1 வயது முதல் 2 வயது வரை
குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகு சாப்பாட்டைப் பொறுத்த வரை எந்த
நிர்பந்தமோ கட்டுப்பாடோ கிடையாது. குழந்தைக்கு விருப்பமான விதத்தில் அதிக
அளவு காய்கறிகளும், பழங்களும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெரியவர்களைப் போல 3 வேளை என்றில்லாமல் 5 முதல் 7 வேளை குழந்தைகளுக்கு
உணவளிக்க வேண்டும்.
- பால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை கொடுக்கலாம்
- காய்கறிகள் 2 வேளை
- பழங்கள் 2 வேளை
- உணவு(அரிசி, கோதுமை) முதலியவை 3 வேளை
- கொழுப்பு (நெய், வெண்ணை, தயிர் முதலியவை)1 அல்லது 2 வேளை.
குறைந்தது மேற் சொன்ன அளவாவது குழந்தைக்கு கொடுக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் கலோரி கணக்கில் குழந்தையின் 1கிலோ எடைக்கு 110 கலோரி என்ற விகிதத்தில் கணக்கிட்டுக் கொடுத்தல் நலம்.
மேலும் குழந்தை இந்த வயதில் தான் அனைவரையும் உற்று நோக்கி பல பாடங்களைக்
கற்றுக் கொள்வான். ஆகவே நாம் நல்ல பழக்கவழக்கங்களுடன் நல்லதே பேசி
குழந்தையின் முன் வலம் வந்தால் தான் நம் குழந்தை நல்லவனாக வளருவான்.
குணத்தில் நல்லவனாக, ஆரோக்கியமானவனாக வளர்வதைப் பற்றிப் பார்த்தோம். அவன்
அறிவாளியாக புத்திசாலியாக வளர்வதற்கு பின் வரும் பயிற்சிகளைச் செய்யவும்.
No comments:
Post a Comment