கீழ்கண்ட மூலிகைகளை குறிப்பிட்ட படி சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட நோய்கள் குறைந்து உடல் நலம் பெறும்.
தேவையான பொருள்கள்:
- சுக்கு.
- வசம்பு.
- திப்பிலி.
- மிளகு.
- பெருங்காயம்.
- கடுக்காய் தோல்.
- அதிவிடயம்.
- இந்துப்பு.
செய்முறை:
- சுக்கை தோல் நீக்கி இடித்து சலித்து கொள்ளவும்.
- வசம்பு, திப்பிலி, மிளகு,பெருங்காயம் ஆகியவற்றை இடித்து சலித்து கொள்ளவும்.
- கடுக்காய் தோல், அதிவிடயம் இரண்டையும் நன்கு உலர்த்தி இடித்த சலித்து வைத்து கொள்ளவும்.
சலித்து வைத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை இடித்து அதனுடன் சிறிது இந்துப்பை பொடித்து போட்டு நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
- இந்த சூரணத்தை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வந்தால் குறிப்பிட்ட நோய்கள் குறைந்து உடல் நலம் பெறும்.
தீரும் நோய்கள்:
- இந்த சூரணத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, மூச்சு திணறல், பதற்றம், சோர்வு, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம், காய்ச்சல் மற்றும் காய்ச்சலுக்கு பிறகு ஏற்படும் உடல் பலக்குறைவு ஆகியவை குறையும்.
No comments:
Post a Comment