நோக்கியாவின் புத்தம் புதிய பட்ஜெட் மொபைல்கள்!
ஏராளமான ஸ்மார்ட்போன் வெளியீடுகளை பற்றி கேள்விப்படும்
வாடிக்கையாளர்கள், குறைந்த விலை கொண்ட பட்ஜெட் மொபைல் ஏதும் இல்லையே என்று
நினைக்கலாம். இந்த கேள்விக்கு நோக்கியாவிடம் சரியான பதில் உள்ளது.
ஆம்! குறைந்த விலை கொண்ட 2 புதிய மொபைல்களை வெளியிட்டுள்ளது நோக்கியா.
110 மற்றும் 112 என்ற இரண்டு புதிய மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு குறைந்த விலை கொண்ட மொபைல்களும் டியூவல் சிம் தொழில்
நுட்பம் கொண்ட மொபைல்கள். தற்சமயம் நோக்கியா தனது மார்கெட்டை கொஞ்சம்
கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது.
மறுபடியும் முதலிடத்தை பிடிக்க பல புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள், மட்டும் அல்லாமல் பட்ஜெட் விலை மொபைல்களிலும்
நோக்கியாவின் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் இப்போது ஐரோப்பிய நாடுகளில் 110
மற்றும் 112 என்ற இந்த குறைந்த விலை கொண்ட மொபைல்கள் வெளிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இந்த குறைந்த விலை கொண்ட மொபைல்கள் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நோக்கியாவின் இந்த மொபைல்களின் விலை
ரூ.2,418 கொண்டதாக இருக்கும்.
No comments:
Post a Comment