Thursday, June 14, 2012

கணினிக்கு அழகிய 500 எழுத்துருக்கள்(Fonts) ஒரே மென்பொருளில் இலவசமாக

கணினிக்கு இயங்குதளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் இந்த எழுத்துருக்கள். கணினியில் எழுத்துருக்கள் இல்லாமல் கணினி இருப்பதால் எந்த பயனும் இல்லை. அதனாலே இயங்கு தளம் நிறுவும் போதே சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்கள் கணினியில் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் டீபால்டாக வரும் எழுத்துருக்கள் மிகவும் குறைவே மற்றும் அதில் போட்டோசாப் டிசைன் போன்றவைகள் செய்ய இந்த வகை பல அழகிய எழுத்துருக்கள் இருந்தால் தான் நாம் வடிவமைக்கும் டிசைன் அழகாக காணப்படும். வேர்ட் தொகுப்பில் ஏதாவது டிசைன் செய்தாலும் விதவிதமான பாண்ட்கள் இருந்தால் அழகாக காணப்படும்.
அழகிய எழுத்துருக்கள் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும்  அவைகளை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்து நம் கணினியில் இணைக்கவேண்டும் ஆனால் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து விட்டால் சுமார் 500 பான்ட் வடிவங்கள் உங்கள் கணினியில் சேர்ந்து விடும். இந்த மென்பொருளில் ஏராளமான அழகிய எழுத்துருக்கள் அடங்கி உள்ளன. 

  • இந்த மென்பொருள் முற்றிலும் இலவச மென்பொருளாகும். 
  • இந்த மென்பொருள் வெறும் 11MB அளவே கொண்டுள்ளது.
  • XP/2003/2008/Vista/Win7 போன்ற இயங்கு தளங்களில் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஒருமுறை இன்ஸ்டால் செய்து விட்டாலே போதும் திரும்பவும் இதை இயக்க வேண்டிய அவசியமில்லை.
  • இந்த JD True Type Fonts மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும்.


   

 

No comments: