Friday, June 29, 2012


Android system தெரிந்து கொள்வோமா?




அண்ட்ராய்டு போன்றஸ்மார்ட்போன்கள் மற்றும் மாத்திரைகணினிகள் மொபைல் சாதனங்கள் ஒருஇயக்க அமைப்பு உள்ளது. இது கூகிள்தலைமையிலான ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ்உருவாக்கப்பட்டது. [7] [8]

Google [9] நவம்பர் 5 இல் அண்ட்ராய்டின்விநியோகம் வெளிக்கொணரப்பட்டது,2007 ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் ஸ்தாபக, 84 வன்பொருள்ஒரு கூட்டமைப்பு, மென்பொருள் உடன்அறிவிக்கப்பட்டது. 2005 ல்மென்பொருள், அண்ட்ராய்டு இன்க்,ஆரம்ப டெவெலபர் வாங்கப்பட்டது,மற்றும் தொலைத்தொடர்புநிறுவனங்கள் மொபைல் சாதனங்கள்திறந்த தரத்தை மேம்படுத்துவதில்அர்ப்பணித்து. [10] [11] [12] [13] கூகிள்,அப்பாச்சி உரிமத்தின் கீழ் ஒரு இலவசமென்பொருள் உரிமம் அண்ட்ராய்டுகுறியீட்டை மிக வெளியிடப்பட்டது. [14]அண்ட்ராய்டு திறந்த மூல செயல்திட்டம் (AOSP ) அண்ட்ராய்டின்பராமரிப்பு மற்றும் மேலும் வளர்ச்சிசமரசம் காண முயன்று வருகிறது. [15]
அண்ட்ராய்டு மிடில்வேர், நூலகங்கள்மற்றும் சி மற்றும் அப்பாச்சி ஹார்மெனி அடிப்படையில்ஜாவா-இணக்கமான நூலகங்கள்உள்ளடக்கிய ஒரு பயன்பாட்டு கட்டமைப்பை இயங்கும் பயன்பாட்டுமென்பொருள் எழுதப்பட்ட கள் உடன்,லினக்ஸ் கர்னல் அடிப்படையில் ஒருகர்னல் கொண்டிருக்கிறது.அண்ட்ராய்டு வழக்கமாக ஜாவாபைட்குறியீட்டை இருந்து மொழிபெயர்க்கப்பட்டது இது டால்விக்பைட்குறியீட்டை, ரன் மட்டும்-ல் நேரதொகுப்பு உடன் டால்விக் மெய்நிகர் இயந்திரம் பயன்படுத்துகிறது. [16]ஆண்ட்ராய்ட் சாதனங்களின்செயல்பாடு நீட்டிக்க பயன்பாடுகள்("பயன்பாடுகள்") எழுத டெவலப்பர்கள்ஒரு பெரிய சமூக கொண்டிருக்கிறது .ஜாவா ஒரு தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பை முதன்மையாக எழுத. [17]அண்ட்ராய்டின் வாழ்க்கை 500,000பயன்பாடுகள் ஒரு மொத்த இருந்து அண்ட்ராய்டுக்கான கிடைக்க ஏறத்தாழ300,000 பயன்பாடுகள், தற்போதுஉள்ளன. [18] [19] [20] ஆப்ஸ் மூன்றாவதுஇருந்து பதிவிறக்கம் செய்யலாம் கட்சிதளங்கள் அல்லது அண்ட்ராய்டு சந்தைபோன்ற ஆன்லைன் கடைகள் மூலம்,பயன்பாட்டு ஸ்டோரில் கூகிள்நடத்தப்படும்.
அண்ட்ராய்டு Canalys முடிவு Q4 2010 இல்உலகளவில் சிறந்த விற்பனையானஸ்மார்ட்போன் களமாக
பட்டியலிடப்பட்டுள்ளது.

வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்

எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது1. ஏற்கனவே3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது. 4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.
அதைப் பார்க்கும் முன்னர் எப்படி அவை நம் கம்ப்யூட்டரில் தொற்றிக் கொள்வதனைத் தடுக்கலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால் வைத்தியம் செய்வதைக் காட்டிலும் தடுப்பு வழிகள் அதிக பாதுகாப்பானது அல்லவா!
1. உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸிற்கு எதிரான antivirus program வைத்திருந்தால் (Norton, McAfee, AVG, போன்றவை) உங்கள் பைல்களை ஸ்கேன் செய்வதற்கு முன் அதனை அப்டேட் செய்திடுங்கள். மேலும் பணம் செலுத்தி வாங்கியிருந்தால் அதற்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணத்திற்கான காலம் முடிந்திருந்தால் லேட்டஸ்ட் டாக வந்திருக்கும் வைரஸிற்கான விளக்கம் மற்றும் நீக்கும் புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாது. இவ்வகையில் அப்டேட் செய்யாத ஆண்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு ஸ்கேன் செய்வதில் பயனே இல்லை. ஏனென்றால் லேட்டஸ்ட்டாக வந்த வைரஸ்களை இவை கண்டறியாது.
2. அடுத்து உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கும் முறைகளுக்கு வருவோம். இந்த புரோகிராமின் சிறிய ஐகான் நிச்சயம் உங்கள் சிஸ்டம் ட்ரேயின் வலது ஓரத்தில் மற்ற ஐகான்களுடன் இடம் பெற்றிருக்கும். பின்புலத்தில் இது இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் இது. இதனை இருமுறை கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இந்த ஐகான் இங்கு இல்லை என்றால் மற்ற புரோகிராம்களைப் பெறுவது போல Start மற்றும் All Programs சென்று இதனைப் பெறலாம்.
3. இப்போது உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் main page அல்லது control center கிடைக்கும். இங்கு ஆண்டி வைரஸ் புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குக் கிடைக்கும். முழுமையாகப் பார்த்து கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்வதற்கான டேப் அல்லது பட்டனில் கிளிக் செய்து அப்போது கிடைக்கும் விண்டோவில் எவ்வகை ஸ்கேன் மற்றும் எந்த பைல்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் ஸ்கேன் செய்யப்படத் தொடங்கும். இதற்கு Scan டேப் கிளிக் செய்தவுடன் எந்த பைல்கள் அல்லது டிரைவ் எனத் தேர்ந்தெடுக்க ஒரு விண்டோ கிடைக்கும். முழுமையாகக் கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்திட Scan Computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அனைத்து பைல்களும் டிரைவ் வரிசைப்படி ஸ்கேன் செய்யப்படும். இது ஒரு விண்டோவில் காட்டப் படும். அந்த ரிப்போர்ட் விண்டோவில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட் டால் அது அழிக்கபட்டதா? வைரஸ் பாதித்த பைல் குணப்படுத்தப்பட்டதா? வைரஸ் பாதுகாப்பான இடத்தில் (quarantine) வைக் கப்பட்டதா? என்ற தகவல் உங்களுக்குக் கிடைக்கும். இருக்கிற வேலையில் பறக்கிற நேரத்தில் இந்த ஸ்கேன் செய்வதற்கு மறந்து போகிறது என்று நினைக்கிறவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வேலையை எளிதாக்கிட ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் வழி தருகின்றன. தானாக ஸ்கேன் (Automatic Scan) பணி நடைபெற செட் செய்திடலாம்.
1. ஆண்டி வைரஸ் புரோகிராமைத் திறந்திடுங்கள்.
2. கிடைக்கும் விண்டோ மூலம் நீங்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட வேண்டிய டிரைவ் மற்றும் பைல்களைத் தேர்ந்தெடுங்கள்.
3. Tools மெனு செல்லுங்கள். அதில் Scheduler (இந்த சொற்கள் உங்கள் புரோகிராமிற்கு ஏற்றபடி மாறி இருக்கலாம்) என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். பின் Schedule Scan என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.
4. New என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் விண்டோவில் சிலவற்றை நீங்கள் குறிப்பிட்டுத் தர வேண்டியதிருக்கும். முதலாவதாக ஸ்கேன் செய்யப்பட வேண்டியது எவை? இதனை சில புரோகிராம்கள் Event Type எனக் குறிப்பிட்டிருக்கும். அடுத்து எந்த நேரத்தில் மேற்கொள்ள என்பதற்கு When To Do என்ற பிரிவில் அமைக்கலாம். How Often என்பதன் மூலம் வாரம் ஒருமுறையா, தினந்தோறுமா என்று காலவரையறை செய்திடலாம். நேரத்தை வரையறை செய்திட Start Time என்பதனைப் பயன்படுத்தவும். அனைத்தையும் செட் செய்திட்ட பின்னர் Done என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த காலப்படி ஸ்கேன் நடைபெறும்.
அதெல்லாம் சரி, என்னிடம் ஆண்டி வைரஸ் புரோகிராம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படலாம். அப்படியானால் இன்னொரு வழியும் உள்ளது. இதற்கு உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். இணையத்தில் இலவசமாக இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம் உள்ளது. கூகுள் அல்லது யாஹூ சர்ச் இஞ்சின் மூலம் ஒன்றைக் கண்டறிந்து இயக்கினால் பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வைரஸ்கள் அழிக்கப்படும்.
வைரஸ் புகுந்து பிரச்னை செய்கிறதா? எப்போதாவது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து கட்டுப்பாட்டினையும் அதன் பிடிக்குள் எடுத்துக் கொண்டுவிட்டதா? கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்க விடாமல் தடுக்கிறதா? அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? இதற்காக உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனம் அல்லது மற்றவரின் உதவியைக் கேட்டபோது அவர்கள் அதிகமான அளவில் பணம் செலுத்த சொல்கிறார்களா? இதனால் நீங்களே இதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? கீழே அதற்கான சில வழிகள் தரப்படுகின்றன.
1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் அல்லது நெட் வொர்க்கிலிருந்து (அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால்) இணைப்பு நீக்கம் செய்திடவும். இதனால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அடுத்த கம்ப்யூட்டருக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. மேலும் இன்டர்நெட் மூலமாக இமெயில் கடிதங்களில் ஒட்டிக் கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. உங்கள் இமெயில் அட்ரஸ் புக்கிலுள்ள ஒவ்வொரு முகவரிக்கும் வைரஸ் அனுப்பப்படுவதும் தடுக்கப்படுகிறது. இணைப்பை நீக்க கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க் கேபிளை நீக்கினாலே போதும்.
2. அடுத்து கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான பைல்கள், அல்லது அனைத்து பைல்களையும் வைரஸ் பாதிக்காத ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பேக்கப் காப்பி எடுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) பயன் பாட்டினைக் கவனிக்க வேண்டும். இதனை அவ்வப்போது இயக்கி சில System Restore புள்ளிகளை அமைத்திருந்தால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் நாளில் அந்த நாளுக்குக் கம்ப்யூட்டரை அமைக் கும்படி செய்திடலாம். இதனால் வைரஸ் எந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதன் மூலம் வந்ததோ அது நீக்கப்படும். நீங்கள் இந்த சிஸ்டம் ரெஸ்டோர் புள்ளிகளை அமைக்க Start, Control Panel செல்லுங்கள். (உங்கள் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்). அடுத்து Backup and Restore Center என்ற லிங்க்கில் கிளிக் செய்திடுங்கள்.
அடுத்து பக்கவாட்டில் கொடுக்கப் பட்டிருக்கும் பாரில் “Repair Windows Using System Restore” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். பின் அதில் வரிசையாகத் தரப்படும் குறிப்புகளைப் பின்பற்றினால் ரெஸ்டோர் பாய்ண்ட் களை அமைக்கலாம். ஓகே, இனி வைரஸ் பிரச்னைக்கு வருவோம். வைரஸ் எந்த பைலில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும் என்றால் அதை அழித்துவிட்டு பின் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அதனை நீக்கிவிடலாம். வைரஸ் எங்குள்ளது என்று அறிய முடிய வில்லை என்றால் இன்டர்நெட் இணைப்பில் Trend Micro’s HouseCall Antivirus Scan என்ற புரோகிராமினைப் பயன்படுத்தி வைரஸ் எங்கிருக்கிறது என்று அறியலாம்.
இந்த புரோகிராமை http://housecalltrendmicro.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் இந்த ஸ்கேனை அறியாது. எனவே முழுமையாக கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடலாம். பெரும்பாலும் பலர் நீக்க முடியாதபடி வைரஸ் வந்துவிட்டால் சி டிரைவினை பார்மட் செய்திடும் வேலையையே மேற்கொள்கின்றனர். இது சரியான வேலை என்றாலும் எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பார்மட் செய்த பின்னர் பழைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும்வேலை எல்லாம் நம்மைக் கொல்லாமல் கொல்லும் செயல்களாக மாறும். எனவே மேலே கூறப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டுவிட்டு

கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது? நிச்சயம் நான் வந்துவிட்டேன் என்று இப்போதெல்லாம் வைரஸ் பைல் அறிவிப்பு வருவதில்லை.


ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது

 என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம்.

 வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். 

அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்

2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்

3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.

4. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.


5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா? வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.

7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள்.

 இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.

முதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்துவிடுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து






அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்


அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.



அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து



அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.



இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.





இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்
அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும். 
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.





சரி.......... இனிமேல் இப்படிப்பட்ட பிரட்ச்சனைகள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் நீங்கள் தான் மாஸ்டர்......... 

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?


































































































































































































































































































































































































































































































முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.


கூடுதல் விபரங்களுக்கு என் ஈமெயிலை தொடர்புகொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரில் பயன்படும் Plug-ins என்றால் என்ன ? இதன் பயன்கள் என்ன ?

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளங்களுக்கு வரும் அதிகமான நண்பர்கள் கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது.  அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும்.

இனி இந்த Plug-ins என்பது கம்ப்யூட்டரில் எப்படி நமக்கு பயன்படுகிறது என்று பார்ப்போம். கம்ப்யூட்டரில் ஒரு மென்பொருள் ( Software ) இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மென்பொருள் நம் கைக்கு கிடைந்த பிறகு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனம் அதற்கு கூடுதலான ஒரு சக்தியை கொடுக்க நினைத்தால் அதை எப்படி கொடுப்பது. அதனை Plug-in என்ற பெயரில்தான் கொடுக்க முடியும்.  அந்த Plug-in ஐ அவர்கள் தங்கள் தளத்தில் இணைத்து வைத்திருப்பார்கள் அதனை நாம் டவுண்லோடு செய்து நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டால் நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து வைத்துள்ள அந்த நிறுவனத்தின் மென்பொருளோடு அது இணைந்துகொள்ளும். பிறகு நாம் அந்த மென்பொருளை ஓப்பன் செய்து பார்த்தால் நாம் Plug-in முறையில் சேர்ந்த அந்த கூடுதல் ஆப்சன் அங்கு வந்திருக்கும். 

இந்த Plug-ins கள் பல முக்கிய மென்பொருள்களுக்கு அவசியமான தேவையான ஒன்றாக இன்று மாறி இருக்கிறது.  உலகப்புகழ் பெற்ற சில மென்பொருள்களுக்கு அந்த மென்பொருளை உருவாக்கிய நிறுவனங்கள் தயாரிக்கும் Plug-ins கள் போக கூடுதலாக வேறு சில நிறுவனங்களும் இதற்கு பொருத்தமான Plug-in களை உருவாக்கி வியாபாரம் செய்கிறது. 



உதாரணத்திற்கு Adobe Photoshop என்ற உலகப்புகழ் பெற்ற போட்டோ டிசைனிங் செய்யும் மென்பொருளுக்கு அதற்கு பயன்படும் கூடுதல் சக்தியை கொடுக்கும் Photoshop Actions, Photoshop Gradients, Photoshop Styles மற்றும் Photoshop Filters போன்றவைகள் Plug-ins களாக உருவாக்கி வெளியிடுகிறது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் புதுப்புது வித்தியாசமான டிசைன்களை உருவாக்க முடியும். இதுபோன்ற போட்டோசாப் Plug-ins களை இன்று மற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கும் வித்தியாசமாக உருவாக்கி வெளியிடுகிறது.

இந்த Plug-ins கள் இரண்டு வகை உண்டு. ஒரு வகை Executive Files போன்று இருக்கும். இந்த Executive File ஐ நீங்கள் டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால் போதும். இன்ஸ்டால் ஆன உடன் அது தானாக அதற்கு உரிய மென்பொருளோடு சேர்ந்துகொள்ளும். வேறு சில Plug-in கள் உள்ளது. உதாரணத்திற்கு Photoshop Actions Plug-ins இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ய முடியாது. இந்த Plug-in களை போல்டரோடு காப்பி செய்து அப்படியே C டிரைவில் உள்ள போட்டோசாப் போல்டரில் பேஸ்ட் செய்தால் போதும். அதனை நாம் பயன்படுத்த முடியும்.

அடுத்து மற்ற மென்பொருள்களின் Plug-ins களை பற்றி பார்ப்போம்.

Internet Browser ல் முதல் இடத்தை பிடித்து அனைவரின் விருப்பத்தையும் பெற்ற Mozilla Fire Fox என்ற இண்டெர்நெட் இயங்கு தளம் தமிழர்களால் நெருப்பு நரி உலவி என்று அழைக்கப்படும் இந்த FireFox மற்ற Internet Browser களை விட அதிக Plug-ins களை உள் அடக்கி உள்ளது. இதற்கு உரிய Plug-ins களை மூன்றாம் தர ( Third Party ) நிறுவனங்களும் போட்டி போட்டு தயாரித்து வெளியிடுகிறது.

உதாரணத்திற்கு இந்த Fire Fox ல் நீங்கள் அதன் மேலே Tools ல் உள்ள Add-on என்பதை கிளிக் செய்துவிட்டு இங்கு கீழே காண்பதுபோல் அதன் Search Box ல் PDF என டைப் செய்தால் PDF சம்பந்தமான PDF Editor, PDF Viewer, Save to PDF, Web to PDF போன்ற Plug-in கள் உங்களுக்கு கிடைக்கும் இதனை அதன் அருகில் உள்ள Install பட்டன்கள் மூலம் இன்ஸ்டால் செய்துகொண்டால் நீங்கள் இந்த Fire Fox மூலமாகவே PDF சம்பந்தமான அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு நீங்கள் திறந்து வைத்திருக்கும் Web Page ஐ PDF பைலாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு இந்த Fire Fox Plug-in உங்களுக்கு உதவும். 



 இதுபோல் Adobe After Effect, Adobe Premier pro, Adobe Illustrator, Adobe PDF Reader, VLC Player, Coral Draw, Microsoft Office, Google Map போன்ற அதிக பிரபலமான மென்பொருள்களுக்கு Plugins கள் எப்பொழுதும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக்கொண்டால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை பற்றி நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

இந்த பாடம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். அது எனது அடுத்த பதிவுக்கு உற்ச்சாகத்தை கொடுக்கும். 

Saturday, June 23, 2012


குடும்ப கட்டுப்பாடு செய்தவுடன் உடல் குண்டாவது ஏன்?

Psychosocial Risk Factors Obesity Among Women
குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களில் பெரும்பாலோனோர் குண்டாகிவிடுகின்றனர். இதற்கு பெண்கள் மனரீதியாக பாதிப்பிற்குள்ளாவதும், மருந்து மாத்திரைகளும்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கின்றனர் மரு‌‌த்துவ‌ர்கள்
மரு‌‌த்துவ‌ம்
குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன்வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.
ஹார்மோன் சுரப்பில் மாற்றம்
குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது. பெரும்பாலான பெண்கள் லேசான மனஅழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
குடு‌ம்ப‌ப் பெ‌ண்க‌ள் பலரு‌ம், குழ‌ந்தையு‌ம், கணவரு‌ம் ‌மீத‌ம் வை‌த்த உணவையு‌ம், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பது‌ம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது‌ம், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இய‌ந்‌திர‌ங்க‌ள் இரு‌ப்பது‌ம், டிவி பார்த்துக் கொண்டு நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌பிடுவது‌ம், ம‌திய நேர‌த்‌தி‌ல் கு‌ட்டி‌த் தூ‌க்க‌ம் எ‌ன்று சொ‌ல்‌லி 2 அ‌ல்லது 3 ம‌ணி நேர‌ங்க‌ள் தூ‌ங்குவது‌ம் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.
நா‌ம் சா‌ப்‌‌பிடு‌ம் கொழு‌ப்பை‌ உட‌லி‌ல் சேராம‌ல் தடு‌ப்பது ஈ‌ஸ்‌ட்ரோஜ‌‌ன் ஹா‌ர்‌மோ‌ன். குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு இந்த ஹார்மோன் ச‌ரியாக சுர‌க்காம‌ல் போவதை‌க் கவன‌த்‌தி‌ல் கொ‌ண்டு, அத‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்த அ‌திக‌ப்படியான கொழு‌ப்பு உணவுகளை த‌வி‌ர்‌ப்பது உட‌ல் எடையை பராம‌ரி‌க்க உதவு‌ம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பசியை தூண்டும் புதினா

Medicinal Values Mint Aid0128



நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது.

புதினாவில் உள்ள சத்துக்கள்:

புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவில் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.

வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்:

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது

புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும்.

புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது.

புதினா தேநீர்:

புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.

சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதினாக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.

புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.

Thursday, June 21, 2012


அதிகச் செலவு இழுக்கும் விண்டோஸ் எக்ஸ்பி

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை, மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது. எச்சரிக்கையாக வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, ஏன் மைக்ரோசாப்ட் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்று நாம் எண்ணலாம். இதற்குக் காரணம், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துபவருக்கு சப்போர்ட் தருவதற்கான செலவு தொகையே ஆகும். விண்டோஸ் 7 சிஸ்டம் பராமரிப்பிற்கான செலவினைக் காட்டிலும், எக்ஸ்பி சிஸ்டத்தினை நிர்வகிக்க, பராமரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கூடுதலாக ஐந்து மடங்கு செலவாகிறது. இதனாலேயே, மைக்ரோசாப்ட் இந்த முடிவினை எடுத்துள்ளது. பல ஆண்டு களாக இதனைச் சொல்லி வந்தாலும், இந்த ஆண்டில் தான் அறிவிப்பினை எச்சரிக்கை கலந்த சொற்களில் வெளியிட்டது மைக்ரோசாப்ட்.
இது குறித்து வெளியாகியுள்ள மைக்ரோசாப்ட் வலைமனைச் செய்தியில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு நிறுவனங்கள் மாறினால், அதற்கான முதலீடு சார்ந்து, லாபத்தினையும் கூடுதலாகப் பெறுவார்கள்; செலவு குறையும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும் அண்மையில் எடுத்த ஆய்வின் படி, ஏப்ரல் 2014க்குப் பின்னரும் கூட, நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் 11% பேர், தொடர்ந்து எக்ஸ்பியினைப் பயன்படுத்துவார்கள் என்று அறியப்பட்டுள்ளது. எனவே தான் மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் நிலைப் பாட்டினை அடிக்கடி எச்சரிக்கையாக வெளியிட்டு வருகிறது.
எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், தங்கள் கம்ப்யூட்டரினைப் பராமரிக்க 11.3 மணி நேரம் செலவழிக்கின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு 2.3 மணி நேரம் போதுமானது. இதனால் தகவல் தொழில் நுட்ப வல்லுநரின் நேரம், அதற்கான பணம் வீணாகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்த, ஹார்ட்வேர் பிரிவில் ஏற்படுத்தப்படும் கூடுதல் மூலதனத்தினை, ஒரு நிறுவனம் ஓராண்டில் பெற்றுவிடலாம் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் கூடுதல் லாபம் 137% ஆக இருக்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வெளியிட உள்ளது. எனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், உற்பத்தி ஒப்பந்தம் மேற்கொண்ட கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே வெளியிடுவார்கள். அப்படியானால் விண்டோஸ் 7 சிஸ்டம், அதன் பின்னர் கிடைக்காதா என்ற சந்தேகம் பலருக்கு வரலாம்.
விண்டோஸ் 8 வெளியான பின்னரும், இரண்டு ஆண்டுகளுக்கு, விருப்பமுள்ளவர்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட மைக்ரோசாப்ட் அனுமதி அளித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இப்போது 46.1% கம்ப்யூட்டர்களில் இயங்கி வருகிறது. இது மறைந்து வரும் வேகத்தினைக் கணக்கிட்டால், ஏப்ரல் 2014க்குப் பின்னரும், எக்ஸ்பி 17.6% கம்ப்யூட்டர்களில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாற யோசிக்கிறீர்களா? அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், அதற்கே மாறிக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறீர்களா?

இளமையை தக்கவைத்து உடலை பொலிவாக்கும் உறவு



தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பிரகாசமான முகம்
உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலுறவினால் மனஉளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம்.
உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் அளவு சீராக கிடைக்கிறதாம். இதனால் உடல் பொலிவாகுமாம். உதட்டில் அடிக்கடி முத்தமிடுவதால் எனாமலுக்கு சக்தி கிடைக்கிறதாம். இதனால் பற்கள் பளபளப்பாகுமாம்.
அழகாய் பூக்குதே
உறவின் போதும் வெளியேறும் வியர்வையினால் மேனி பளபளப்பாக இருக்குமாம். பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம்.
கட்டான உடல்
அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள சதைகள் கரைந்து கட்டான உடலமைப்பு ஏற்படுகிறதாம். நீச்சல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கிடைக்கின்ற உடல் கட்டமைப்பினை விட தாம்பத்ய உறவின் போது கிடைக்கும் உடல் அழகு 20 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம்.
ரத்த அணுக்கள் எண்ணிக்கை
தினமும் உறவு கொள்ளும் தம்பதியருக்கு ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உடலுறவினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.
வயதான தம்பதியர் உறவு கொள்வதன் மூலம் மூட்டு வலி, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்குமாம்.
மூச்சடைப்பு ஏற்படாது
அடிக்கடி உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லையாம். உறவின் போது அதிகமாக மூச்சு வாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் மூச்சடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லையாம். ஆண்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லையாம்.
சிறந்த எக்ஸர்சைஸ்
தாம்பத்ய உறவினால் உடல் சமநிலை பெறுகிறதாம் இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கிறதாம். இதனால்தான் செக்ஸ் ஒரு சுகமான உடற்பயிற்சி என்று கூறுகின்றனர்.
இதயநோய் தீரும்
வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உறவு கொள்ளும் தம்பதியருக்கு இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுகிறதாம். உறவின் போது இதயமானது 80 முதல் 150 தடவைவரை துடிக்கிறதாம். இதனால் இதயத்தை சுற்றி உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறதாம்.
முக்கியமான விசயம் குறித்த முடிவு எடுக்கும் முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடமும், மன உறுதியும் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வாழ்க்கைத்துணைக்கு அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுங்களேன் !




வாழ்க்கையில் அவ்வப்போது இன்பகரமான நிகழ்வுகள் இருந்தால்தான் உற்சாகம் நீடிக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். வாழ்க்கைத்துணையிடம் ஏதாவது ஒரு விசயத்திற்கு சண்டை போட்டிருக்கலாம். சில விசயங்களில் கோபித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் நம் துணையை மகிழ்விக்க சின்ன சின்ன சர்ப்ரைஸ் சந்தோசங்களை தருவது அவசியம். அதற்கான ஆலோசனைகளை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
ஜோடியாக ஒரு போட்டோ
நீங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகான ஒரு போட்டோவை உங்கள் டெஸ்க்டாப்பில் வால்பேப்பராக போடுங்களேன். உங்கள் துணைவி கம்யூட்டரை ஆன் செய்தவுடன் அந்த போட்டோவை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போவார்.இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகான போட்டோக்களை சேகரித்து சிடி யாக மாற்றித்தரலாம். அதேபோல் உங்கள் துணைவிக்கு பிடித்த ரொமான்ஸ் பாடல்களை பதிவு செய்து பரிசளிக்கலாம்.
பால் நிலவொளியில் பரிசு
பவுர்ணமி தினத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அழகான கடற்கரைக்கு துணைவியை அவுட்டிங் அழைத்துச் செல்லுங்கள். நிலவொளியில் உங்கள் துணைவியின் கண்கள் இன்ப அதிர்ச்சியில் மின்னுவதை கண்டு ரசியுங்களேன். அன்றைய தினம் எந்த தொந்தரவும் கூடாது. செல்போன், புத்தகம், டிவி என எந்த தொந்தரவும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் சந்தோச தருணங்களை அனுபவியுங்களேன்.
எதிர்பாராத விருந்து
இது கணவ‌ன், மனை‌வி‌ இருவரு‌க்குமே பொரு‌ந்து‌ம் ‌திடீரென ஒரு நா‌ள் மாலை‌யி‌ல் தொலைபே‌சி‌யி‌ல் அழையு‌ங்க‌ள். அவ‌ர் ‌‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, அலுவலக‌த்‌தி‌ல் இரு‌ந்தாலு‌ம் ச‌ரி… உடனே ‌கிள‌ம்‌பி ஒரு குறிப்பிட்ட இட‌த்‌தி‌ற்கு வர‌ச் சொ‌ல்லு‌ங்க‌ள்.
அவ‌ர் வ‌ந்தது‌ம், அ‌ங்‌கிரு‌க்கு‌ம் ஓ‌ட்ட‌லி‌ல் மு‌ன்ப‌திவு ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்ட டே‌பிளு‌க்கு அவரை அழை‌த்து‌ச் செ‌ன்று அவ‌ர் ‌விரு‌ம்‌பிய உணவுகளை வா‌ங்‌கி‌க் கொடு‌க்கலா‌ம். இதையே கொ‌ஞ்சம் மாறுதலாக ஒரு ‌‌திரையர‌ங்கு‌க்கு அழை‌த்து‌ச் செ‌ல்லலா‌ம் அ‌ல்லது மனதிற்குப் பிடித்த கோ‌யி‌லு‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்றுஇறைவனை த‌ரி‌சி‌க்க வை‌க்கலா‌ம்.
இந்த இன்ப அதிர்ச்சியில் உங்களவர் குளிர்ந்து போவார். வார‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்க‌ள் அவ‌ர்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த பூ‌க்களை வா‌ங்‌‌கி‌ சர்ப்ரைசாக டிபன்பாக்ஸில் வைத்துச் செ‌ல்லலா‌மே. இதனால் டிபன் பாக்சினை திறக்கும் போது பூக்களை கண்டவுடன் உங்கள் துணைவியின் முகத்தில் புன்னகை பூக்குமே.
மூன்று மாத‌த்‌தி‌ற்கு ஒரு முறை இப்படி செ‌ய்தாலே போது‌ம்… உங்கள் இல்லற வா‌ழ்‌க்கையில் வசந்தம் வீசும். ‌திருமணமான பு‌தி‌தி‌ல் எ‌ன்றா‌ல் இது சா‌த்‌‌திய‌ப்படு‌ம். ஆனா‌ல், குழ‌ந்தை இரு‌க்கு‌ம் ‌வீடுக‌ளி‌ல் இது கொ‌ஞ்ச‌ம் ‌சி‌க்கலான கா‌ரிய‌ம்தா‌ன். ஆனா‌ல் மன‌ம் இரு‌ந்தா‌ல் மா‌ர்க்க‌ம் உ‌ண்டு எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க 

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.
காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.
குடும்பத்திற்கான நாள்
இப்பொழுதெல்லாம் 5 நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகிவிட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதில் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம். துணையுடன் அமர்ந்து பேசவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.
நோ மிஸ்டு கால்
என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும். இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.
இன்ப அதிர்ச்சி
வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என்றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலேயே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சாகத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைகளை அயர்ன் செய்து வைப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சின்ன உதவிகள்தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும்.
அன்பார்ந்த பரிசுப்பொருள்
தங்கம், வைரம் என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை துணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசுப்பொருள். உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ்புக், டுவிட்டரில் உங்களுக்கு கிடைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றிப் படரும்.
சின்ன சின்ன உதவிகள்
வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி. சமையலில் உதவி செய்யும் போது நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எதுவும் இன்றி வாழ்க்கையை உற்சாகமுடன் தொடரலாம்.