Thursday, June 21, 2012


இளமையை தக்கவைத்து உடலை பொலிவாக்கும் உறவு



தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பிரகாசமான முகம்
உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலுறவினால் மனஉளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம்.
உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் அளவு சீராக கிடைக்கிறதாம். இதனால் உடல் பொலிவாகுமாம். உதட்டில் அடிக்கடி முத்தமிடுவதால் எனாமலுக்கு சக்தி கிடைக்கிறதாம். இதனால் பற்கள் பளபளப்பாகுமாம்.
அழகாய் பூக்குதே
உறவின் போதும் வெளியேறும் வியர்வையினால் மேனி பளபளப்பாக இருக்குமாம். பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம்.
கட்டான உடல்
அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள சதைகள் கரைந்து கட்டான உடலமைப்பு ஏற்படுகிறதாம். நீச்சல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கிடைக்கின்ற உடல் கட்டமைப்பினை விட தாம்பத்ய உறவின் போது கிடைக்கும் உடல் அழகு 20 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம்.
ரத்த அணுக்கள் எண்ணிக்கை
தினமும் உறவு கொள்ளும் தம்பதியருக்கு ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உடலுறவினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.
வயதான தம்பதியர் உறவு கொள்வதன் மூலம் மூட்டு வலி, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்குமாம்.
மூச்சடைப்பு ஏற்படாது
அடிக்கடி உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லையாம். உறவின் போது அதிகமாக மூச்சு வாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் மூச்சடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லையாம். ஆண்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லையாம்.
சிறந்த எக்ஸர்சைஸ்
தாம்பத்ய உறவினால் உடல் சமநிலை பெறுகிறதாம் இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கிறதாம். இதனால்தான் செக்ஸ் ஒரு சுகமான உடற்பயிற்சி என்று கூறுகின்றனர்.
இதயநோய் தீரும்
வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உறவு கொள்ளும் தம்பதியருக்கு இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுகிறதாம். உறவின் போது இதயமானது 80 முதல் 150 தடவைவரை துடிக்கிறதாம். இதனால் இதயத்தை சுற்றி உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறதாம்.
முக்கியமான விசயம் குறித்த முடிவு எடுக்கும் முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடமும், மன உறுதியும் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

No comments: