Friday, June 15, 2012


 குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை

குழந்தை பிறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். இந்த சீம்பால் எவ்வளவு முக்கியமேன்றரிய நாம் நம் கிராமத்துப்பக்கம் சென்றால் அறியலாம். இன்றும் நம் கிராமத்துப்பக்கம் பசு கன்று ஈன்றவுடன் கிடைக்கும் சீம்பால் சாது நிறைந்தது என்று பலரும் தேடிச்சென்று வாங்கிச் செல்வதைக் காணலாம். பசுவின் சீம்பால் அதன் கன்றுக்காக கடவுள் அளிப்பது. அது சத்து நிறைந்தது எனின் கடவுள் நம் குழந்தைக்காக நமக்களிக்கும் சீம்பாலும் சத்து நிறைந்ததே. ஆகவே சத்து நிறைந்த நம் குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பாலை நாம் கண்டிப்பாக நம் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

அடுத்து வரும் 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப் பால் போதவில்லை என்று கருதும் சமயத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கேரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நன்கு வேகவைத்து மிக்ஸ்யில் அரைத்து அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி காலை 11 மணியளவில் கொடுக்கலாம். கண்டிப்பாக மாலையில் தர வேண்டாம்.

6 மாதங்களுக்கு பிறகு 11 மணி மற்றும் மலை 3 மணி ஆகிய நேரங்களில் நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகளை ஒரு வேளையும், பழங்களை ஒரு வேளையும் கொடுக்கலாம்.

9வது மாதம் முதல் காலையில் இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை நெய் சேர்த்து கொடுத்துப் பழகலாம்.

10வது மாதம் முதல் காலை டிபன் கொடுப்பதோடு மதியம் கொந்தம் சாதம் குழைத்து பருப்பு, நெய் ஆகியவற்றைக் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும்.

11வது மாதம் முதல் காலை உணவுக்கு முன் கஞ்சி கொடுக்கலாம்.

முதல் முறை:- உடைத்த கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெள்ளம் கலந்து கொடுக்கலாம்.

2வது முறை:- கோதுமை, ராகி, மக்காச்சோளம், உடைத்தகடலை,முந்திரி, கேழ்வரகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அவற்றில் உடைதக்கடலை தவிர்த்து மீதியை வறுத்து எல்லாவற்றையும் அரைத்து மாவு தயாரித்து அதில் நீர் கலந்து கொதிக்க வைத்து கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாம். இதிலும் மேற்சொன்னவாரே குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

மேற்ச சொன்ன இரண்டு முறைகளிலும் பால் கலந்தும் கொடுக்கலாம்.

* குறிப்பு:- கஞ்சியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது வெயில் காலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் கஞ்சி குளிர்ச்சியைத் தரும். இதனால் குளிர்காலத்தில் அறிமுகப்படுத்தும்போது சளி பிடிக்கலாம்.

12வது மாதம் முதல் எல்லாவித உணவையும், காய்கறிகளையும் கொஞ்சம் நன்கு வேகவைத்து அறிமுகப்படுத்தவும்.

குழந்தைக்கு உணவளிக்கும் போது கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

புதிதாக அறிமுகப்படுத்தும்போது ஒன்றுக்கும் மட்ரொன்றிர்க்கும் இடைவெளி தேவை. அப்போது தான் எந்த உணவு குழந்தைக்கு ஒத்துகொள்ளவில்லை என்று நாம் அறிய முடியும். அந்த உணவை தவிர்த்து மட்ட்ரவற்றை கொடுக்க இயலும்.

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது அஜீரணக் கோளாறு ஏற்பட்டாலோ நாம் அறிமுகப்படுத்திய புதிய உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என அறியலாம். மேலும் தரையில் இருந்து ஏதாவது பொருளை வாய்க்குள் போட்டுக்கொண்டாலும் வயிறு உபாதை ஏற்படலாம்.

குழந்தை குறைந்தது 5 முதல் 7 தடவைகள் மலம் கழிக்கணுலாம். அதற்க்கு மேல் மலம் கழித்தால் அருகில் உள்ள மருத்துவரை அகவும்.

மேலும் உடனே நாம் தினமும் அளித்துவரும் உணவை நிறுத்திவிட்டு பார்லி கஞ்சி (அ) நொய் கஞ்சி கொடுக்கவும்.

நொய் கஞ்சி:- சிறிது பச்சரிசி நொய்யை ஒரு அகலப் பாத்திரத்தில் அதிக தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இந்த அதிகத் தண்ணீரை தண்ணீருக்கு பதில் குழந்தைக்கு கொடுத்து வரவும. கஞ்சியை உணவுக்கு பதில் கொடுக்கவும். வயிட்ட்ருபோக்கு ஓரிரு நாட்களில் உடனே சரியாகி விடும்.

இதுவரை நாம் கூறி வந்தவை குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

இனி மன ஆரோக்கியம் (குழந்தையின், அறிவுத்திறன் வளர பெற்றோர் செய்யவேண்டியவைகளைப் பார்ப்போம்.

முக்கியமானதும் நம்மில் பலர் செய்ய தயங்குகிற விஷயம் குழந்தையுடன் உரையாடுவது. நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை பொம்மை அல்ல. அதற்கும் எல்லாம் தெரியும். நாம் பேசும் அனைத்து விஷயங்களையும் குழந்தை கிரகித்துக் கொள்கிறது. ஆகவே குழந்தை பிறந்தது முதல் பெரியவரிடம் உரையாடுவது போல் உரையாடுங்கள்.

எடுத்துக்காட்டாக குழந்தை பால் குடிக்கும் முன் என்னடா செல்லம் பசிக்கிறதா? பால் குடிப்போமா? இப்ப அம்மா பால் தருவேனாம். சமத்தா பால் குடிச்சிட்டு விளையாடுவீங்கலாம். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்திருகிறார்கள். எல்லோரையும் பார்த்து சிரிப்பீர்கலாம். நீங்க சிரிச்சா எல்லோருக்கும் சந்தோஷமாம். என்னடா செல்லம் எல்லாரையும் சந்தொஷப்படுதுவீர்களா? சரி இப்ப பால் குடிப்போமா என்று குழந்தையிடம் உரையாடிக்கொண்டே பால் கொடுக்கலாம்.

இது போல் எபோழுதும் எது செய்தாலும் குழந்தையிடம் நாம் பேசிக் கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறம் அதிகரிப்பதோடு குழந்தைக்கு பேச வேண்டும் என்ற ஆவலை தூண்டி குழந்தை சீக்கிரம்பேச ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு பேசிகொண்டே இருப்பதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே ஒரு அன்யோன்யம் பிறக்கும். இதனால் எதிர்காலத்திலும் எல்லாவற்றையும் உங்களிடம் உங்கள் குழந்தை பகிர்ந்து கொள்ளும். இது போதுமே உங்கள் குழந்தையை உங்கள் விருப்பம் போல் நல்லவர்களாக வளர்க்க.

6 மதங்கல்லுக்குப் பிறகு நீங்கள் பேசுவதோடு உலக அறிவையும் புகட்டுங்கள். இவை எவ்வாறு என்று ஒரு சின்ன எடுத்துக்காட்டின் மூலம் கீழே கூறியுள்ளேன். இவை குழந்தையின் ஆர்வத்தை தூண்டி நுட்ப்ப அறிவை -ஐ அதிகரித்து சீக்கிரம் பேச உதவுவதுடன், குழந்தை நல்ல அறிவாளியாக, கூர்மையான புத்திசாலியாக, ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களாக மாறுவதை நீங்கள் கண் கூடாக காணலாம்.

No comments: