Friday, June 29, 2012


கம்ப்யூட்டரில் பயன்படும் Plug-ins என்றால் என்ன ? இதன் பயன்கள் என்ன ?

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளங்களுக்கு வரும் அதிகமான நண்பர்கள் கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது.  அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும்.

இனி இந்த Plug-ins என்பது கம்ப்யூட்டரில் எப்படி நமக்கு பயன்படுகிறது என்று பார்ப்போம். கம்ப்யூட்டரில் ஒரு மென்பொருள் ( Software ) இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மென்பொருள் நம் கைக்கு கிடைந்த பிறகு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனம் அதற்கு கூடுதலான ஒரு சக்தியை கொடுக்க நினைத்தால் அதை எப்படி கொடுப்பது. அதனை Plug-in என்ற பெயரில்தான் கொடுக்க முடியும்.  அந்த Plug-in ஐ அவர்கள் தங்கள் தளத்தில் இணைத்து வைத்திருப்பார்கள் அதனை நாம் டவுண்லோடு செய்து நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டால் நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து வைத்துள்ள அந்த நிறுவனத்தின் மென்பொருளோடு அது இணைந்துகொள்ளும். பிறகு நாம் அந்த மென்பொருளை ஓப்பன் செய்து பார்த்தால் நாம் Plug-in முறையில் சேர்ந்த அந்த கூடுதல் ஆப்சன் அங்கு வந்திருக்கும். 

இந்த Plug-ins கள் பல முக்கிய மென்பொருள்களுக்கு அவசியமான தேவையான ஒன்றாக இன்று மாறி இருக்கிறது.  உலகப்புகழ் பெற்ற சில மென்பொருள்களுக்கு அந்த மென்பொருளை உருவாக்கிய நிறுவனங்கள் தயாரிக்கும் Plug-ins கள் போக கூடுதலாக வேறு சில நிறுவனங்களும் இதற்கு பொருத்தமான Plug-in களை உருவாக்கி வியாபாரம் செய்கிறது. 



உதாரணத்திற்கு Adobe Photoshop என்ற உலகப்புகழ் பெற்ற போட்டோ டிசைனிங் செய்யும் மென்பொருளுக்கு அதற்கு பயன்படும் கூடுதல் சக்தியை கொடுக்கும் Photoshop Actions, Photoshop Gradients, Photoshop Styles மற்றும் Photoshop Filters போன்றவைகள் Plug-ins களாக உருவாக்கி வெளியிடுகிறது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் புதுப்புது வித்தியாசமான டிசைன்களை உருவாக்க முடியும். இதுபோன்ற போட்டோசாப் Plug-ins களை இன்று மற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கும் வித்தியாசமாக உருவாக்கி வெளியிடுகிறது.

இந்த Plug-ins கள் இரண்டு வகை உண்டு. ஒரு வகை Executive Files போன்று இருக்கும். இந்த Executive File ஐ நீங்கள் டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால் போதும். இன்ஸ்டால் ஆன உடன் அது தானாக அதற்கு உரிய மென்பொருளோடு சேர்ந்துகொள்ளும். வேறு சில Plug-in கள் உள்ளது. உதாரணத்திற்கு Photoshop Actions Plug-ins இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ய முடியாது. இந்த Plug-in களை போல்டரோடு காப்பி செய்து அப்படியே C டிரைவில் உள்ள போட்டோசாப் போல்டரில் பேஸ்ட் செய்தால் போதும். அதனை நாம் பயன்படுத்த முடியும்.

அடுத்து மற்ற மென்பொருள்களின் Plug-ins களை பற்றி பார்ப்போம்.

Internet Browser ல் முதல் இடத்தை பிடித்து அனைவரின் விருப்பத்தையும் பெற்ற Mozilla Fire Fox என்ற இண்டெர்நெட் இயங்கு தளம் தமிழர்களால் நெருப்பு நரி உலவி என்று அழைக்கப்படும் இந்த FireFox மற்ற Internet Browser களை விட அதிக Plug-ins களை உள் அடக்கி உள்ளது. இதற்கு உரிய Plug-ins களை மூன்றாம் தர ( Third Party ) நிறுவனங்களும் போட்டி போட்டு தயாரித்து வெளியிடுகிறது.

உதாரணத்திற்கு இந்த Fire Fox ல் நீங்கள் அதன் மேலே Tools ல் உள்ள Add-on என்பதை கிளிக் செய்துவிட்டு இங்கு கீழே காண்பதுபோல் அதன் Search Box ல் PDF என டைப் செய்தால் PDF சம்பந்தமான PDF Editor, PDF Viewer, Save to PDF, Web to PDF போன்ற Plug-in கள் உங்களுக்கு கிடைக்கும் இதனை அதன் அருகில் உள்ள Install பட்டன்கள் மூலம் இன்ஸ்டால் செய்துகொண்டால் நீங்கள் இந்த Fire Fox மூலமாகவே PDF சம்பந்தமான அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு நீங்கள் திறந்து வைத்திருக்கும் Web Page ஐ PDF பைலாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு இந்த Fire Fox Plug-in உங்களுக்கு உதவும். 



 இதுபோல் Adobe After Effect, Adobe Premier pro, Adobe Illustrator, Adobe PDF Reader, VLC Player, Coral Draw, Microsoft Office, Google Map போன்ற அதிக பிரபலமான மென்பொருள்களுக்கு Plugins கள் எப்பொழுதும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக்கொண்டால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை பற்றி நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

இந்த பாடம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். அது எனது அடுத்த பதிவுக்கு உற்ச்சாகத்தை கொடுக்கும். 

No comments: