்கள் தங்களது இயங்கு சக்திக்கான சத்துக்க ளுக்கு பெரு மளவில் கார்போஹைட்ரேட்டுகளையே நம்பி இருக் கின்றன.முற்றிலுமாக கார்போஹைட்ரேட்டுக ளைத் தவிர்த்து விட்டு, நீங் களாக ஒரு டயட் பின்பற்றத் தொடங்கினீர்கள் என் றால் உடலில் மாவுச் சத்து  பற்றாக் குறை ஏற்பட்டு கர்ப்ப கால மல ச்சிக் கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதி களுக்கு உள்ளாவீர்கள். உடல் எடை யை குறைப்பதெல்லாம் குழந்தை பிற ந்த பிறகு பார் த்துக் கொள்ளலாம். கர் ப்ப காலம் குழந்தையின் ஆரோக்கியத் துக்குத் தேவையான அனைத்து உண வுப்பொருட்களையும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டிய காலம் என்பதை அம்மாக்கள் மற க்கக் கூடாது.’’
கர்ப்ப காலத்தில் ஹெர்பல் டீ, ஹெர்பல் ஹெல்த் டிரிங்குகள் சாப்பிடலாமா?
டாக்டர் பதில் : “ஹெர்பல் ஹெ ல்த் டிரிங்குகள் மற்றும் டீ எது வானாலும் சரி உங்களது உட ல்நிலை ஏற்றுக் கொள்கிறதா? என் பதைப் பொறுத்து நீங்கள் வழக்கமாக செக்-அப் செய்து கொள்ளும் மகப்பேறு மருத்து வரின் ஆலோசனையின் பேரி ல் ஹெர்பல் டிரிங்குகள் எடு த்துக் கொள்ளலாம். சிலருக்கு சில மூலிகைகளால் ஒவ்வா மை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் ஹெர்பல் என்ற வார்த்தை யை மட்டுமே நம்பி மருத்துவரை ஆலோசிக்காமல் எதையும் செய்யாமலிருப்பது நல்லது.
“கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பி டலாமா?
டாக்டர் பதில்: “கர்ப்ப காலத்தி ல் கிரீன் டீ சாப்பிடலாம். தே னைப் போல இதிலும் ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகமிருப்ப தால் வயிற்றில் இருக்கும் கரு வின் இதயம் மற்றும் மூளை செல்களின் வளர்ச்சிக்கு நல் லது.”
கர்ப்ப காலத்தில் ஸ்பைசி பிரியாணி, பெப்பர் சிக்கன் போன்றமசாலா சேர்த்த கார சாரமான உணவுப் பொருட்களை உண்ப து சரியா?
டாக்டர் பதில்:  “கார சாரமான உணவுப் பொருட்களை சாப்பி டக் கூடாது என்று எந்த டாக் டரும் சொல்வதில்லை.  இப்ப டிச் சாப்பிடுவதால் நெஞ்செரி ச்சல். மலச்சிக்கல் போன்ற பிர ச்சினைகள் வராமல் இருப்பின் தாராளமாய் சாப்பிடலாம். இந்த உணவுப் பொருட்களில் வாசனை க்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்க ளான மிளகு, சீரகம்,  சோம்பு போன்ற வாசனைப் பொருட்களில் விட்டமின் சி அதிகளவில் இருப்பதால் ஒரு வகையில் ஆரோக்கியமானதே. ஆனால் அதிக காரமும் எண்ணெயும் அசிடிட்டி ஏற்படுத்தும் என்பதால் கூடு மான அளவிற்கு எண்ணெய் மற்றும் கா ரத்தைக் குறைப்பது உத்தமம்.”
கர்ப்பிணியாய் இருக்கும்போது ஹோட் டலில் வாங்கிய உணவு ஒத்துக்கொள் ளாமல் ஃபுட் பாய்சனிங் ஆகக் கூடும்  என்று உணர்ந்ததும் அந்த உணவைத் தூ க்கி குப்பையில் வீசி விட்டேன், கொஞ் சமாய்தான் சாப்பிட்டேன்  வயிற்றுக் குள் போன அந்த உணவால் வயிற்றிலி ருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வருமா?
டாக்டர் பதில்:  “ஃபுட் பாய்ச னிங் வயிற்றிலிருக்கும் குழ ந்தையை விட சாப்பிட்ட உங்களுக்குத்தான் அதிக பா திப்பை ஏற்படுத்தும். தொட ர்ந்த வயிற்றுப் போக்கோ, வாந்தியோ இருந்து உங்கள து உடலில் இருந்து அதிகள வில் நீர் வெளியேறி டி ஹை ட்ரேஷன் ஆக வாய்ப்பிருப் பதால் நிறைய தண்ணீர், பழச்சாறுகள் அருந்து ங்கள், இப்படி யான சூழலில் எதற்கும் உங்களது மகப்பேறு மருத்துவரை அணுகி உட னடியாக ஆலோசனை பெறுவது நல்லது.”
கர்ப்ப காலத்தில் ப்ளட் சுகரில் இன்சுலின் அளவு அல்லது உப்பின்அளவு திடீரென்று கூடுவது ஏன் ?
டாக்டர் பதில்:  “சிலருக்கு ஒபி சிட்டி காரணமாக இப்படி நிகழ லாம், சிலருக்கு மரபியல் கார ணங்களால் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு கூடலாம் அல் லது குறையலாம். அப்பாவு க்கோ, தாத்தாவுக்கோ சர்க்க ரைச் சத்தோ, உப்புச்சத்தோ இருந்து அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந் தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. கருவில் இருக்கும் குழந்தைக்குப் பரவும்போதுதான் குறைப் பிரசவம், அல்லது கருப்பையில் குழ ந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் இருக்கும் உப்பின் அள வு அதி கரிக்கும்போது கு றைப்பிரசவம் ஏற் பட வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்வதை மருத் துவ மொழியில் இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன் என்பார் கள். மேலும் துரதிருஷ்டவசமாக கருவிலேயே உப்பின் அளவு அதி கரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ரா யூட் டரின் டெத்என்பார்கள். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளி களில் தொடர்ந்து செக் -அப் செ ல்ல தயங்கக்கூடாது. வயிற்றில் இருக்கும் குழந்தை யின் நலனுக்காக அம்மா எப்போதும் தான் சாப்பிடும் உணவுப் பொ ருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவி ர்க்காமல் இரு ப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது.

No comments: