ஆன்லைனில் MP3 பைல்களை சுலபமாக வெட்ட - Online free MP3 cutter
ஆடியோ
பைல்கள் பெரும்பாலும் MP3 வடிவிலேயே நம்மிடம் இருக்கும். இந்த வகை
பைல்கள் நம்முடைய மொபைல்களிலும் பெரும்பாலும் வைத்திருப்போம். நம்மிடம்
இருக்கும் MP3 பைல்கள் நீண்டதாக இருக்கும். இதில் குறிப்பிட்ட சிறு பகுதியை
மட்டும் தனியாக வெட்டி நம்முடைய மொபைலுக்கு ரிங்க் டோனாகவோ அல்லது மற்ற
நண்பர்களுடன் பகிர நினைப்போம். இந்த வேலையை செய்ய நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் ஆன்லைனில் இலவசமாக மற்றும் சுலபமாக எப்படி நம்முடைய MP3 பைல்களை வெட்டுவது என பார்ப்போம்.
- இந்த தளம் சென்றவுடன் அங்கு உள்ள Open MP3 என்ற பட்டனை அழுத்தி நீங்கள் வெட்ட வேண்டிய MP3 பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- நீங்கள் தேர்வு செய்த பைல் அப்லோட் ஆகி முடிந்தவுடன் கீழே படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருக்கும் கர்சர்களை முன்னும் பின்னும் நகர்த்தி உங்களுக்கு தேவையான படுதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- சரியான பகுதியை தேர்வு செய்து கொண்டவுடன் அங்கு நீங்கள் தெரு செய்துள்ள பைலின் அளவும் எந்த நேரத்தில் இருந்து எதுவரை தேர்வு செய்து உள்ளீர்கள் என்ற நேர அளவும் வரும்.
- நீங்கள் சரியான இடத்தை தேர்வு செய்ய அதில் உள்ள Play பட்டனை அழுத்தி பாடல் ஒலிக்கும் பொழுது உங்களுக்கான பகுதி வந்ததும் பாடலை pause செய்து உங்கள் கர்சரை அதற்க்கு நேராக நகர்த்தினால் சுலபமாக இருக்கும்.
- முடிவில் சரியான இடத்தை தேர்வு செய்தவுடன் அங்கு உள்ள Cut என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் MP3 பைல் வெட்டி உங்கள் கணினியில் சேமிக்கப்படும்.
இந்த தளத்திற்கு செல்ல - Online Free MP3 Cutter
டுடே லொள்ளு
ங்கொய்யால போனா போகுதுன்னு விட்டா கடைசியா எனக்கேவா சாவுடா மவனே
No comments:
Post a Comment