Thursday, June 14, 2012

சூரியனுக்கு அருகில் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம்?



சூரியனுக்கு மிக அருகில் சென்று கொண்டு இருந்த மர்மப் பொருள் ஒன்றை கடந்த 24 ஆம் திகதி நாஸா கண்டு பிடித்து உள்ளது. இம்மர்மப் பொருள் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலமாக இருக்க வேண்டும் என்று ஒரு தொகை விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது.
சூரியனுக்கு அருகில் செல்கின்ற எந்தப் பொருளும் பொதுவாக எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் இம்மர்மப் பொருள் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலமாக இருக்கின்ற பட்சத்தில் சூரியனுடைய மிக பயங்கரமான வெப்பத்தை தடுக்கின்ற தொழினுட்பத்தை கொண்டு இருக்க கூடும். இம்மர்மப் பொருள் மிகப் பிரமாண்டமானதாகவும் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் படத்தில் தெரிகின்றது.
இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய உலகத்தை பெரிதும் கலக்கிக் கொண்டு இருக்கின்றன. வேற்றுக் கிரகவாசிகள் குறித்து நம்புபவர்கள் இம்மர்மப் பொருள் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம்தான் என்று அடித்துக் கூறுகின்றனர். இம்மர்மப் பொருளுடன் கை மாதிரியான ஒன்று பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தென்படுகின்றது.


No comments: