கீழ்கண்ட மூலிகைகளை குறிப்பிட்ட படி சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட நோய்கள் குறைந்து உடல் நலம் பெறும்.
- அதிமதுரம்
- வால் மிளகு
- ஜாதிபத்திரி
தேவையான பொருள்கள்:
- அதிமதுரம் = 5 கிராம்
- சுக்கு = 5 கிராம்
- மிளகு = 5 கிராம்
- வால் மிளகு = 5 கிராம்
- திப்பிலி = 5 கிராம்
- ஜாதிக்காய் = 5 கிராம்
- ஜாதிபத்திரி = 5 கிராம்
- ஏலக்காய் = 5 கிராம்
- சீரகம் = 5 கிராம்
- கிராம்பு = 5 கிராம்
- கற்கண்டு = 500 கிராம்
- நெய் = 150 மி.லி
- பசும்பால் = 500 மி.லி.
- தேன் = 150 மி.லி
செய்முறை:
- சுக்கை தோல் நீக்கி இளம் வறுவலாக வறுத்து இடித்து சலித்து வைத்து கொள்ளவும். அதிமதுரம், மிளகு, வால் மிளகு, திப்பிலி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலக்காய், சீரகம் மற்றும் கிராம்புஆகியவற்றை தனித்தனியாக இளம் வறுவலாக வறுத்து இடித்து சலித்து வைத்து கொள்ளவும்.
- கற்கண்டை பசும்பாலில் போட்டு காய்ச்சி பாகு செய்து அதில் சலித்து வைத்த சூரணத்தை போட்டு நன்றாக கிளறி விட்டு நெய் ஊற்றி மீண்டும் இலேகிய பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறி இறக்கி தேன் கலந்து நன்கு கிளறி விட்டு பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
- இந்த இலேகியத்தை சிறிய உருண்டைகளாக எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் குறிப்பிட்ட நோய்கள் குறையும்.
தீரும் நோய்கள்:
- இந்த இலேகியத்தை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும். வயிற்று கோளாறுகள் குறிப்பாக வயிற்று மந்தம், அஜீரணம் ஆகியவை குறையும்.
No comments:
Post a Comment